ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 8 அதிவேக நெடுஞ்சாலை திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல்!

டெல்லி: ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 8 அதிவேக நெடுஞ்சாலை திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அமைச்சரவை  ரூ.50,655 கோடி மதிப்பில் 936 கிலோமீட்டர் தொலைவுக்கு  8 அதிவேக  நெடுஞ்சாலை  திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அ தன்படி, ரூ.50,655 கோடி முதலீட்டில் 936 கிமீ அளவுக்கு 8 தேசிய வேக சாலைகள் அமைக்கப்பட உள்ளன. 9 மாநிலங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டங்களால், பயண நேரம் பாதியாக குறையும் என்றும் … Read more

என்ன கிக் இருக்கு?.. வரலட்சுமி – நிக்கோலாய் திருமணத்தை விமர்சித்த மருத்துவர்.. இதெல்லாம் ஓவர் பாஸ்

சென்னை: வரலட்சுமி கடந்த இரண்டாம் தேதி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் படு பிரமாண்டமாக நடைபெற்றது. அதனையடுத்து சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சூழல் இப்படி இருக்க வரலட்சுமி – நிக்கோலாயின் திருமணம் தாய்லாந்தில் நடந்ததை மருத்துவர் காந்தராஜ் விமர்சித்திருக்கிறார்.

திருப்புல்லாணி கோயில் நகைகள் மாயமான விவகாரம்; ஸ்தானிகரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த கோர்ட்!

ராமநாதபுரம் அருகே உள்ளது திருப்புல்லாணி. இங்குள்ள ஆதிஜெகநாத பெருமாள் கோயில் பிரசித்தி பெற்றதாகும். ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான இந்த கோயிலில் சுமார் 75 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியிலான நகைகள் மாயமாகின. நகைகள் உள்ள கருவூல பெட்டகத்தின் சாவி கோயிலின் ஸ்தானிகர் (பூசாரி) ஶ்ரீனிவாச அய்யங்கார் வசம் இருந்த நிலையில் நகைகள் மாயமானதால், அவர்மீது சமஸ்தான திவான், குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து ஶ்ரீனிவாச அய்யங்கார் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் … Read more

சீமான் மீது அவதூறு வழக்கு: திருச்சி எஸ்.பி. முடிவு

திருச்சி: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி நிர்வாகியும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டவருமான காளியம்மாளை விமர்சித்துப் பேசியதாக ஆடியோ வெளியானது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, அந்த ஆடியோவுக்கு காரணம் திருச்சி எஸ்.பி.தான் என்று சீமான் மறைமுகமாக பேசியது சமூக வலைதளங் களில் வைரலானது. இந்நிலையில், சீமான் பேசிய வீடியோவை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள திருச்சி எஸ்.பி. வருண்குமார், ‘‘பொதுமேடையில் பேசினாலும் கொச்சையான பொய்களை தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள … Read more

நிர்மலா சீதாராமன் மீது இன்போசிஸ் முன்னாள் சிஎஃப்ஓ மோகன்தாஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நீண்டகால மூலதன ஆதாய வரியை உயர்த்தி மக்களின் நம்பிக்கையை தகர்த்துவிட்டீர்கள் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பை விமர்சித்துள்ளார். 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், பங்கு தொடர்பான குறுகியகால மூலதன ஆதாய வரி 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும், நீண்டகால மூலதன ஆதாய வரி 10 … Read more

ரஷ்யா திரும்பிய உளவாளி தம்பதியை வரவேற்ற புதின்

மாஸ்கோ: அமெரிக்கா, ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு கைதிகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது. இதன் ஒரு பகுதியாக. ரஷ்ய கொலையாளியான வாதிம் கிரசிகோவை விடுவிக்க ஜெர்மனி ஒப்புக்கொண்டது. கிரசிகோவ் உட்பட 8 கைதிகள் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கு பதிலாக ரஷ்ய சிறைகளில் அடக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் கடற்படை வீரர் பால் வேலன், வால் ஸ்ட்ரீட் பத்திரிகை செய்தியாளர் இவான் கெர்ஷ் கோவிக் உட்பட 16 வெளிநாட்டினர் … Read more

ஆகஸ்டு 7ந்தேதி புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக பதவி ஏற்கிறார் கைலாசநாதன்

புதுச்சேரி: புதுச்சேரி புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாச நாதன் வரும் 7ந்தேதி பதவி ஏற்ற உள்ளார். இதையொட்டி, தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஓரிரு நாளில் முடிவடைய உள்ளது. புதுச்சேரியின் புதிய லெப்டினன்ட் கவர்னராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாசநாதனை குடியரசு தலைவர் ஜுலை 29ந்தேதி அன்று நியமித்து உத்தரவிட்டார்.  இதையடுத்து அவர் வரும் 7ந்தேதி பதவி ஏற்க உள்ளார் அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் … Read more

ஹேப்பி நியூஸ்.. இரண்டாவது திருமணத்துக்கு ரெடியான டாப் ஸ்டார் பிரசாந்த்.. சீக்கிரம் டும் டும் டும்?

சென்னை: பிரசாந்த் பல வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக நடித்திருக்கும் படம் அந்தகன். ஹிந்தியில் வெளியாகி மெகா ஹிட்டான அந்தாதூன் படத்தின் ரீமேக்காக இது உருவாகியிருக்கிறது. இப்படத்தை இயக்குநரும், பிரசாந்த்தின் தந்தையுமான தியாகராஜன் இயக்கியிருக்கிறார். சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. விஜய், அஜித் இப்போது ரஜினிகாந்த்,

டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: கோவையை வீழ்த்தி திண்டுக்கல் சாம்பியன்

சென்னை, 8-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும், ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய கோவை அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த அணியில் ஓரளவுக்கு சமாளித்த சுஜய் 22 ரன்களும், ராம் … Read more

காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்த கல்லூரி மாணவர் அடித்துக் கொலை; மதுபோதையில் இளைஞர்கள் வெறிச்செயல்!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன்(வயது: 18). இவர், திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், ஸ்ரீரங்கம் மாம்பழ சாலையில் உள்ள அவருடைய மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த அவரின் மாமா மகன் சந்தோஷ்(வயது: 20) என்பவருடன் சேர்ந்து காவிரி ஆற்றில் அதிக நீர் வருவதால் அதனை ரசிப்பதற்காக கீதாபுரம் பகுதிக்குச் சென்றுள்ளார். இருவரும் கீதாபுரம் பகுதியில் காவிரி கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்த … Read more