வங்காளதேசத்தில் போராட்டம்: 72 பேர் பலி; இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

டாக்கா, வங்காளதேசத்தில் ஆளும் அவாமி லீக் அரசின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே இன்று புதிதாக மோதல் ஏற்பட்டது. அரசுக்கு எதிரான போராட்டத்தில் 72 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், தூதரகத்திற்கு உட்பட்ட எல்லை பகுதியில் வசித்து வரும் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இந்திய நாட்டினரும் தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும். தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்படுகிறது. அவசரநிலை ஏற்பட்டால், 88-01313076402 என்ற … Read more

ஈஷா சார்பில் தமிழகம் முழுவதும் 24 இடங்களில் இலவச யோகா வகுப்பு

கோவை: கோவை ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈஷா சார்பில் தமிழகத்தில் முதல் முறையாக வரும் 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை, 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவசமாக ஈஷா யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இவ்வகுப்புகள் தமிழகம் முழுவதும் மொத்தம் 24 இடங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஈஷா அறக்கட்டளை மூலம் குறிப்பாக ஈஷா யோக நிகழ்ச்சி என்று வழங்கப்படும் யோக வகுப்புகளில் ‘ஷாம்பவி மஹா முத்ரா’ எனும் சக்தி வாய்ந்த பயிற்சி கற்றுத் … Read more

உலகின் உணவு பாதுகாப்புக்கான தீர்வுகளை இந்தியா கண்டுபிடித்து வருகிறது: பிரதமர் மோடி

புதுடெல்லி: உலகின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான தீர்வுகளை இந்தியா கண்டுபிடித்து வருகிறது என்று வேளாண் பொருளாதார நிபுணர்களின் சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டு புதுடெல்லியில் இன்று (ஆகஸ்ட் 3) தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “65 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற மாநாடு இந்தியாவில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் அனைவரும் … Read more

சசிதரூர் எக்ஸ் தளப் பதிவால் வெடித்த சர்ச்சை

திருவனந்தபுரம் காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம் பி யுமான சசிதரூரின் எக்ஸ் தள பதிவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி கேரளாவின் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் மண்ணில் புதையுண்டும், ஆற்று வெள்ளத்தில் சிக்கியும் இதுவரை 359 பேர் பலியாகியுள்ளனர். வயநாட்டிற்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்கள் அனுப்பி வருகிறார்கள். அதன்படி நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் நிவாரண பொருட்கள் வழங்கினார்.பாய், தலையணை உள்ளிட்ட … Read more

நள்ளிரவில் வந்த அறிவிப்பு.. \"வங்கதேசத்திற்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம்..\" மத்திய அரசு பரபர

டாக்கா: வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், மீண்டும் இப்போது வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறையில் இப்போது வரை 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை வங்கதேசத்திற்குச் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.. நமது அண்டை நாடான வங்கதேசத்தில் Source Link

ஜாக்கெட்டே அணியாமல் நடிக்க வைத்த பா. ரஞ்சித்.. தங்கலான் நடிகை வெட்கப்பட்டுக் கொண்டே சொன்ன விஷயம்!

சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் தங்கலான் திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியான அப்போகலிப்டா படம் போல ஆதிவாசிகளின் படமாக உருவாகி இருக்கிறது. ஆதிவாசி மக்கள் தங்கத்தை தேடி போகும் போது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்த படத்தின் கதை. கோலாரில் தங்கம் எப்படி கிடைத்தது அதற்காக ஏற்பட்ட உயிரிழப்புகள் உள்ளிட்ட விஷயங்களை அரசியலும், அழுத்தமும் நிறைந்த

அசாமில் பிறந்தவர்களுக்கு மட்டும் அரசு வேலை – ஹிமந்தா பிஸ்வா சர்மா

கவுகாத்தி, அசாமில் அம்மாநில அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அங்கே அசாம் மாநிலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று, இன்று நடைபெற்ற மாநில பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். அசாம் மாநிலத்தில் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், அதைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மியா … Read more

பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார் ஜோகோவிச்

பாரீஸ், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் (செர்பியா), 3-ம் நிலை வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் இரு வீரர்களும் சரி சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டம் பரபரப்பாக நகர்ந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் டை பிரேக்கர் வரை போராடி வெற்றி பெற்றார். … Read more

பெப்பர் ஸ்ப்ரே அடித்து ஊபர் டிரைவரை தாக்கிய அமெரிக்க பெண் – வீடியோ வைரல்

வாஷிங்டன், அமெரிக்க மக்கள் கருப்பினத்தவர்களை பெரும்பாலும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு உரிமை மறுக்கப்படுவதுடன், ஏதாவது ஒரு காரணத்திற்காக அவர்கள் தாக்குதலுக்கும் ஆளாகின்றனர். அப்படி கருப்பினத்தவர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் சம்பவம் அதிகம். அப்படி ஒரு சம்பவம் தற்போது மீண்டும் அமெரிக்காவில் நடந்துள்ளது. நியூயார்க்கைச் சேர்ந்த கில்பேட் என்ற பெண் ஊபர் வாடகை காரை புக்செய்து, தன் தோழியுடன் பயணம் செய்துள்ளார். அவர்கள் பயணித்த காரானது நியூயார்க் நகரத்தில் உள்ள செக்சிங்டன் பகுதியில் இரவு 11.20 மணிக்கு சென்றுக் கொண்டிருந்தது. … Read more