Kaivalya Vohra: `21 வயதில் ரூ.3,600 கோடி..!' இந்தியாவின் பணக்கார இளைஞர் – யார் இந்த கைவல்யா வோஹ்ரா?

“21 வயதில் ரூ.3,600 கோடிக்கு சொந்தக்காரர்” என்ற தலைப்பை பார்த்ததும், ‘நம்ம என்ன 21 வயசுல பண்ணிட்டு இருந்தோம்?’ என்று உங்கள் மைண்ட் வாய்ஸ் செல்கிறதா… யார் இவர்? ஜெப்டோ(Zepto) நிறுவனத்தின் இணை நிறுவனர் கைவல்யா வோஹ்ரா. இந்த ஆண்டு மட்டுமல்லாமல், கடந்த மூன்று ஆண்டுகளாகவே ஹுருனின் ‘இந்தியாவின் டாப் பணக்கார இளைஞர்கள்’ பட்டியலில் முதல் இடம் பிடித்து வருகிறார். அதாவது இவரது 19 வயதில் இருந்து இவர் இந்த பட்டியலில் இடம் பிடித்து வருகிறார். கைவல்யா … Read more

பணியிட மாறுதல் கலந்தாய்வில் குளறுபடி: புதுச்சேரி தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் கல்வித்துறை அலுவலகத்தில் தர்ணா 

புதுச்சேரி: புதுச்சேரியில் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகச் சொல்லி பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணிபுரியும் தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் 245 பேருக்கு ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்றும், இது கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பணியிட மாறுதலுக்கான வழிகாட்டுதலின் படி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே இந்த கலந்தாய்வில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் … Read more

அசாம் சட்டப்பேரவையில் முஸ்லிம் திருமணம், விவாகரத்து கட்டாயப் பதிவு மசோதா நிறைவேற்றம்

குவாஹாட்டி: முஸ்லிம் சமூகத்தினர் திருமணம் மற்றும் விவாகரத்தை கட்டாயம் பதிவு செய்ய வகைசெய்யும் மசோதா அசாம்சட்டப்பேரவையில் நேற்றுநிறைவேறியது. அசாம் சட்டப்பேரவையில் ‘முஸ்லிம் திருமணங்கள், விவாகரத்துகள் கட்டாயப் பதிவு மசோதா’ கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. மாநில வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஜோகன் மோகன் இதனை அறிமுகம் செய்தார். இந்த மசோதா மீதான கேள்விகளுக்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பதில்அளிக்கும்போது, “அசாமில் முஸ்லிம்களுக்கு காஜிக்கள் நடத்தி வைக்கும் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த … Read more

‘அடுத்த கேள்வி ப்ளீஸ்’ – ட்ரம்ப்பின் இனவெறி தாக்குதலுக்கு கமலா ஹாரிஸ் பதில்!

வாஷிங்டன்: எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ். இந்நிலையில், குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், தன் மீது தொடுத்த இனவெறி தாக்குதலுக்கு அவர் பதில் அளித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பாக இயங்கி வரும் கமலா ஹாரிஸ், முதல் முறையாக நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அதில் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். மேலும், இதில் கொள்கை முடிவுகளை மாற்றிக் கொண்டது குறித்தும் … Read more

ராஜஸ்தானில் குடும்ப பிரச்சனை காரணமாக குழந்தையை கடத்திய நபரிடம் இருந்து தாயிடம் வர மறுத்த 2 வயது குழந்தை… காரணம் என்ன ?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சங்கனேர் சதர் பகுதியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் மீட்ட நிலையில் அந்த 2 வயதுக் குழந்தை தனது தாயிடம் செல்ல மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்திர பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்தவர் தனுஜ் சாஹர் உ.பி. மாநில காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பணி நீக்கம் செய்யப்பட்டார். இவரது உறவினரும் முறைப்பெண்ணுமான நபர் வேறு ஒருவருடன் திருமணம் செய்து … Read more

\"சிக்கிய டாக்குமெண்ட்\" கொல்கத்தா மருத்துவர் கொலை.. மூத்த டாக்டர் செய்த காரியம்! சிபிஐ கிடுக்குப்பிடி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மிக முக்கிய டாக்குமெண்ட் ஒன்றை இப்போது சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில் வேறு சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனையில் பயிற்சி Source Link

Bismi: சூடுபிடிக்கும் அஜித் தீண்டாமை விவகாரம்? யோகி பாபு 4 முறை போன் செய்தார்.. கோபப்பட்ட பிஸ்மி!

சென்னை: நடிகர் அஜித்குமார் வலிமை படத்தின் படப்பிடிப்பின்போது, நடிகர் யோகி பாபு அவரை தொட்டபோது டோன்ட் டச் எனக் கூறியதாக வலைபேச்சு பிஸ்மி கூறியிருந்தார். இது திரைத்துறையில் அதிர்ச்சியைக் கிளப்பியது. மேலும் இந்தத் தகவலை தங்களிடம் யோகிபாபுதான் கூறினார் எனவும் பிஸ்மி அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இதுவும் பலருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தது. இப்படியான நிலை

இலங்கை – இங்கிலாந்துக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம்

லோர்ட்ஸ் மைதானத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடையும் போது, முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 358 ஓட்டங்களை பெற்றுள்ளது. முதல் நாள் ஆட்டம் நிறைவடையும் போது Gus Atkinson 74 ஓட்டங்களுடனும் Matthew Potts 20 ஓட்டங்களுடனும் ஆடுகளத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் 8 வது விக்கெட்டுக்காக 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக இதுவரை பெற்றுள்ளனர். இங்கிலாந்து அணி சார்பில் … Read more

ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதித்த ED… வழக்கின் பின்னணி என்ன?!

ஜெகத்ரட்சகன் சொத்துக்கள் முடக்கம்! கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு தொடர் சர்ச்சையில் சிக்கியவர் ஜெகத்ரட்சகன். மதுபான ஆலை ஒப்புதல் சிக்கல், இவருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரியில் அரசு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விடக் கூடுதல் கட்டணம் வாங்குவதாக எழுந்த புகார், நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்ட சர்ச்சை, இலங்கையில் முதலீடு என்று பல்வேறு சர்ச்சைகள் ஜெகத்தை வட்டமடித்துக்கொண்டேதான் இருக்கிறது. எம்.பி ஜெகத்ரட்சகன் இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜெகத்துக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் பல்வேறு … Read more

“தொழிற்கல்வியை குலக்கல்வி என திரிப்பதா?” – சபாநாயகர் அப்பாவுக்கு எஸ்.ஆர்.சேகர் கண்டனம்

சென்னை: தொழிற்கல்வியை குலக்கல்வி என திரிப்பதா என்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு, பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எஸ்.ஆர்.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் தமிழகத்தில் வேண்டும் என்று கோரிக்கை வைத்தது தமிழக அரசு தான். ஸ்ரீ பள்ளிகள் புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சம் என்பதும் தமிழக அரசுக்கு நன்றாகவே தெரியும். புதிய கல்விக் கொள்கையில் இணையாமல் ஸ்ரீ பள்ளிகள் மட்டும் எங்களுக்கு வேண்டும் என்று கேட்பது … Read more