யானைகளின் கருணையால் உயிர் பிழைத்த குடும்பம் @ வயநாடு

திருவனந்தபுரம்: முண்டக்கையில் உள்ள ஹாரிசன்ஸ் தேயிலை தோட்டத்தில 18 ஆண்டுகளாக தேயிலை பறிக்கும் தொழிலாளி சுஜாதா அனிநஞ்சிரா. இவர், தனது மகள் சுஜிதா, மருமகன் குட்டன், பேரக்குழந்தைகள் சூரஜ் (18), மிருதுளா (12) ஆகியோருடன் வசித்து வந்தார். நிலச்சரிவின் போது இவரது குடும்பம் யானையின் கருணையால் உயிர் தப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுஜாதா கூறியதாவது: திங்கள்கிழமை இரவே தொடங்கிய மழை நள்ளிரவைத் தாண்டி செவ்வாய்க்கிழமை 4 மணிக்கு கனமழையாக மாறியது. இதையடுத்து, வீட்டை தண்ணீர் சூழ … Read more

ஆகஸ்ட் 14 வரை கடற்கரை – தாம்பரம் இடையே மேலும் சில மின்சார ரயில்கள் ரத்து .

சென்னை ஆகஸ்ட் 14 வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மேலும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 9.20 முதல் பகல் 1.30 வரையும், இரவு 10.30 முதல் அதிகாலை 2.45 மணி வரையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூடுதலாக தாம்பரத்தில் இருந்து காலை 7.17, 8.19 , 9.22, 9.40, … Read more

சூப்பர் ஸ்டார் படம் என்பதால் வேட்டையனில் நடிக்கவில்லை – என்னங்க மஞ்சு வாரியர் இப்படி சொல்லிட்டாங்க

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் என்றால அது வேட்டையன் படம் தான். அந்த படத்தினை ஜெய் பீம் படத்தினை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நடந்து முடிந்தது. படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர்

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ், 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் பேட்மிண்டனில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், சீன தைபே வீரர் சோ டைன் சென் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 19-21, 21-15, 21-12 என்ற செட் கணக்கில் சோ டைன்-ஐ வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் … Read more

.பாராளுமன்றம் ஆகஸ்ட் 6 முதல் 9 வரை கூடும்

பாராளுமன்றம் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். அந்த வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் நேற்று (02) முற்பகல் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அதற்கமைய, ஆகஸ்ட் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் … Read more

“நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படலாம் என வதந்தி பரப்பினால் நடவடிக்கை” – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

உதகை: வயநாட்டை போல நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்படும் என சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா எச்சரித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக கொட்டி தீர்த்த கனமழை தற்போது குறைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்கள் பெய்த மழை காரணமாக, 300-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை மாற்றும் பணியில் … Read more

‘நீட்’ நுழைவு தேர்வை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

புதுடெல்லி: இளநிலை நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இதில், வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு விசாரித்து … Read more

ஹமாஸ் தலைவர் தங்கிய கட்டிடத்தில் பல மாதங்களுக்கு முன்பே குண்டு வைத்தது அம்பலம்

டெஹ்ரான்: ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் பல மாதங்களுக்கு முன்பே வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டு, ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டதாக ஆய்வு நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா. இவர் ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள சமீபத்தில் ஈரான் சென்றிருந்தார். விழாவில் பங்கேற்ற பிறகு, வடக்கு டெஹ்ரானில் ஈரான் ராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ள ‘நெசாத்’ என்ற விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். ஈரான் … Read more

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மேலும் தொடரும் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் மேலும் தொடரும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.   தற்போது டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது.  இதில் சென்னையில் தொடரும் போக்குவரத்து நெரிசல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுளது. இதற்கு மாநிலங்களவையில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார். அமைச்ச்ர் நிதின் கட்கரி ”சென்னை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மேலும் தொடரும்   ஏனெனில் சென்னையில் அமைக்கப்பட்டு வரும் மூன்று முக்கிய சாலை பணிகள் … Read more

Actress Andrea: நான் அரசியல்ல எல்லாம் என்ட்ரி ஆகமாட்டேன்.. நடிகை ஆண்ட்ரியா ஸ்ட்ராங்க்!

புதுச்சேரி: நடிகை ஆண்ட்ரியா பாடகியாகவும் நடிகையாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பல்வேறு தளங்களில் சிறப்பாக பயணம் செய்து வருகிறார். சர்வதேச அளவில் பல்வேறு இசை கச்சேரிகளில் பங்கேற்று ஆடலுடன் கூடிய பாடலை கொடுத்து ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் ஆண்ட்ரியா. 40 வயதை நெருங்கிய நிலையிலும் தன்னுடைய பிட்னசையும் கவர்ச்சியையும் சிறப்பாக மெயின்டெயின் செய்து வரும் ஆண்ட்ரியா