வங்கதேச கலவர பின்னணியில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ: பிளிட்ஸ் இதழின் தலையங்கத்தில் தகவல்

டாக்கா: வங்கதேச கலவரத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து வங்கதேசத்தின் முன்னணி வார இதழான `பிளிட்ஸ்’ ஆசிரியர் சலா உதின் சோகிப் சவுத்ரி எழுதிய தலையங்க கட்டுரையில் கூறியிருப்பதாவது: வங்கதேச மாணவர்கள் போராட்டத்தை 157 பேர் ஒருங்கிணைந்து நடத்தினர். இந்தப் போராட்டத்தில் அல்-காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய பிஎன்பி கட்சிக்கு முக்கிய தொடர்பு உள்ளது. பிஎன்பி கட்சியின் மூத்த தலைவர் டேவிட் பெர்க்மான் போராட்டத்தை தூண்டினார். பிரிட்டனுக்கு தப்பியோடிய … Read more

பழங்குடியின மக்களின் வாழ்க்கையை இசையால சொல்ல முயற்சி செஞ்சிருக்கேன்.. ஜிவி பிரகாஷ் சிலிர்ப்பு!

சென்னை: நடிகர் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்றைய தினம் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. தங்கலான் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து

வங்காளதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு: சட்டவிரோத ஊடுருவல் அனுமதிக்கப்படாது – அமித்ஷா உறுதி

அகர்தலா, மாணவர்கள் போராட்டம் காரணமாக வங்காளதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா வந்தடைந்துள்ளார். இந்தியா வந்துள்ள அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசியுள்ளார். இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே வங்காள தேசத்தில் சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு அமைவதாக ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். இடைக்கால அரசின் பிரதமராக சலிமுல்லா கான் செயல்படுவார் என அவர் கூறியுள்ளார். ஓய்வுபெற்ற … Read more

பாரீஸ் ஒலிம்பிக்; இந்திய ஆக்கி வீரருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை

பாரீஸ், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஆக்கி போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷீட் அவுட்டில் 1-1 (4-2) என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது இந்திய வீரர் அமித் ரோகிதாஸ் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த ஆட்டத்தில் அமித் ரோகிதாஸ் எப்.ஐ.எச் … Read more

போராட்டம் எதிரொலி; இந்தியா-வங்காளதேசம் எல்லையில் உஷார் நிலையில் பி.எஸ்.எப். படை

டாக்கா, வங்காளதேசத்தில் சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடைமுறையின்படி, வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் வரை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் கடந்த மாதத்தில், வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்து இருந்தது. வங்காளதேசத்தில் ஆளும் அவாமி லீக் அரசின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் … Read more

அதிமுக எம்பி சி.வி.சண்முகத்துக்கு எதிரான அவதூறு வழக்கை தீர்ப்புக்காக தள்ளிவைத்தது ஐகோர்ட்

சென்னை: தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. தமிழக அரசின் திட்டம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது உள்ளிட்ட விவகாரத்தில் தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து அவதூறாக பேசியதாக திமுக நிர்வாகி ஒருவர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் சி.வி.சண்முகம் மீது … Read more

மத்திய பிரதேசத்தில் கனமழையால் பரிதாபம்: சுவர் இடிந்து 9 சிறுவர்கள் உயிரிழப்பு

போபால்: மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 9 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிக பழமையான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. ரேவா மாவட்டத்தில் நேற்று முன்தினம் சுவர் இடிந்து விழுந்ததில், பள்ளிக்கு சென்று திரும்பிய … Read more

நியூராலிங்க் சிப் 2-வது நபருக்கு வெற்றிகரமாக பொருத்தம்: எலான் மஸ்க்

ஃப்ரீமாண்ட்: நியூராலிங்க் நிறுவனம் தனது மூளை சிப்பினை வெற்றிகரமாக இரண்டாவது நபருக்கு பொருத்தி உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனை பெற்றுக்கொண்ட நபர் குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் எட்டு பேருக்கு பிரைன் சிப் பொருத்த முடியும் என எதிர்பார்ப்பதாக மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் முதல் முறையாக சோதனை அடிப்படையில் மனிதருக்கு மூளையில் நியூராலிங்க் நிறுவனம் சிப் பொருத்தி இருந்தது. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட 29 வயதான நோலண்ட் … Read more

துணைமுதலமைச்சர் பதவி குறித்து கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கும் கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மாத இறுதியில் தொழில் முதலீடு பெற அமெரிக்கா செல்கிறார். இதன் காரணமாக, தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதலமைச்சரின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி கடந்த சில நாட்களாக முதலமைச்சருக்கு உரிய பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தனது துறை மட்டுமின்றி மற்ற துறை பணிகளையும் … Read more

மாணவர்கள் புரட்சி- வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா- நாட்டை விட்டு ஓட்டம்- இந்தியாவில் தஞ்சம்

டாக்கா: வங்கதேச மாணவர்கள் புரட்சியால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். மேலும் சகோதரி ஷேக் ரெஹானாவுடன் வங்கதேசத்தை விட்டு தப்பி வெளியேறி இருக்கிறார். வங்கதேசத்தை விட்டு தப்பி ஓடிய ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரி ஷேக் ரெஹானாவும் இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் அல்லது திரிபுராவில் தஞ்சமடைய Source Link