பஜாஜ் சேட்டக் 3201 SE ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கூடுதல் ரேஞ்ச் வழங்கும் 3201 SE மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதிலும் டெக்பேக் அல்லது டெக் பேக் அல்லது ஸ்டாண்டர்ட் மாடல் என இரண்டு விதமாக கிடைக்கின்றது. Bajaj Chetak 3201 SE ஏற்கனவே சந்தையில் இருக்கின்ற சேட்டக் 2024 பிரீமியம் வேரியண்டின் அடிப்படையில் தான் இந்த மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த 3201 SE ஸ்பெஷல் வேரியண்டில்  ப்ரூக்லின் பிளாக் ஒற்றை நிறத்தில் கிடைக்கின்றது. … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள்: ஆகஸ்ட் 5 முதல் 11 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

மதுரை துணை ஆணையர் உள்பட 25 மாநகராட்சி அதிகாரிகள் இடமாற்றம்

மதுரை; மதுரை மாநகராட்சி துணை ஆணையர் உள்பட மாநகராட்சிகளில் பணிபுரியும் 25 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் தற்போது பணிபுரியும் உயர் அதிகாரிகள் இடமாறுதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த வாரம் மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மூவர் உள்பட தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் 17 சுகாதார அலுவலர்கள் (Sanitary officer) அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது மாநகராட்சி ஆணையர்கள், துணை இயக்குனர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உள்பட … Read more

வயநாடு நிலச்சரிவில் மாயமான தமிழர்கள் உட்பட 300 பேரை தேடுவதில் மீட்பு படைகளுக்கு சவால்

கேரளாவின் வயநாடு நிலச்சரிவுக்குப் பிறகு தமிழர்கள் உட்பட 300 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடுவது மீட்புப் படையினருக்கு சவாலானதாக அமைந்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக, சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில்சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையும் ராணுவமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதுவரை 358 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுமுகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி … Read more

அசலேஸ்வரர், அரநெறியப்பர் திருக்கோயில், (தியாகராஜர் கோயில் உள்ளே), , திருவாரூர்

அசலேஸ்வரர், அரநெறியப்பர் திருக்கோயில், (தியாகராஜர் கோயில் உள்ளே), , திருவாரூர் 63 நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தியடிகள், சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள புற்றிடங்கொண்டீசரை வழிபட்டு வந்தார். இக்கோயிலுக்குள்ளேயே அரநெறி என்ற தனிக்கோயில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இவரையும் நமிநந்தியடிகள் வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை அரநெறியப்பர் கோயிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்தார். கோயில் விளக்கு ஒளி மங்கலாகி, நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டது. அப்போது அடிகள் விளக்கேற்ற … Read more

யோகி பாபுவின் போட்.. நேரம் தான் வீணாப்போச்சு..ப்ளு சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் போட். இப்படத்தில் யோகிபாபு உடன் எம்.எஸ்.பாஸ்கர், கெளரி கிஷான்,ஷா ரா, சாம்ஸ், மதுமிதா, சின்னி ஜெயந்த் ஆகியோரின் நடித்துள்ளனர். இப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்க்கலாம். போட் திரைப்படம் இரண்டாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில் அதாவது 1943 கால கட்டத்தில் படம் ஆரம்பிக்கிறது.

வாசிம் அக்ரம், வார்னேவுக்கு அடுத்து இந்திய வீரர்தான் அந்த திறமையை கொண்டுள்ளார் – ரவி சாஸ்திரி புகழாரம்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஜஸ்பிரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக திகழ்வதாக பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். வித்தியாசமான ஆக்சனை பின்பற்றி பந்து வீசும் அவர் உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்து வருகிறார். குறிப்பாக அழுத்தமான சூழ்நிலையில் துல்லியமான யார்கர் பந்தை வீசும் அவர் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வருகிறார். டி20 உலகக்கோப்பையில் மொத்தமாக 15 விக்கெட்டுகளை … Read more

மதுவில் விஷம் கலந்து கணவரை கொலை செய்ததாக மனைவிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து

சென்னை: மதுபானத்தில் பூச்சிக்கொல்லி விஷம் கலந்து கொடுத்து கணவரை கொலை செய்ததாக மனைவிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுலோச்சனா என்ற பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்குமிடையே கூடா நட்பு இருப்பதாக சந்தேகமடைந்த சுலோச்சனாவின் கணவர் முத்துச்சாமி தனது மனைவியை கண்டித்துள்ளார். கடந்த 2012 நவம்பர் 12 அன்று சுலோச்சனாவிடம் மதுபாட்டில் வாங்கிவரும்படி அவரது கணவர் கூறியுள்ளார். அந்த மதுபானத்தில் பூச்சி மருந்து கலந்து சுலோச்சனா கொடுத்துள்ளார். அதை முத்துச்சாமியும், … Read more

ஆந்திர தலைநகர் மீது துளிர் விடும் நம்பிக்கை: அமராவதியில் சென்னை ஐஐடி குழு ஆய்வு

அமராவதி: புதிய ஆந்திர மாநிலத்தின் தலைநகரமாக அமராவதி அறிவிக்கப்பட்டு, கடந்த 2015 அக்டோபரில் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்காலிக பேரவை மற்றும் தலைமைச் செயலக கட்டிடங்கள் கட்டப்பட்டு, அங்கிருந்தே ஆட்சி தொடங்கியது. நிரந்தர கட்டிடங்களுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. ஆனால் 2019-ல் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும், 3 தலைநகரங்கள் அமைக்கும் திட்டத்தை அறிவித்து, அதிர்ச்சியூட்டினார். இதனால் அமராவதிக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சட்டப் போராட்டமும் நடத்தி, 3 தலைநகர திட்டத்துக்கு முட்டுக்கட்டை … Read more

ஹமாஸ் தலைவர் கொலையில் ஈரான் அதிகாரிகள் மீது சந்தேகம்

வாஷிங்டன்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) அதிகாரிகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இவர்கள் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத்தின் ஏஜெண்டுகளாக செயல்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்.7-ல் ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அப்போது முதல் இஸ்ரேல் உளவுப் படையான மொசாட், ஹமாஸ் முக்கியபுள்ளிகளை குறிவைத்து தாக்கி வருகிறது. இந்த வரிசையில் ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் … Read more