எகிப்தில் புதிதாக பதவியேற்ற வெளியுறவு மந்திரிக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து

புதுடெல்லி, எகிப்தின் புதிய வெளியுறவு மந்திரி பதர் அப்துலாட்டியுடன், மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் இன்று பேசினார். அப்போது, புதிய வெளியுறவு மந்திரியாக பதவியேற்று கொண்டதற்காக அவருக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவருடன் வருங்காலத்தில் பணியாற்றுவதற்காக காத்திருக்கிறேன் என்றும் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் மந்திரி ஜெய்சங்கர் பதிவிட்டு உள்ளார். இந்தியா மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளும் உலகின் மிக பழமையான நாகரீகங்களை கொண்டவை. இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளுக்கான … Read more

யாழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி

• உதயன் பணி மனைக்கும் சென்றார். இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டியது அவசியமென்பதை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன, மத பேதமின்றி நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் இலங்கையர் என்ற வகையில் அனைவரும் ஒன்றுபட வேண்டுமெனவும் வலியுறுத்தினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (03) பிற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் பணிமனைக்கு சென்றிருந்தோடு, அதன் ஊழியர்களையும், ஏனைய ஊடகவியலாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது உதயன் பத்திரிகை பணிமனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், … Read more

உலக அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த தாய் – மகள் சாதனை!

சென்னை: சென்னையைச் சேர்ந்த தாயும் மகளும் ஒன்றாக அழகி போட்டியில் பங்கேற்றதோடு, மிஸ் மற்றும் மிஸஸ் அழகி போட்டிகளில் பட்டங்களை வென்று அசத்தியுள்ளனர். 1984-ம் ஆண்டு முதல் திருமதி உலக அழகி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைபெறும் இந்த போட்டியில் 70க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பல சாதனைகளைச் செய்த பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர். ஆனால் இப்படியொரு சாதனையை இந்திய அளவில் முதல் முறையாக நடந்தேறியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ராயல் க்ரூஸ் என்ற கப்பலில் … Read more

உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் போலீஸார் ஆய்வு

புதுடெல்லி: ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட நிலையில் உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம், சாபாத் ஹவுசின் பாதுக்காப்பினை காவல்துறை பலப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்தவர்களின் கூற்றுப்படி, தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள இரண்டு இஸ்ரேலிய கட்டிடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பினை உறுதி செய்வது குறித்து மூத்த அதிகாரிகள் கூட்டம் ஒன்றை நடத்தினர். ஏற்கெனவே அந்தப் பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த இரண்டு கட்டிடங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் … Read more

நெரிசல் நேரங்களிலாவது மின்சார ரயில்கள் இயக்க இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை மின்சார ரயில்களை நெரிசல் நேரங்களிலாவது இயக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வெளியிடுள்ள செய்திக்குறிப்பில், ”ஆகஸ்டு 3ம் தேதி முதல், ஆகஸ்டு 14ம் தேதி வரை, சென்னை புறநகர் ரயில்கள் பல்லாவரத்துக்கும் கூடுவாஞ்சேரிக்கும் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் வாடகை தந்து குடியிருக்க வருமானம் இல்லாத பல லட்சம் மக்கள், நகரத்தை விட்டு 30, 40 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் புறநகர்களில் குடியிருந்து … Read more

“பழிதீர்ப்போம்”.. ஹமாஸ் தலைவர் கொலை.. இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிராக சபதம் எடுத்த ஈரான்!

தெஹ்ரான்: ஈரானின் தெஹ்ரான் சென்றிருந்த ஹமாஸ் படை தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலின் இந்த தாக்குதலை அமெரிக்க அரசாங்கம் ஆதரித்துள்ளதாக ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) குற்றம்சாட்டி உள்ளது. அதற்கு உரிய முறையில் கடுமையாக பழிதீர்க்கப்படும் என ஈரான் புரட்சிகர காவல் படை சபதம் எடுத்துள்ளது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த Source Link

Pa Ranjith: மாளவிகாகிட்ட கொடூரமா நடந்துக்கிட்டேன்.. பா ரஞ்சித் சொன்ன விஷயம்!

சென்னை: நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்து

வீடுதோறும் மூவர்ண கொடியை ஏற்றுங்கள்; அமித்ஷா வேண்டுகோள்

புதுடெல்லி, நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், கடந்த 2 ஆண்டுகளாக, வீடுதோறும் மூவர்ண கொடியை ஏற்றும் நிகழ்வு ஒரு தேசிய இயக்கம் ஆக உருவெடுத்து உள்ளது. இது ஒவ்வோர் இந்தியரிடத்திலும் அடிப்படை ஒற்றுமையை விழித்தெழ செய்துள்ளது. இந்த இயக்கம் இன்னும் வலுப்பட வேண்டும் என்று குடிமக்கள் அனைவரிடமும் வேண்டுகோளாக வைக்கிறேன். அதே ஆர்வத்துடன் மீண்டும் அனைவரும் பங்கேற்க … Read more

இந்தியாவுக்கு எதிராக என்னுடைய திட்டம் இதுதான் – ஆட்டநாயகன் வெல்லலகே பேட்டி

கொழும்பு, இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 230 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வெல்லலகே 67, நிசாங்கா 56 ரன்கள் … Read more

ஓட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் – 32 பேர் பலி

மொகதிசு, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா. இங்கு அல்கொய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப், ஐஎஸ் போன்ற பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்புப்படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், தலைநகர் மொகதிசுவில் உள்ள லிடோ கடற்கரை அருகே பிரபல ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்குள் நேற்று இரவு புகுந்த அல் … Read more