பெசன்ட் நகர்: கடற்கரையில் தடையை மீறி வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றம் – மாநகராட்சி நடவடிக்கை!

சென்னையில் மெரினா கடற்கரையைத் தொடர்ந்து அதிக அளவு மக்கள் கூடும் இடமாக இருப்பது பெசன்ட் நகர் கடற்கரை. இங்கு 2013-ல் சுமார் 245 கடைகள் இருந்த நிலையில், 2021-க்கு பிறகு இதன் எண்ணிக்கை 1,200 கடைகளாக அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் நிம்மதியாக வந்து அமர்ந்து பேசவோ அல்லது இயற்கையை ரசிக்கவோ இடமில்லாமல் கடைகள் போடப்பட்டிருப்பதாகவும், கடல் நீருக்கு மிக அருகில் கடைகள் இருப்பதால் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என்பதாலும் மாநகராட்சி நிர்வாகம் … Read more

சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களின் நெரிசலுக்கு தீர்வு காண சாலை, பாலம் திட்டங்கள்: அமைச்சர்கள் ஆய்வு

சென்னை: கலங்கரை விளக்கம் – கொட்டிவாக்கம் இடையிலான கடற்கரை பாலம், திருவான்மியூர் – உத்தண்டி மேம்பாலம், மீனம்பாக்கம்- தாம்பரம் மேம்பாலம் உள்ளிட்ட பணிகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். சென்னை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய சாலை, மேம்பாலத் திட்டங்கள் குறித்து, இன்று இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் … Read more

பெண் அதிகாரியை மிரட்டிய மேற்குவங்க அமைச்சர் பதவி நீக்கம்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் தாஜ்பூர் பகுதியில் வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 22 கடைகள் அண்மையில் அகற்றப்பட்டன. இதற்கு கிழக்கு மிட்னாபூர் தொகுதி எம்எல்ஏவும் மாநில சிறைத் துறை அமைச்சருமான அகில் கிரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 3-ம் தேதி தாஜ்பூர் பகுதிக்கு சென்ற அமைச்சர் கிரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்த வனத்துறை பெண் அதிகாரி மணீஷாவை அநாகரிகமாக மிரட்டினார். “நீங்கள் ஓர் … Read more

வங்கதேச பிரதமர் மாளிகையை சூறையாடிய போராட்டக்காரர்கள் – நடந்தது என்ன?

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள், பிரதமர் மாளிகையில் சூறையாடியாதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டுச் வெளியேறிச் சென்ற நிலையில், ‘இடைக்கால அரசு விரைவாக அமைக்கப்படும்’ என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இச்சூழலில், புகழ்பெற்ற எழுத்தாளரும், பேராசிரியருமான சலிமுல்லா கான் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமையும் என்று வங்கதேச தேசிய கட்சி … Read more

ஆவேசம் தெலுங்கு ரீ-மேக்!! ஹீரோ யார் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிருவீங்க..

Latest News Aavesham Telugu Remake : பகத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேஷம் திரைப்படம் தெலுங்கில் ரீ-மேக் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.   

செந்தில் பாலாஜி வங்கி கணக்கில் இருந்த பணத்துக்கு சலான், ஆதார், பான் நம்பர் இல்லை – அமலாக்கத்துறை

Senthil Balaji : சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கோரிய அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

Vijay milton: விஜய் ஆண்டனியின் பதிவு; சரத்குமாரின் தலையீட்டால் தீர்வு; விளக்கமளித்த விஜய் மில்டன்!

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் வெளியாகி கோலிவுட்டில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ கடந்த வாரம் (ஆகஸ்ட் 2ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. அப்படத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற 1 நிமிடக் காட்சியால் படத்தின் கதையோட்டம் கெடுவதாகவும், அந்த 1 நிமிட காட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும் அந்தக் காட்சியை யார் வைத்தது … Read more

பங்களாதேஷில் ராணுவ ஆட்சி… இந்தியா கூர்ந்து கவனிக்கிறது…

பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற மாணவர் போராட்டம் வன்முறையாக வெடித்ததை அடுத்து அங்கு இதுவரை 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தின் நெருக்கடியைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. திரிபுரா வந்துள்ள ஷேக் ஹசீனா பாதுகாப்புடன் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இடைக்கால அரசை அமைக்க பங்களாதேஷ் ஜனாதிபதியிடம் ராணுவம் உரிமை கோர உள்ளது. தேசத்தின் முழுப் பொறுப்பையும் ராணுவம் ஏற்றுக்கொள்ள இருப்பதாகவும் மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் ராணுவம் நிறைவேற்றும் என்றும் … Read more

வங்கதேசத்தை விட்டு தப்பிய ஹசீனா! கண்ட்ரோலை கையில் எடுத்த ராணுவ தளபதி! போராட்டக்காரர்களுக்கு மெசேஜ்

டாக்கா: வங்கதேசத்தில் அந்நாட்டு அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்துள்ள நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் நாட்டு மக்களிடையே உரையாற்றி அந்நாட்டின் ராணுவ தளபதி, போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றனர். வங்கதேசத்தின் அரசு அமைப்பு முறையானது இந்திய அரசு அமைப்பு முறையின் சாயலை கொண்டிருக்கிறது. அரசமைப்பு மட்டுமல்லாது பல்வேறு அம்சங்களை Source Link

உமா ரியாஸ் மகனுக்கு திருமணம்..மெஹந்தி பங்ஷனில் பாய்ந்து முத்தம் கொடுத்த ஷாரிக் ஹாசன்!

சென்னை: பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கான் தம்பதியின் மூத்த மகனான ஷாரிக் ஹாசனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், மெஹந்தி பங்ஷன் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. விசு இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் படத்தில், அதிகம் பேசாமல், பார்வையால் அனைத்து நடிப்பையும் காட்டியவர்