அடுத்த ஆண்டு முதல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம்

• இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் என்றும் மறந்துவிடல்லை – யாழ். மாவட்ட இளைஞர்கள் முன்னிலையில் ஜனாதிபதி தெரிவிப்பு. இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த 4 வருடங்களாக இலங்கையின் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியவில்லை என … Read more

Lebanon: மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம்; `லெபனானுக்குச் செல்ல வேண்டாம்'- இந்தியா எச்சரிக்கை

இஸ்ரேல் நாட்டிற்கும் ஹமாஸ் அமைப்பிற்குமிடையில் பல மாதங்களாகப் போர் நிகழ்ந்து வரும் நிலையில், கோலன் ஹைட்ஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் தன்னுடைய கவனத்தை லெபனான் மீது திருப்பியுள்ளது‌. கோலன் ஹைட்ஸ் தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த 12 குழந்தைகள் இறந்திருப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. இஸ்ரேல் தரப்பிலிருந்து இதைச் செய்தது ஹிஸ்புல்லா அமைப்பு என்று கூறப்பட்டாலும் ஹிஸ்புல்லா அமைப்பு இதை மறுத்துள்ளது. இஸ்ரேல் தாக்குதல் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை, கடந்த செவ்வாய் … Read more

வயநாடு நிலச்சரிவு எதிரொலி: கேரள, தமிழக அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக கேரள அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழகத்தில் எடுக்கப்படவுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அண்மையில் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, 330-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த நிலச்சரிவு … Read more

வயநாட்டுக்கு நம்பிக்கை ‘பாலம்’ அமைத்த மேஜர் சீதா ஷெல்கேவும், தம்பிகளும் | HTT Explainer

மேப்பாடி: கேரளாவில் வயநாடு பகுதியில் கடந்த திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மண்ணில் புதைந்தனர். இங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 330-ஐ தாண்டிவிட்டது. மீட்பு பணியில் பாதுகாப்பு படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நிலச்சரிவின் காரணமாக காரணமாக பல இடங்கள் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக, சூரல்மலா – முண்டக்கை பகுதியை இணைக்கும் முக்கிய பாலம் துண்டிக்கப்பட்டதால் முண்டக்கை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாறியது. அங்கு மீட்புக் குழு செல்வதிலும் … Read more

‘கங்குவா’ படத்தில் சூர்யாவின் சொந்த தம்பி! என்ன கதாப்பாத்திரம் தெரியுமா?

Kanguva Movie Karthi Cameo : சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படத்தில் கார்த்தி இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.   

சென்னையில் மிஸ் யுனிவர்ஸ் தமிழ்நாடு ஆடிஷன்..! இறுதிப்போட்டியில் 25 பேர்

Miss Universe Tamil Nadu 2024 finalists : சென்னையில் வரலாற்று சிறப்பு மிக்க தமிழ்நாடு மிஸ் யுனிவர்ஸ் ஆடிசன் நடைபெற்றது. இதில் 25 போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். 

மண்ணோடு மண்ணாக புதைந்த முண்டக்கை… ஓராண்டுக்கு முன் குதூகலமாக விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள்… வைரல் வீடியோ…

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகியுள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த 8000க்கும் மேற்பட்டோர் 80க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் இருந்து 1000க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் 318 பேர் உயிரிழந்துள்ளனர். முண்டக்கை பகுதியில் உள்ள பள்ளி கட்டிடங்கள் சேதமான நிலையில் அங்கு தோண்ட தோண்ட பள்ளி புத்தகங்களும் புத்தக பைகளும் ஏராளமாக குவிந்துவருகிறது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கடந்த … Read more

Actor Vikram: வெல்ல வா வா.. ஆதியோனே.. வெளியானது தங்கலான் படத்தின் வார் பாடல்!

சென்னை: நடிகர் விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படம் சுதந்திரப் போராட்ட காலத்தையொட்டி கேஜிஎஃப் பகுதிகளில் தங்கத்தை கண்டுபிடிக்கும் பணிகளில் பிரிட்டீஷாருடன் இணைந்து செயலாற்றிய தமிழக மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரமுடன் மாளவிகா மோதனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் வரும் ஆகஸ்ட்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங். சார்பில் 100 வீடுகள் கட்டித்தரப்படும்: ராகுல்காந்தி

வயநாடு, கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து 2-வது நாளாக நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல் கூறினார். இந்த நிலையில், வயநாட்டில் ராகுல்காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “மிகவும் மோசமான பேரிடர் நிகழ்ந்துள்ளது. நேற்று முதல் நான் இங்கு இருக்கிறேன். நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து வயநாடு மாவட்ட நிர்வாகத்தினரிடமும், பஞ்சாயத்து நிர்வாகிகளுடனும் இன்று ஆலோசனை நடத்தினேன். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு … Read more

வயநாடு நிலச்சரிவு: ஜோ பைடன் இரங்கல்

வாஷிங்டன், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 300-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல்களை … Read more