கிளிநொச்சியில் மட்டுப்படுத்தப்பட்ட நேரத்திற்கு நீர் விநியோகம் : தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

தற்போது கிளிநொச்சியில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை காரணமாக பொது மக்களின் நீர்ப் பாவனையானது வழமைக்கு மாறான அதிகமாக காணப்படுகின்றமையால் நீர் மட்டுப்படுத்தப்பட்ட நேர ஒழுங்கில் விநியோகம் மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதாவது, கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி திறனை விட மக்களின் பாவனை அதிகரித்துள்ளமையால் நீர் விநியோகத்தை 24 மணிநேரமும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வெப்பமான காலநிலை நிலவிவருவதன் காரணமாக மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது … Read more

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருச்சி: சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் 1.50 லட்சம் கனஅடி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையிலிருந்து பிரியும் காவிரியில் 35 ஆயிரம் கனஅடியும், கொள்ளிடம் ஆற்றில் 1.20 லட்சம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே காவிரி, கொள்ளிடம் என 2 ஆறுகளிலும், தண்ணீர் இருகரைகளையும் தொட்டபடி ஆர்ப்பரித்து ஓடுகிறது. இந்நிலையில், இந்த இரண்டு ஆறுகளிலும் பொதுமக்கள் … Read more

தரவு பாதுகாப்பு ஆணைய விதிமுறைகள் தயாரிப்பில் மத்திய அரசு: மக்களவையில் அமைச்சர் ஜிதின் பிரசாதா தகவல்

புதுடெல்லி: தரவு பாதுகாப்பு ஆணையத்துக்கான விதிமுறைகள் தயாரிப்பில் உள்ளதாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு பதிலாக இதனை தெரிவித்தார். இதுகுறித்து தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பியான கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா அளித்த எழுத்துபூர்வப் பதிலில், “டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் 2023(டிபிடிபி) நாடாளுமன்றத்தில் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி நிறைவேற்றப்பட்டது. … Read more

ரம்யாவை அறைந்த கார்த்திக்.. பரபரப்பில் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

Karthigai Deepam Today (2.8.2024) Episode: இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட்டில் என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத் தவறாதீர்கள்.

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேர்த்தில் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, … Read more

Venkat prabhu: கோட் படத்தில் விஜய்யை வேற மாதிரி காட்டியிருக்கேன்.. வெங்கட்பிரபு உற்சாகம்!

       சென்னை: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளது.

இந்தியா-இஸ்ரேல் 'ஏர் இந்தியா' விமான சேவை தற்காலிக ரத்து

புதுடெல்லி, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தாக்குதல் நடத்தியது. அதை தொடர்ந்து இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் இந்தியா இடையிலான விமான சேவையை ‘ஏர் இந்தியா’ நிறுவனம் ரத்து செய்தது. பின்னர் சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு கடந்த மார்ச் 3-ந்தேதி மீண்டும் விமான சேவையை ‘ஏர் இந்தியா’ நிறுவனம் தொடங்கியது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் இந்தியாவின் தலைநகர் டெல்லி இடையே வாரத்திற்கு 4 விமானங்களை ‘ஏர் இந்தியா’ … Read more

டி.என்.பி.எல். 2-வது தகுதி சுற்று: திண்டுக்கல் அபார பந்துவீச்சு… திருப்பூர் 108 ரன்களில் ஆல் அவுட்

சென்னை, நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணியை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சாய் கிஷோர் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய திருப்பூர் அணியின் பேட்ஸ்மேன்கள் திண்டுக்கல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். திருப்பூர் அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப … Read more

அமெரிக்கா, ரஷியா இடையே கைதிகள் பரிமாற்றம்

வாஷிங்டன், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. மேற்கத்திய நாடுகளில் உளவு, பயங்கரவாதம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதாக ரஷியா, பெலாரசை சேர்ந்த சிலரை அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அதேபோல், ரஷியா, பெலாரசில் உளவு, பயங்கரவாதம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா, ஜெர்மனி, போலாந்து, ஸ்லோவேனியா, நார்வே போன்ற நாடுகளை சேர்ந்தவர்களை ரஷியா, பெலாரஸ் கைது செய்து … Read more