எந்த நிறுவனத்தின் ஃபைபர் திட்டம் மிகவும் மலிவானது? ஏர்டெல் Vs ஜியோ! இல்லை பிஎஸ்என்எல்!

சிறந்த பிராட்பேண்ட் நிறுவனங்களின் பட்டியலில், ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவை முதலிடத்தில் வருகின்றன. மூன்று தொலைதொடர்பு நிறுவனங்களுமே ஃபைபர் திட்டங்களை செயல்படுத்திவருகின்றன. இந்த மூன்று நிறுவனங்களின் மலிவான ஃபைபர் திட்டங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.. இந்த மூன்றில் எது உங்களுக்கு சிறந்தது என்பதை முடிவு செய்ய உதவியாக இருக்கும். அண்மையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தின. இதனால் பலர் பிஎஸ்என்எல் திட்டத்திற்கு மாறினார்கள். தற்போது மக்களின் கவனம் பிஎஸ்என்எல் … Read more

100 முதல் 200 கி.மீ. தூரத்தில் ஒரே ரயில்வே மண்டலத்தில் உள்ள நகரங்களை இணைக்க ‘வந்தே மெட்ரோ’ ரயில் திட்டம் : ரயில்வே அமைச்சர்

100 முதல் 200 கி.மீ. தூரத்தில் ஒரே ரயில்வே மண்டலத்தில் உள்ள நகரங்களை இணைக்க ‘வந்தே மெட்ரோ’ ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவா நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். இந்த மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்த அவர் இதனால் விரைவான ரயில் போக்குவரத்து ஏற்படும் என்று கூறினார். சென்னை கடற்கரை மற்றும் … Read more

Raayan: போடு வெடிய.. ஆஸ்காரில் நுழைந்த ராயன்.. இயக்குநராக காலரை தூக்கிவிடும் தனுஷ்!

சென்னை: தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை தானே கதை திரைக்கதை அமைத்து இயக்கி நடித்தும் உள்ளார். ராயன் கடந்த ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ராயன் படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர்

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன

பொதுமக்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் இலங்கை சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, சீனாவில் இந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக் கிழங்கு ஒரு கிலோ கிராம் 240 ரூபாவாகவும், வெள்ளை கௌபி ஒரு கிலோ கிராம் 998 ரூபாவாகவும், இந்திய பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம் 265 ரூபாவாகவும், சிவப்பு கௌபி ஒரு கிலோ கிராம் 940 ரூபாவாகவும், கீரி சம்பா ஒரு கிலோ கிராம் 254 ரூபாவாகவும், … Read more

Wayanad Landslide: நொடியில் கரைந்த உறவுகள்… கண்ணீர் வற்றி கலங்கி நிற்கும் இளம்பெண் ஸ்ருதி

ஆசையாய் கட்டிய வீடு, வாங்கிய வாகனங்கள், சேர்த்துவைத்த பணம், நகை என எது போனாலும் உறவுகள் அருகிலிருந்தால் இழந்த எதையும் மீண்டும் பெற்றுவிடலாம் என்பதே ஒவ்வொருவரின் நம்பிக்கை. ஆனால், அந்த நம்பிக்கையை சுக்கு நூறாய் உடைத்து நூற்றுக்கணக்கானவர்களைக் குடும்பங்களின்றி நிற்கதியாய் நிற்கவைத்திருக்கிறது வயநாடு நிலச்சரிவு. Wayanad Landslide இதுவரையில், மட்டும் 300-க்கும் மேற்பட்டோரின் உயிர்களை இந்த இயற்கை பேரழிவு பறித்திருக்கிறது. காணாமல் போனவர்கள் பலரை மீட்புக் குழுவினர் தேடிவரும் நிலையில் இந்த பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் … Read more

மீனவர்கள் பிரச்சினைக்கு இலங்கையுடன் பேசி நிரந்தர தீர்வு: மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: ராமேசுவரம் மீனவர் உயிரிழந்ததற்கு காரணமான இலங்கை கடற்படையினருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், இந்தப் பிரச்சினைக்கு இலங்கை நாட்டுடன் பேசி நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதிலிருந்து, தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி இடங்களில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும்போது இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும், அவர்களுடைய உடைமைகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக இருந்து வருகின்ற … Read more

மணிப்பூரில் முகாம்களில் தங்கி உள்ள மக்கள் மறுவாழ்வு கோரி போராட்டம்: பாதுகாப்புப் படையினர் தடுத்ததால் மோதல்

இம்பால்: மணிப்பூரில் முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் மறுவாழ்வு கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்ததால் இருதரப்பினர் இடையே மோதல்எழுந்தது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்தாண்டு மே மாதம் இரு தரப்பினர் இடையே இனக் கலவரம் ஏற்பட்டது. இதில் 226 பேர் உயிரிழந்தனர். 11,133 வீடுகள் எரிக்கப்பட்டன. 59,000 பேர் தங்கள் வீடுகளைகாலி செய்து வேறு இடங்களுக்குசென்றுவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் இன்னமும் தங்கியுள்ளனர். இந்நிலையில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அகாம்பட் என்ற இடத்தில் … Read more

BOAT Review: போட் திரை விமர்சனம்.. கரை சேர்ந்ததாரா யோகி பாபு?

BOAT Movie Review: சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்து வெளியாகியுள்ள போட் திரைப்படத்தின் விமர்சனத்தை கீழே விரிவாக காணலாம்.

Chutney Sambar Review: யோகி பாபுவின் பீல் குட் டிராமா! – சுவைக்கிறதா சட்னி சாம்பார்?

தனது டிரேட்மார்க் பீல் குட் காமெடி டிராமா ஜானரிலேயே இந்த `சட்னி சாம்பார்’ வெப் சீரிஸை எடுத்திருக்கிறார் இயக்குநர் ராதா மோகன். ஊட்டியில் ‘அமுதா கஃபே’ என்ற பாரம்பரிய உணவகத்தை நடத்தி வருகிறார் ரத்னசாமி (நிழல்கள் ரவி). திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கேன்சரால் மோசமான உடல்நிலையில் இருக்கிறார். அந்தச் சமயத்தில் தனது மகனான கார்த்திக்கிடம் (கயல் சந்திரன்) ஒரு கோரிக்கை வைக்கிறார். Chutney Sambar Review தான் திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணுடன் ‘லிவ் இன்’ … Read more

4 நாட்களுக்குப் பிறகு 4 பேர் உயிருடன் மீட்பு… வயநாட்டில் தேடுதல் பணி தீவிரம்…

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்களுக்குப் பிறகு 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில் தேடுதல் பணி தீவிரமடைந்துள்ளது. முண்டகைக்கு அருகே படவெட்டிக்குன்னு எனும் இடத்தில் நிலச்சரிவில் சிக்கித் தவித்து வந்த 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் இன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சிறிய ரக ஹெலிகாப்டர் மூலம் அவர்களை ராணுவத்தினர் மீட்டுள்ள நிலையில் மேலும் சிலர் உயிருடன் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.