Paris Olympics: நூலிழையில் வெளியேறிய மனு பாக்கர் – இந்தியாவின் நான்காவது பதக்கம் தவறியது எப்படி?

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் மனு பாக்கர் தனது மூன்றாவது பதக்கத்தை இன்று வெல்வார் என எதிர்பார்க்க நிலையில் நூலிழையில் தோற்று நான்காம் இடம் பிடித்திருக்கிறார். மனு பாக்கர் எங்கே தவறிழைத்தார்? மனு பாக்கர் மனு பாக்கர் ஏற்கனவே 10 மீ ஏர் பிஸ்டல் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். இந்நிலையில், 25 மீ ஏர் பிஸ்டல் பிரிவிலும் மனு பாக்கர் கலந்துகொண்டிருந்தார். இந்தப் போட்டிக்கான தகுதிச்சுற்று நேற்று நடந்திருந்தது. தகுதிச்சுற்றில் மனு 592 புள்ளிகளைப் … Read more

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் உடல் ராமேசுவரம் கொண்டுவரப்பட்டது

ராமேசுவரம்: இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் உடல் இன்று சனிக்கிழமை ராமேசுவரத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிருடன் மீட்கப்பட்ட 2 மீனவர்களும் இன்று அதிகாலை மீன்பிடித் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஜூலை 31-ம் தேதி கடலுக்குச் சென்ற கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகின் மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகிலிருந்து மூழ்கி மீனவர் மலைச்சாமி (59) உயிரிழந்தார். மீனவர் ராமச்சந்திரன் (64) கடலில் … Read more

வயநாடு நிலச்சரிவு பலி 340-ஐ கடந்தது: மீட்புப் பணிகளை ராணுவ சீருடையில் ஆய்வு செய்த நடிகர் மோகன்லால்

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 340-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. ஐந்தாவது நாளாக இன்று (சனிக்கிழமை) மீட்புப் பணிகள் தொடரும் நிலையில் ராணுவத்தில் கவுரவ லெஃப்டினண்ட் கர்னல் பதவியில் உள்ள நடிகர் மோகன்லால் சீருடையில் வந்து ஆய்வு செய்தார். கேராவின் வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை இரண்டு பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல மலைக் கிராமங்களில் … Read more

தனுஷின் ராயன் நடத்திய வசூல் வேட்டை.. 100 கோடியை கடந்தது

Raayan Box Office Collection Day 8: கடந்த ஜூலை 26 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான ராயன் படம் தற்போது வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம்… ஏர் இந்தியா விமானங்கள் ரத்து… இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து இந்தியர்கள் தாங்கள் இருக்கும் நகரத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் தாங்கள் இருக்கும் இடத்திலேயே பத்திரமாக இருக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஈரானில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அந்நாட்டின் மீது தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. அதேவேளையில், லெபனான் … Read more

டிவி, மொபைல் பார்க்க கூடாதுனு கொடுமைப்படுத்துறாங்க.. பெற்றோர் மீது புகார் அளித்த குழந்தைகள்

போபால்: மத்தியப்பிரதேசத்தில் டிவி, மொபைல் பார்க்கக் கூடாதென்று தடுத்ததாகக் கூறி பெற்றோர் மீது குழந்தைகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இவர்களது குடும்பத்தில் வேறு சில பிரச்னைகளும் இருந்ததால் குழந்தைகள் தங்களது அத்தை வீட்டில் வசித்து வந்ததாகவும், உணவு வழங்காமலும், அடித்து துன்புறுத்தியதாகவும், செல்போன், தொலைக்காட்சி பார்க்க தடை செய்ததாகவும் கூறி புகார் தெரிவித்துள்ளனர். Source Link

Jayam Ravi: மிரட்டலான ஜாம்பி அனுபவத்திற்கு தயாராகுங்க மக்களே.. மிருதன் 2 பட வேலைகள் துவக்கம்!

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் அடுத்தடுத்து பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை படங்கள் ரிலீசாக உள்ளன. இதில் பிரதர் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் மிருதன் 2 படத்தில் ஜெயம் ரவி இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன்ஸ் வேலைகளை சக்தி சௌந்தரராஜன்

யாழில் சர்வமத தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார் ஜனாதிபதி

யாழ்.பேராயரையும் சந்தித்து ஆசி பெற்றார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நல்லை ஆதீனம் ஸ்ரீ சோமசுந்தரம் அவர்களை நேற்று (02) சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். அதனையடுத்து, யாழ்.ஆயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, யாழ்.ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அதனைடுத்து நேற்று பிற்பகல் யாழ். நாக விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிகளைப் பெற்றுக்கொண்டார். புனித தலத்தை சென்றடைந்த ஜனாதிபதி முதலில் புத்த ஸ்தூபிக்குச் … Read more

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் கொலைகள் சர்வசாதாரணமாகிவிட்டன: அண்ணாமலை

சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கொலைகள் சர்வசாதாரணமாகியிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கோவையில் நேற்று வழக்கறிஞர் உதயகுமார் என்பவர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கொலைகள் சர்வசாதாரணமாகியிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் … Read more