வினாத்தாள் கசிந்தும் நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? – சுப்ரீம் கோர்ட்டு விளக்கம்

டெல்லி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 4ம் தேதி வெளியானது. இதனிடையே, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, பீகார் தலைநகர் பாட்னாவில் சில தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல், குஜராத், ராஜஸ்தான், மராட்டியம் போன்ற … Read more

மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்தால் அனைத்து இலங்கையர்களையும் அழைத்து வர தயார்

மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்தால் அனைத்து இலங்கையர்களையும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 05 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இன்று (02) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும்வரை, அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் வழங்குவதற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மத்திய கிழக்கில் பணிபுரியும் … Read more

“பேங்க் கிளர்க் வேலை இனி இருக்காது..?" – திகில் கிளப்பும் ரிப்போர்ட்; RBI கவர்னர் சொன்னது என்ன?

ஆர்.பி.ஐ கவர்னர் சக்தி காந்த தாஸ், “சமீபத்தில் ‘கரன்சி மற்றும் நிதி’ என்ற தலைப்பில், ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நிதித்துறை சந்தித்து வரும் சவால்கள் குறித்து தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, டெக்னாலஜி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் காரணமாக ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் நடுத்தர பணியாளர்கள், கிளர்க் போன்ற பணிகளின் தேவை இனி இல்லாமல் போவதற்கும் வாய்ப்பிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், உலகளவில் வங்கித்துறையில் கீழ்மட்ட பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து, தொழில்நுட்ப வல்லுனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது. … Read more

தாம்பரம் ரயில் நிலையத்தில் ஜூலை 14 வரை பராமரிப்பு பணி: வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறும்போது, அவ்வழித்தடத்தில் கூடுதலாக மாநகர பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: “தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை (ஆக.3) முதல் 14-ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், இரவு 10 மணி முதல் 11.59 வரையும் … Read more

டெல்லி அரசு தங்கும் விடுதியில் ஒரே மாதத்தில் 14 பேர் உயிரிழப்பு: நீதி விசாரணைக்கு உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள அரசு தங்கும் விடுதியான ஆஷா கிரண் தங்கும் விடுதியில் கடந்த ஜூலை மாதம் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து நீதித் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, அம்மாநில அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். டெல்லியில் ரோஹினி பகுதியில் டெல்லி அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆஷா கிரண் தங்கும் விடுதியில் பல்வேறு மர்ம மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். கடந்த பிப்ரவரி … Read more

வயநாடு நிலச்சரிவு: நிதியுதவி அளித்த சினிமா பிரபலங்கள்! யார் எவ்வளவு கொடுத்தது?

Tamil Cinema Celebrities Who Donated For Wayanad Landslide : வயநாட்டில், மழையால் மண் சரிவு ஏற்பட்டு 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திடிருப்பதை தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?  

கிசுகிசு : சூட்டிங் சென்ற குடில் கட்சி இயக்குநர் மீது கொந்தளிப்பில் நிர்வாகிகள்..!

Gossip, கிசுகிசு : சினிமாவை இயக்குவதைப்போல் கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் குடில் கட்சி இயக்குநர் இப்போது படப்பிடிப்புக்காக தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டதால் அவரின் தம்பிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

ஒலிம்பிக் ஹாக்கி : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா – 52 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி

India Australia Hockey match Highlights : பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இப்போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியை பதிவு செய்தது. அத்துடன் ஒலிம்பிக் போட்டியில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாறு படைத்திருக்கிறது. இப்போட்டி தொடங்கிய 12 மற்றும் 13 வது நிமிடங்களில் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை போட்டது. … Read more

போட் விமர்சனம்: இயக்குநர் சிம்புதேவனின் மற்றுமொரு சுவாரஸ்ய ஐடியா; ஆனால் படகு கரை சேர்கிறதா?

1943-ம் ஆண்டு சென்னை நகரத்தின் மீது ஜப்பான் போர் விமானங்கள் குண்டு வீசப் போவதாக வந்த செய்தி, சென்னை மாகாண மக்களையும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களையும், காவல்துறையையும் கதிகலங்க வைக்கிறது. இந்நிலையில், பிரிட்டீஷாரால் கைது செய்யப்பட்ட தன் தம்பியைக் கூட்டிவர, சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மீனவரான குமரன் (யோகி பாபு), தனது பாட்டி முத்துமாரியுடன் (குலப்புள்ளி லீலா) பிரிட்டிஷ் காவல்துறையை அணுக, அங்கே அவர் அவமானப்படுத்தப்படுகிறார். இரண்டு நாள்களில் தங்கைக்குத் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், தம்பியை மீட்க முடியாதச் … Read more

டெல்லியில் யூபிஎஸ்சி தேர்வுக்கு பயின்றுவந்த மாணவர்கள் 3 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியான விவகாரம்… சிபிஐ விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு…

டெல்லியில் கடந்த ஜூலை 27ம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி யூபிஎஸ்சி பயிற்சி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் அடித்தளத்தில் வெள்ள நீர் புகுந்ததை அடுத்து அங்கிருந்து வெளியேற முடியாமல் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த பயிற்சி மையத்தின் தலைமை செயல் அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். … Read more