Doctor Vikatan: சாப்பாட்டுக்கு முன் 72, சாப்பிட்ட பிறகு 98… ரத்தச் சர்க்கரை அளவு சரிதானா?

Doctor Vikatan: என் வயது 46. நான் என்னுடைய சர்க்கரை அளவை சுயமாகப் பரிசோதனை செய்து கொண்டதில்  சாப்பாட்டுக்கு முன் 72, சாப்பாட்டுக்குப்  பின் 98 என்று வந்தது. இது சரியான அளவா?   இந்திய சூழலுக்கான சர்க்கரை அளவு சர்வதேச பட்டியலுக்கு மாறுபட்டது என்பது உண்மையா? -சோமசுந்தரம், மதுரை, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த  லேப்ராஸ்கோப்பிக் மற்றும் பாரியாட்ரிக் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெயந்த் லியோ. லேப்ராஸ்கோப்பிக் மற்றும் பாரியாட்ரிக் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெயந்த் லியோ நீங்கள் … Read more

கொள்ளிடம் ஆற்றுக்குள் சாய்ந்து விழுந்த உயர் மின்னழுத்த கோபுரம்: பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்

திருச்சி: திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகே உள்ள, ஒரு லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் (110 கேவி) உயர் மின்னழுத்த ராட்சத கோபுரம், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஆற்றில் சாய்ந்து விழுந்தது. மேட்டூர் அணை நிரம்பி விட்டதால் அணைக்கு வரும் 1.50 லட்சம் கன அடி தண்ணீர் முழுவதுமாக காவிரியில் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையிலிருந்து காவிரியில் 35 … Read more

வயநாடு மாவட்டம் முண்டக்கை பகுதியில் மிகப் பெரிய அளவில் மீட்புப் பணி

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகளில் மீட்புப்பணிகள் நேற்று மூன்றாவது நாளாகநடைபெற்றது. சேறும் சகதியுமான இடங்கள்,கட்டிட இடிபாடுகள், மழை உள்ளிட்ட பாதகமாக சூழ்நிலையில் மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். இதில் முண்டக்கை பகுதிபரந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வரும் மாநில வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் கூறியதாவது: முண்டக்கை பகுதியில் ராணுவம், … Read more

ரத்தன் டாடாவின் வருகையால் மீண்டும் சூடுபிடிக்கும் பிஎஸ்என்எல் நெட்வொர்க்!

டெலிகாம் துறையில் வெற்றிகரமாக மீண்டும் களமிறங்கும் டாடா நிறுவனத்தின் ஒரு சிறிய முயற்சி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மீது மக்களின் விருப்பத்தை அதிகரித்தது. அதன் பின்னணியில் இருப்பது டாடா தான். புதிதாக லட்சக்கணக்கான மக்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம் கார்டுகளை வாங்கத் தொடங்கிவிட்டனர். இதன் முதல் அடியாக, 13 மாதம் வேலிடிடி கொண்ட ரீசார்ஜ் திட்டங்களைத் தொடங்கியது.  டாடா நிறுவனம், பிஎஸ்என்எல்-இல் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதால், இனிமேல் நெட்வொர்க் ராக்கெட் வேகத்தில் கிடைக்கும். தற்போது தனியார் தொலைதொடர்பு … Read more

ஓகேனக்கல்லில் கடும் வெள்ளப் பெருக்கு : வீடுகளில் சிக்கிய பொதுமக்கள்

ஒகேனக்கல் ஓகேனக்கல்லில் காவிரி ஆற்றில் ஏர்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கரையோர பொதுமக்கள் வீடுகளுக்குள் சிக்கியுள்ளனர். தென்மேற்கு பருவமழை கர்நாடக, கேரள மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  எனவே கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதையொட்டி தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் … Read more

விஜய் அரசியல் பற்றி என்ன நினைக்கிறீங்க? நடிகர் விமல் பதிலால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.. என்னாச்சு?

திருச்செந்தூர்: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி உள்ளார். 2026ல் தமிழகத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தயாராகி வருகிறார். இந்நிலையில் தான் அவர் கட்சி தொடங்கி இருப்பது பற்றிய கேள்விக்கு நடிகர் விமல் சொன்ன பதில் என்பது விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் விமலை Source Link

ஆடி 18க்கு செம ட்ரீட்.. குடும்பத்தோட பாக்கலாம்.. இன்று ரிலீஸ் ஆகும் படங்கள்!

சென்னை: இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவுக்கு என்று எப்போதும் ஒரு மார்க்கெட் உண்டு. நூறு கோடிகளை அசால்ட்டாக வசூல் செய்யும் படங்கள் ரிலீஸ் ஆவது ஒரு புறம், நல்ல படங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு ஒரு புறம், கதாநாயக பிம்பத்தை மைய்யப்படுத்தி உருவாக்கப்படும் படங்கள் ஒரு புறம் என ஆண்டுக்கு குறைந்தது 200இல் இருந்து 300

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலைமை தொடர்ந்தால் அதற்கு முகங்கொடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

மத்திய கிழக்கில் நிலவும் பதட்ட நிலை தொடர்ந்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார்நிலைக்காக மூன்று விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார். சர்வதேச செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், அதன் காரணமாக நாடு வீழ்ச்சியடையும் வரை பார்த்துக்கொண்டிருக்கத் தேவையில்லை எனத் தெரிவித்த அமைச்சர், ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் … Read more

`30-40 வயது விவாகரத்தான பெண்கள் டார்கெட்’ – ரிசர்வ் வங்கி அதிகாரி என 40 பெண்களிடம் மோசடி செய்த ஆசாமி

திருமண மேட்ரிமோனியல் இணையத்தளம் பிரபலமான பிறகு, அதன் மூலம் நடைபெறும் மோசடிகளும் அதிகரித்துள்ளது. மும்பையில் ஒருவர் தன்னை ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி என்றும், டாக்டர் என்றும் கூறி நாடு முழுவதும் ஏராளமான பெண்களிடம் மோசடி செய்துள்ளார். மும்பை நாலாசோபாராவை சேர்ந்த 38 வயது விவாகரத்தான பெண் இது தொடர்பாக கொடுத்த புகாரின் அடிப்படையில் 43 வயது பெரோஸ் அகமத் நியாஸ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய போலீஸார் மேட்ரிமோனியலில் போலி ஐ.டியை … Read more

கொளத்தூர் தொகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

சென்னை: கொளத்தூர் தொகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தினார். முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மாநகராட்சி, நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை, சிஎம்டிஏ, சென்னை குடிநீர் வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு … Read more