வரும் 2040க்குள் சென்னையின் 7% நிலப்பரப்பு கடலில் மூழ்கும் : ஆய்வறிக்கை

சென்னை வரும் 2040க்குள் சென்னையின் 7% நிலப்பரப்பு கடலில் முழ்கும் அபாயம் உள்ளதாக சி எஸ் டி இ பி ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. கடல் நீர் மட்டம் காலநிலை மாற்றம், பனிப்பாறைகள் உருகுதல் போன்றவற்றால் உயர்ந்து வருகிறது. எனவே, உலகம் முழுவதும் கடலோர நகரங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். வரும் 2040 -ஆம் ஆண்டு வாக்கில் கடல் மட்டம் உயர்ந்து சென்னையின் ஏழு சதவீதம் நிலப்பரப்பு கடலில் மூழ்கும் என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் … Read more

GOAT: டீ ஏஜிங் விஜய் எப்படி இருக்காரு?.. பட்டாசா இருக்கே ‘ஸ்பார்க்’ பாடல்.. மீனாட்சி சவுத்ரி செம!

       சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தின் 3வது சிங்கிளான ‘ஸ்பார்க்’ பாடல் இன்று வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், ஜெயராம், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் ஏற்கனவே

அவரை 8-வது வரிசையில் களமிறக்கியது சரியான முடிவல்ல – ஆகாஷ் சோப்ரா அதிருப்தி

மும்பை, இலங்கை – இந்தியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 230 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வெல்லலகே 67, நிசாங்கா 56 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 231 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 58 … Read more

ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் கொல்லப்பட்டது எப்படி? – ஈரான் வெளியிட்ட பரபரப்பு தகவல்

தெஹ்ரான், காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டது. ஆனால், 110க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் … Read more

தி.மலை, காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை மாநகராட்சிகளுக்கு ஆணையர்கள் நியமனம்

சென்னை: புதிதாக உருவாக்கப்பட உள்ள திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை செயலர் டி.கார்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு: “சேலம், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஆர்.பூங்கொடி அருமைக்கண், சேலம் மாநகராட்சி துணை ஆணையராகவும், சேலம் துணை ஆணையர் -1 பி.அசோக்குமார், சேலம் நகராட்சி நிர்வாக மண்டல இயககுனராகவும், மதுரை மாநகராட்சி துணை ஆணையர்-1 கே.சரவணன், செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும், வேலூர் நகராட்சி நிர்வாக மண்டல … Read more

வயநாடு மலை உச்சியின் குகையில் சிக்கியிருந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேரை மீட்ட வனத் துறை அதிகாரிகள்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினரும் ராணுவமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள ஒரு மலை உச்சியின் குகையில் சிலர் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கல்பெட்டா ரேஞ்ச் வன அதிகாரி கே.ஹாஷிஸ் தலைமையிலான 4 பேர் … Read more

அமெரிக்க போர் கப்பல்கள், விமானங்கள் விரைவதால் மத்திய கிழக்கு நாடுகளில் திடீர் போர் பதற்றம்

வாஷிங்டன்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் படுகொலைக்கு, இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரான் சென்றார். ஜூலை 31-ல் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுக்கை அறையில் ஏற்கெனவே குண்டு வைக்கப்பட்டிருந்ததாக முன்பு தகவல் … Read more

ஆகஸ்ட் 7 முதல் புதுச்சேரி அரசுப் பள்ளி வேலை நேரம் மாற்றம்

புதுச்சேரி ஆகஸ்ட் 7 முதல் புதுச்சேரியில் அர்சுப் ப்ள்ளிகளின் வேலை நேரம் மாற்றப்பட உள்ளது. .தற்போது புதுச்சேஎரியில் அரசு பள்ளிகள் காலை 9 மணிக்கு தொடங்குகின்றன. இந்த தொடக்க நேரம் ஆகஸ்ட் 7 முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி அரசுப் பள்ளிகள் காலை 9 மணிக்கு பதிலாக 9.15 மணிக்குத் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் புதிய அட்டவணைப்படி காலை 9.15 – 9.30 வரை வழிபாடு, 9.30 – மதியம் 12.25 வரை … Read more

தலையை மட்டும் தூக்கிடாத.. அமல் டேவிஸ் நல்லா ஆடுறாரே.. ‘கோட்’ 3வது சிங்கிளை பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!

       சென்னை: தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள கோட் படத்தின் மூன்றாவது சிங்கிளான ஸ்பார்க் பாடல் தற்போது வெளியானது. அந்த பாடலில் நடிகர் விஜய்யின் டீ ஏஜிங் லுக்கை பார்த்த ரசிகர்கள் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

குடும்ப தகராறு; கோர்ட்டில் மருமகனை சுட்டு கொன்ற உதவி ஐ.ஜி.

சண்டிகார், பஞ்சாப் காவல் துறையில் உதவி ஐ.ஜி.யாக இருப்பவர் மல்வீந்தர் சிங் சித்து. இவருடைய மருமகன் ஹர்பிரீத் சிங். நீர்ப்பாசன துறையில், இந்திய வருவாய் பணி அதிகாரியாவார். இவருடைய மாமனார் சித்து பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில், சித்து மற்றும் சிங் குடும்பத்தில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக, சண்டிகார் குடும்ப நீதிமன்றத்திற்கு இருவரும் சென்றுள்ளனர். இருதரப்பினருக்கும் இடையே, கோர்ட்டில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி நடந்து வந்தது. அப்போது, சித்து … Read more