தமிழகத்தில் 17 ஐ பி எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை இன்று தமிழகத்தில் 17 ஐ பி எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு இன்று 17 ஐ பி எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு பதிலாக  சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளார். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜி ஆர்.தினகரன் சிலை கடத்தல் தடுப்பு … Read more

\"மம்மி\"க்கு வலி.. அவஸ்தையில் வாய்விட்டு அழுகை..உடம்பெல்லாம் இளநீர் தூபம்..வெளிவந்த எகிப்திய சீக்ரெட்

எகிப்து எகிப்திய “மம்மி குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. அத்துடன் மம்மி வலியால் கதறிய காரணமும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது…  உலகிலேயே பழமையும் பெருமையும் வாய்ந்தது எகிப்திய நாகரீகம்.. வடகிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இந்த நாட்டின் பெயரை கேட்டதுமே நமக்கு நினைவுக்கு வருவது அதன் பிரம்மாண்ட “பிரமிடுகள்” தான்.  அதிசயம்: உலக அதிசயங்களில் ஒன்றான Source Link

4 மணி நேரம் தொடர்ந்து ஐஸில் இருந்த ராதா ரவி.. மிஷ்கின் சொன்ன சீக்ரெட்

சென்னை: இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய அத்தனை படங்களும் ஏதோ ஒருவகையில் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தவை. அவர் தற்போது ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவரும் அவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும் நடித்திருக்கிறார். வின்செண்ட் செல்வாவிடம் உதவி இயக்குநராக இருந்த

ம.பி: மத நிகழ்ச்சியில் கோயில் சுவர் இடிந்து விபத்து; 9 குழந்தைகள் பலியான சோகம்!

மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் உள்ள சஹ்பூர் என்ற இடத்தில் உள்ள ஹர்துல்பாபா கோயிலில் மத நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் திரளான குழந்தைகள் கலந்துகொண்டனர். கடந்த சில நாள்களாக மத்தியப் பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் நின்ற இடத்தில் கோயில் சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் ஏராளமான குழந்தைகள் சிக்கிக்கொண்டனர். தீயணைப்புத்துறையினரும், உள்ளூர் மக்களும் இணைந்து இடிபாடுகளை அப்புறப்படுத்திவிட்டு, குழந்தைகளை மீட்டனர். இதில் … Read more

திரையரங்குகள் மீதான கேளிக்கை வரியை அரசு ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி

சென்னை: நலிவடைந்து வரும் திரைத்துறையை பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் திரையுலகைக் காக்க தமிழ்நாடு உள்ளாட்சி கேளிக்கை வரியை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக திகழும் திரைத்துறை, வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஜொலிப்பது போல தோன்றினாலும், உள்ளுக்குள் இருளாகவே காட்சியளிக்கிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் … Read more

மத்தியப் பிரதேசத்தில் மத நிகழ்வில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து: 9 குழந்தைகள் பலி

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் மத நிகழ்வில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் ஷாபூர் கிராமத்தில் இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக சாகர் பகுதி காவல் ஆணையர் வீரேந்திரா சிங் ராவத் கூறுகையில், “எங்களுக்குக் கிடைத்த தவலின்படி சாகர் மாவட்டம் ஷாபூரில் நடந்த ஹர்தல் பாபா மத நிகழ்வின்போது நிகழ்ச்சி நடந்த அரங்கின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இந்த விபத்து நடந்துள்ளது. இதுவரை 9 குழந்தைகள் உயிரிழந்ததும் … Read more

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம்: அமெரிக்க ராணுவ ஜெனரல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம்

ஈரான்: ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலைக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதால் அமெரிக்க ராணுவ ஜெனரல் மைக்கேல் குரில்லா மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இந்த பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று. இஸ்ரேலுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியின் பகுதியாக அமெரிக்க ராணுவ ஜெனரல் மைக்கேல் குரில்லாவின் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், இந்த பயணத்துக்கு முன்னதாக மத்திய கிழக்கில் போர் நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. … Read more

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் – அன்புமணி ராமதாஸ்!

ஊழல் செய்வது, மின் கட்டணத்தை உயர்த்துவது, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது, கஞ்சா போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக தமிழகத்தில் கிடைக்கிறது இதுதான் திராவிடம் மாடல் – அன்புமணி ராமதாஸ்.  

இந்த மூன்று பிளேயர்கள் மட்டும் ஏலத்துக்கு வந்தால் ஐபிஎல் 2025ல் மெகா ஜாக்பாட் தான்..!

IPL 2025 Mega Auction Updates : ஐபிஎல் 2025க்கு முன் மெகா ஏலம் நடக்கவுள்ளது, இதில் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் ரூபாய் மழை பொழியப்போகிறது. அதில் நம்முடைய கணிப்பின்படி இடம்பிடித்துள்ள மூன்று பிளேயர்கள் பட்டியலை பார்க்கலாம். அவர்கள் இப்போது இருக்கும் அணியை விட்டு வெளியேறினாலோ அல்லது அந்த அணியே அவர்களை விடுவித்தாலோ அந்த மூன்று பிளேயர்களுக்கு பெரிய ஜாக்பாட் தான். கடந்த ஐபிஎல் போட்டியில் அதிக தொகைக்கு சென்ற மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் ஆகியோரின் விலைகளை … Read more

இந்திய சந்தையை மீண்டும் குறிவைக்கிறது அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு

இந்தியாவின் புதிய மின்சார வாகன (EV) கொள்கையானது, EVகளுக்கான உற்பத்தி மையமாக நாட்டை மேம்படுத்துவதையும், உலகளாவிய உற்பத்தியாளர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இந்திய சந்தையை அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு மீண்டும் குறிவைக்கிறது. 1990ம் ஆண்டு மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம் 1995ம் ஆண்டு இந்தியாவில் தனது முதல் உற்பத்தியை துவங்கியது. சென்னையை அடுத்த மறைமலைநகர் மற்றும் குஜராத் மாநிலத்தின் சனன்த் ஆகிய இடத்தில் … Read more