என்னை அடித்து கொடுமை செய்த முகேஷ் : முன்னாள் மனைவி சரிதா

சென்னை நடிகர் முகேஷின் முன்னாள் மனைவி நடிகை சரிதா தன்னை முகேஷ் அடித்து கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு … Read more

எப்ப சார் பதில் தருவீங்க.. பிரதமர் மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதிய முதல்வர் மம்தா

கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு மாநில திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மத்திய பாஜக அரசுகளிடையே அரசியல் சண்டையையும் உருவாக்கியுள்ளது. முதலமைச்சர் மம்தா பேனர்ஜி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக புகார் கூறி வருகிறது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் இரண்டாவது முறையாக கடிதம் Source Link

எங்க வந்து யாருகிட்ட.. மட்ட பாடல் வரிகளை பகிர்ந்த பாடலாசிரியர் விவேக்.. ரைமிங் சூப்பருங்கோ!

சென்னை: நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. விஜய் படங்களின் ரிலீசை அவரது ரசிகர்கள் திருவிழாவாக திரையரங்குகளில் கொண்டாடுவார்கள். அதேபோல இந்தப் படத்தின் ரிலீசையும் கொண்டாட காத்திருக்கின்றனர். கோட் படத்துடன் தளபதி 69 படத்தையும் நடித்து முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலக உள்ளதாக விஜய் முடிவெடுத்துள்ளார்.

நெல்லை: செம்மண், தேங்காய் நாரில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் – தயாரிப்பு பணிகள் மும்முரம்! – Album

நெல்லை விநாயகர் சதுர்த்தி : செம்மண், தேங்காய் நார்களினால் பிரமாண்டமாக தயாராகி வரும் விநாயகர் சிலைகள்.! Source link

தமிழகத்தில் ‘குரங்கு அம்மை’ நோயே இல்லாத நிலை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 

சேலம்: “தமிழகத்தில் குரங்கு அம்மை நோயே இல்லாத நிலை உருவாகியுள்ளது,” என மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் இன்று (ஆக.30) நடந்த 29-வது பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பட்டங்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது: “சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் 29-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். சேலம் … Read more

பாஜகவில் ஐக்கியம் ஆனார் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், பாஜகவில் இணைந்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முக்கிய தலைவராகவும், அம்மாநில முன்னாள் முதல்வராகவும் இருந்த சம்பாய் சோரன், இரண்டு நாட்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து, அவர் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (ஆக.30) ராஞ்சியில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் முன்னிலையில் சம்பாய் சோரன் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். … Read more

காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: சர்வதேச நீதி விசாரணை கோரி இலங்கையில் கவன ஈர்ப்பு போராட்டங்கள்

ராமேசுவரம்: காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று (ஆக.30) இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன. போர், அரசியல், வன்முறை மற்றும் பிற காரணங்களால் உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்ட பல லட்சக்கணக்கானோர் பற்றிய தகவல்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆகஸ்ட் 30-ம் தேதியை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக ஐநா கடந்த 30.08.2011 அன்று பிரகடனப்படுத்தியது. அதுமுதல் ஆகஸ்ட் 30-ம் நாளானது உலகெங்கிலும் உள்ள … Read more

100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சீயான் விக்ரமின் 'தங்கலான்'

பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது. 

சேவாக் உன் கிரிக்கெட் கேரியரை முடித்துவிடுவேன் என மிரட்டிய கங்குலி

வீரேந்திர சேவாக்கை இந்திய அணியில் இருந்து நீக்கிவிடுவேன் என சவுரவ் கங்குலி மிரட்டியதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் 2003 ஆம் ஆண்டு நடைபெற்றதாகவும், கங்குலி மிரட்டிய அடுத்த போட்டியில் சேவாக் சதமடித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் இந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார் அவர்.  அந்த பேட்டியில் ஆகாஷ் சோப்ரா பேசும்போது, ” சவுரவ் கங்குலி கேப்டனாக இருந்தபோது 2003 ஆம் ஆண்டு … Read more

Coolie: ரஜினி படத்தில் கமலின் மகள் – `கூலி' படத்தில் இணையும் ஸ்ருதி ஹாசன்; படக்குழு அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பதை அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘கூலி’. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாரம் முழுவதும் படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் கதாபாத்திரங்கள் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்திருந்தது. ‘கூலி’ ரஜினி அந்த வகையில் இப்படத்தில் மலையாள … Read more