எரிபொருள் விலைகளில் மாற்றம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 344 ரூபாயாக காணப்பட்ட 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுளதுடன், அதன் புதிய விலை 332 ரூபாவாகும். 379 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 377 ரூபாவாகும். 317 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை … Read more

சென்னை பிராட்வேயில் ரூ.822 கோடியில் மல்டி மாடல் பேருந்து முனையம்… சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னையின் பழைய பிராட்வே பேருந்து நிலையம், குறளகம் கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் சுமார் ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் பல்வேறு போக்குவரத்து இணைப்புகளுடன் கூடிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகத்தை (Multi Modal Facility Complex) தமிழ்நாடு அரசு அமைக்கவிருக்கிறது. இதற்கான நிர்வாக அனுமதியை வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியீட்டிருக்கிறது. பிராட்வே பேருந்து நிலையம் சென்னையின் மிகப் பழைமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் இருந்துவருகிறது. 1964-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்த … Read more

தூத்துக்குடியில் பட்டாசு ஆலை விபத்து – 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தூத்துக்குடி: நாசரேத் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 2 பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் நாசரேத் அருகே குறிப்பான்குளத்தை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் பேன்ஸி ரகப்பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இன்று ஒரு கட்டிடத்தில் நாசரேத் அருகே அரசர்குளத்தைச் சேர்ந்த கள்ளவாண்டான் மகன் முத்துகண்ணன்(21), கமுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் விஜய் (25), புளியங்குளத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி … Read more

ஆந்திராவில் கனமழை தொடரும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

விஜயவாடா: ஆந்திரப்பிரதேசத்தில் கனமழை மிக கனமழையாக தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஸ்டெல்லா, “ஆந்திரப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை, மிக கனமழையாக தொடரும். வடக்கு ஆந்திர கடற்கரையை ஒட்டிய மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (சனிக்கிழமை) வலுவடைந்துள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, சனிக்கிழமை … Read more

Meiyazhagan Audio Launch: " `கங்குவா’ இந்திய சினிமாவே பெருமைப்படுற படமா வந்திருக்கு!" – ஞானவேல்ராஜா

’96’ பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் ‘மெய்யழகன்’. இப்படத்தில் கார்த்தியுடன், அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார்கள். இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட பாடலாசிரியர் கார்த்தி நேத்தா, “பத்தாம் வகுப்பு படிக்கும் போதே குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தேன். கண்ணதாசனின் ‘கண்ணே கலைமானே’ பாடலைக் கேட்டு, சினிமா பாடலாசிரியர் ஆக … Read more

தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் சீண்டல்களை வெளியிடுங்கள்! நடிகை சமந்தா போர்க்கொடி…

ஐதராபாத்: தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பாக விசாரணை அறிக்கை வெளியிடுமாறு மாநில அரசை  நடிகை சமந்தா வலியுறுத்தி உள்ளார். கேரளாவில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் திரைதுரையினரின் பாலியல் விவகாரம் மற்ற மாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, மேற்குவங்கம் என பல மாநிலங்களிலும் திரையுலக பாலியல் தொடர்பான அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில்,  தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை வெளியிடுமாறு அரசுக்கு … Read more

Kanguva: வேட்டையன் படத்தோட மோத போறது இல்லையா?.. சூர்யாவோட கங்குவா படம் இந்த தேதியில் ரிலீஸா?

       சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கங்குவா படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சிவா. கமர்சியல் படங்களை கொடுத்து வந்த சிவா இந்த படத்தின் மூலம் பிரம்மாண்ட படங்களையும் தன்னால் இயக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். கங்குவா படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில்

Chennai F4: 'போட்டிகள் ஒத்திவைப்பு; அனுமதி + வார்னிங் கொடுத்த FIA' – முதல் நாளில் என்ன நடந்தது?!

சென்னையின் இரவு நேர வீதி கார் பந்தயத்தின் முதல் நாள் எந்த பெரிய சுவாரஸ்யமும் இல்லாமல் முடிந்திருக்கிறது. முதல் நாளில் போட்டிகள் நடைபெறாத நிலையில் வீரர்கள் பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டிருந்தனர். முதல் நாளில் என்னவெல்லாம் நடந்தது என்பதைப் பார்க்கலாம்..! Race இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களுக்கு ரேஸ் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இன்று திட்டமிட்டப்படி ரேஸ் தொடங்குவதில் பிரச்னையானது. போட்டி நடைபெறும் டிராக்கில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பான FIA திருப்தி … Read more

விடுதியில் பாலியல் அத்துமீறல்: விசாரணைக் குழு அமைக்கிறது திருச்சி என்ஐடி நிர்வாகம்

திருச்சி: விடுதி மாணவியிடம் பாலியல் அத்துமீறிய விவகாரம் தொடர்பாக, விசாரணைக் குழு அமைக்கும் பணியில் என்ஐடி நிர்வாகம் தீவிரம் காட்டியுள்ளது. திருச்சி என்ஐடி நிறுவனம் துவாக்குடியில் இயங்கி வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகக் கட்டுப்பாட்டில் உள்ள இந்நிறுவனத்தில் 7,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் தங்குவதற்காக 25 விடுதிகள் உள்ளன. அதில் ஒன்றான ஓபல் விடுதியில் இன்டர்நெட் சேவைக்காக கேபிள் ஒயர்கள் பொறுத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், … Read more

நிலச்சரிவு பாதித்த வயநாட்டின் சில பகுதிகள் வசிக்கவே முடியாதவையாக மாறலாம்: அதிகாரிகள் அச்சம்

திருவனந்தபுரம்: சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தின் சில பகுதிகள், அதன் நிலப்பரப்பில் ஏற்பட்ட பெரிய அழிவுகள் காரணமாக எதிர்காலத்தில் நிரந்தரமாக மக்கள் வசிக்க முடியாத பகுதிகளாக மாறலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு பேரழிவு, அதிலிருந்து உயிர்பிழைத்த பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர்களில் பலர் தங்களின் பழைய வீடுகளுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை. மேலும், பலர் வசிப்பதற்கு வேறு வீடு, நிவாரணம் மற்றும் வாழ்வாதாரம் பற்றிய கவலையுடன் உள்ளனர். … Read more