தென்னை பயிர்ச்செய்கையின்போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு 1916 ஊடாக மூன்று மொழிகளிலும் பதில்கள்

தென்னைச் பயிர்ச்செய்கை தொடர்பாக விவசாயிகள் எதிர்நோக்கும் எந்தவொரு பிரச்சினைக்கும் 1916 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி இன்று (05) முதல் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தென்னை பயிர்ச்செய்கை சபை Coconut App என்ற பெயரில் தொலைபேசி செயலி ஒன்றையும் துரித தொலைபேசி இலக்கம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களின் தலைமையில் இந்த தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கான கையடக்க தொலைபேசி செயலி அறிமுகம் இன்று (05) விவசாய … Read more

வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஹசினா… இடைக்கால ஆட்சி அமையும் – ராணுவ தளபதி பேச்சு!

Bangladesh PM Sheikh Hasina: இட ஒதுக்கீடு தொடர்பான மாணவர் போராட்டம் உக்கிரமடைந்த சூழலில், வங்கதேசத்தை விட்டு பிரதமர் ஷேக் ஹசினா ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

`உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா..?' – முதல்வர் ஸ்டாலின் கூறிய பதில் என்ன?!

கடந்த பல வாரங்களாகவே, தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகப் பதவி உயர்த்தப்படப் போவதாக பேச்சுகள் தொடர்ந்து அடிபட்டுவருகின்றன. இதுபற்றி உதயநிதி ஸ்டாலின், `எதுவாக இருந்தாலும் முதலமைச்சரே முடிவெடுப்பார்’ என செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். உதயநிதி ஸ்டாலின் இந்த நிலையில், ஸ்டாலின் தற்போது இந்த விவகாரத்தில் வாய்திறந்திருக்கிறார். முன்னதாக, ஸ்டாலின் தனது சட்டமன்றத் தொகுதியான கொளத்தூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார். ஸ்டாலின் – திமுக அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலினிடம், `உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் … Read more

பராமரிப்பு பணி காரணமாக ரயில்கள் ரத்து: தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தாம்பரம்: பராமரிப்பு பணி காரணமாக சென்னை பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் மார்க்கமாக கூடுவாஞ்சேரி வரையும் கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் மார்க்கமாக பல்லாவரம் வரையிலான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாம்பரம் பேருந்து நிலையத்தில் பொது மக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக விடுமுறை நாட்களில் மட்டும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வந்த நிலையில் முதல் முறையாக வேலை நாளான இன்று (ஆக.5) பராமரிப்பு பணி காரணமாக சென்னை பல்லாவரத்தில் இருந்து … Read more

மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கான 18% ஜிஎஸ்டியை குறைக்க திரிணமூல் எம்பி வலியுறுத்தல்

புதுடெல்லி: மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான 18% ஜிஎஸ்டியை குறைக்குமாறு மத்திய அரசை, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய டெரெக் ஓ பிரையன், “மருத்துவம் மற்றும் சுகாதார காப்பீடு மீதான 18% ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும். இது மக்களுக்கு, முக்கியமாக நடுத்தர வர்க்கத்தினருக்கு சுமையாக இருக்கும் பிரச்சினை. சர்வதேச அளவில் மருத்துவக் காப்பீடு 7% க்கும் அதிகமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் இது 4% க்கும் குறைவாக … Read more

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா: இடைக்கால அரசை அமைத்தது வங்கதேச ராணுவம்

டாக்கா: வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள ஷேக் ஹசீனா, பாதுகாப்பு கருதி வெளிநாடு புறப்பட்டுள்ளார். அவர் இந்தியாவுக்கு புறப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த 1971-ம் ஆண்டு வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் … Read more

“அவசரப்பட்டுட்டேன்..” GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ரிவ்யூ!!

Latest News Actor Vijay GOAT Review : நடிகர் விஜய், கோட் படத்தை பார்த்துவிட்டு கூறிய விஷயம் குறித்து இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.   

சாம்சங் முதல் நத்திங் வரை…. ரூ.20,000-திற்கு கிடைக்கும் அசத்தல் போன்கள் இவை தான்..!!

தற்போது ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசிய பொருளாக  மாறி விட்ட நிலையில், பலருக்கு சிறந்த அமசங்கள் கொண்ட வேகமாக இயங்கும் போன் தான் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. மிக குறைந்த விலையில் வரும் போன்களில், இதை எதிர்பார்ப்பது சிறிது கஷ்டம் தான். மிக நல்ல ஸ்மார்ட்போன்கள் வாங்க வேண்டும் என்றால் ரூ.20 ஆயிரம் நிச்சயம் தேவை. இத்தகைய போன்கள் உபயோகப்படுத்த எளிதாக திரை அளவு பெரியாதாக கொண்டிருப்பதோடு, வேகமாக செயல்படும் சக்தி வாய்ந்த செயலி, நீண்ட நேரம் … Read more

கரப்பான் பூச்சியுடன் இனிப்பை விற்ற சென்னை ஸ்வீட் கடைக்கு அபராதம்… நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…

சென்னையைச் சேர்ந்த பிரபல இனிப்பு கடை மற்றும் உணவகமான அடையார் ஆனந்த பவனில் வாங்கிய இனிப்பில் கரப்பான் பூச்சி இருந்ததை அடுத்து அந்த உணவகத்திற்கு அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எண்ணூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் ராயபுரத்தில் உள்ள அடையார் ஆனந்த பவன் கிளையில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி அங்கூர் ஜாமூன் மற்றும் ப்ரூட் அல்வா ஆகிய இனிப்புகளை வாங்கியுள்ளார். தீபாவளிக்கு முன்பு வாங்கிய இந்த இனிப்பை சாப்பிட்ட அவருக்கு … Read more

நாட்டை விட்டே ஓடிய பிரதமர் ஷேக் ஹசீனா! வங்கதேசத்தில் புரட்சி வெடிக்க என்ன காரணம்? ஷாக் பின்னணி

டாக்கா: வங்கதேசத்தில் நடைபெறும் போராட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளார். அவர் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு வங்கத்தில் தஞ்சம் அடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. பங்களாதேஷ் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான கனோபாபனுக்குள் நூற்றுக்கணக்கானோர் நுழைந்து உள்ளனர். அங்கே வீட்டை சூறையாடும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஒரே ஒரு இடஒதுக்கீடு Source Link