நாட்டின் பல இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 05ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 04ஆம் திகதி நண்பகல்12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது … Read more

‘மனித மனம் விரைவாக முடிவெடுத்தாலும் செயல்படுத்துவதில் தாமதமாகிறது’ – எழுத்தாளர் பி.கே.சிவகுமார் பேச்சு

கோவை: ஜெயகாந்தன் தோழர்கள் அமைப்பின் சார்பில், அமெரிக்க வாழ் தமிழரும், எழுத்தாளருமான பி.கே.சிவகுமாருடன் கலந்துரையாடல் கூட்டம், கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள, அறிவொளி சங்கர் அரங்கத்தில் நேற்று (ஆக.3) நடந்தது. ஜெயகாந்தன் தோழர்கள் அமைப்பினைச் சேர்ந்த அப்துல்லா வரவேற்றுப் பேசினார். வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசினார். இந்நிகழ்வில் எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் நெருங்கிய தொடர்புடைய மோத்தி ஆர்.ராஜகோபால் குறித்த கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து எழுத்தாளர் பி.கே.சிவகுமாரின், ‘உள்ளுருகும் பனிச்சாலை’ என்ற கவிதை நூல் … Read more

இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கிராமம்

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு, மண்டி மற்றும் சிம்லா பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 60-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமேஜ் கிராமத்தைச் சேர்ந்த அனிதா தேவி கூறும்போது, “இரவில் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென … Read more

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை : அமைச்சர் சுரேஷ் கோபி

வயநாடு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உலகையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 6-வது நாளாக இன்றும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆய்வு செய்தார். பிறகு முண்டகை, சூரல் மலையில் … Read more

Andhagan: பிரஷாந்திற்கு கண் தெரியுமா.. தெரியாதா.. அந்தகன் சுவாரஸ்யம் பகிர்ந்த டைரக்டர்!

       சென்னை: வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஏராளமான இளம் ரசிகைகளின் இதயத்தை கொள்ளை கொண்டவர் நடிகர் பிரஷாந்த். தொடர்ந்து ஜீன்ஸ் உள்ளிட்ட மாஸான படங்களிலும் இவர் நடித்திருந்தார். இதனிடையே சொந்த பிரச்சினைகள் காரணமாக சில காலங்கள் சினிமாவில் இருந்து காணாமல் போன பிரஷாந்த் தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

பெண் அதிகாரி சர்ச்சையால் திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலக உத்தரவு

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சிறை துறை மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. துறை சார்ந்த பெண் அதிகாரி ஒருவரை அவர் மிரட்டுவது போன்ற வீடியோ வெளிவந்து சர்ச்சையானது. இதனால், பெண் அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்டார் என பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது. கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த பெண் அதிகாரியிடம் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கட்சி மேலிடம் அவரை வலியுறுத்தியுள்ளது. பதவி விலகவும் கூறியுள்ளது. … Read more

இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்: பெண் படுகொலை; 3 பேர் காயம்

டெல் அவிவ், இஸ்ரேலில் ஹோலன் பகுதியில் இன்று காலை பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் பெண் (வயது 66) ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார். தாக்குதல் நடந்ததில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுதவிர, 3 பேர் தாக்குதலில் காயம் அடைந்து உள்ளனர். மேற்கு கரையை சேர்ந்த பாலஸ்தீனிய பயங்கரவாதி இந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், போலீசார் அந்நபரை சுட்டுள்ளனர். எனினும், அந்நபரின் நிலைமை உடனடியாக தெரிய வரவில்லை. பயங்கரவாதியின் … Read more

அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய 4 சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ்

சென்னை: சென்னை மாநகராட்சியில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 4 கவுன்சிலர்களுக்கு விளக்கம் கேட்டு நகராட்சி நிர்வாகத்துறை செயலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சென்னை மாநகராட்சியில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தல் நடத்தப்படவில்லை. அந்த காலகட்டத்தில் கவுன்சிலர்கள் இடையூறு இன்றி மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய சேவையை பெற்று வந்தனர். அரசு நிர்வாகத்தில் மக்கள் பிரதிநிதித்துவம் அவசியம். அதனால் உடனடியாக மாநகராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசியல் … Read more

பிஹாரில் மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்

பாட்னா: தனது மனைவியை காதலனுக்கு கணவர் திருமணம் செய்து வைத்தசம்பவம் பிஹார் மாநிலம் லக்கிசராயில் நடந்துள்ளது. பிஹார் மாநிலம் லக்கிசராய் மாவட்டம் ராம்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (26). இவரது மனைவி குஷ்பூ குமாரி (22). கடந்த 2021-ல் திருமணமான இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குஷ்பூ குமாரி, அதே கிராமத்தைச் சேர்ந்த சந்தன் குமார் (24) என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். ஆனால் அதற்கு முன்னதாக, ராஜேஷ் குமாருக்கு … Read more

மறைந்த ஆம்ஸ்ட்ராங் குடுமபத்தினருக்கு மர்ம நபரின் கொலை மிரட்டல்

சென்னை மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையொட்டி, கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, குன்றத்தூரைச் சேர்ந்த ரவுடி திருவேங்கடம், பூந்தமல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், அஞ்சலை, ஹரிஹரன், சதீஷ் உள்பட 21 … Read more