கேதார்நாத் யாத்திரையில் சிக்கி தவித்த 1,500 யாத்ரீகர்கள் மீட்பு: உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தகவல்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை கொட்டியதையடுத்து கேதார்நாத் யாத்திரையில் சிக்கிதவித்த 1,500யாத்ரீகர்களை பத்திரமாக மீட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கனமழையால் சேதம் உத்தராகண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு கனமழை காரணமாக சாலைகள், தரைப் பாலங்கள், மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள், விவசாய நிலங்கள் பெரிய அளவில் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் கேதார்நாத் வழித்தடத்தில் சிக்கித் தவித்த 1,500-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். குறிப்பாக, … Read more

நீட் வினாத்தாள் லீக் : 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ

பாட்னா சிபிஐ நீட் வினாத்தாள் லீக் குறித்து 13 பேர் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கடந்த மே 5-ம் தேதி நடந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதினர்.  இந்த தேர்வில் பல முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தம., பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வினாத்தாள் கசிவு பற்றிய புகார் எழுந்த நிலையில் வினாத்தாளை திருடி, அவற்றுக்கு மருத்துவ மாணவர்கள் மூலம் விடை எழுத வைத்து, … Read more

தங்கலானுக்காக விக்ரமின் ஈடுபாடு! காலை உணவு 8 பாதாம்.. வியந்து போன மகன் என்ன சொன்னாரு தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவின் வரப்பிரசாதங்களில் ஒருவராக கருதப்படுபவர் நடிகர் விகரம். இவர் ஒவ்வொரு படத்திற்காகவும் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் என்பது இன்றைக்கு சினிமா உலகில் நுழைந்துள்ள இளம் நடிகர்களுக்கு உத்வேகத்தை கொடுத்து வருகின்றது எனலாம். முக பாவணைகள் மட்டும் இல்லாமல் ஒரே படத்திற்காக (ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ) உடலின் உருவத்தினை முற்றிலுமாக மாற்றிக் கொண்டு எடையை

பணம் சம்பாதிக்க உதவும் முதலீட்டுப் பாடங்கள்… பங்குச் சந்தை பயிற்சிக்கு வாருங்கள்..!

‘பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்’ பயிற்சி வகுப்பை சென்னையில் நடத்துகிறது நாணயம் விகடன். பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் பயிற்சி அளிக்கிறார். 2024 ஆகஸ்ட் 31, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சென்னையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. கட்டணம் ஒருவருக்கு ரூ.6,000 ஆகும். நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் சொந்தமாக லேப்டாப் அவசியம் கொண்டு வர வேண்டும். ரெஜி தாமஸ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கு முதலீடு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு … Read more

‘புட்ப்ரோ 2024’ உணவு பதப்படுத்துதல் கண்காட்சி: சென்னையில் 3 நாட்கள் நடைபெறுகிறது

சென்னை: இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) 15-வது பதிப்பு “புட்ப்ரோ 2024” கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.தியாகராஜன் கூறியதாவது: இந்திய தொழில் கூட்டமைப்பு 15-வது ஆண்டாக “புட்ப்ரோ2024” கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சி ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை … Read more

கேரள முதல்வருக்கு எதிராக சமூக ஊடகப் பிரச்சாரம்

திருவனந்தபுரம்: வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அனைவரும் நிதியுதவி அளிக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் முகநூலில் அழைப்பு விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என எக்ஸ் சமூக வலைதளத்தில் ‘கோயிகோடன்ஸ் 2.0’ என்ற முகவரியில் இருந்து பிரச்சாரம் செய்யப்பட்டது. இது தொடர்பாக மாநில காவல் துறை ஊடகப் பிரிவு நேற்று கூறுகையில், “இந்தப் பிரச்சாரம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தடுக்கும் நோக்கம் கொண்டது. … Read more

வார ராசிபலன்: 02.08.2024 முதல் 08.08.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் முயற்சிகள் வெற்றி தரும் வாரம் இது. தொழில் மற்றும் வியாபார துறையினர் பரபரப்பாக செயல்படுவாங்க. உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் முக்கியத்துவம் பெறுவாங்க. பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அனுசரித்துச் செல்வது  நல்லது.  வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு மீண்டும் வந்து பேசுவாங்க. அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் … Read more

நான் பேசியது ஐஸ்வர்யா ராய்க்கு புரியல.. மனைவியுடனான முதல் சந்திப்பு குறித்து அபிஷேக் பச்சன்

மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் இடையில் விவாகரத்து நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றது. ஆனால் இவர்கள் இருவர் தரப்பில் இருந்தும் இதுவரை வாய் திறக்காததால் இந்த செய்திகள் இப்போதுவரை கிசுகிசுக்களாகவே உலா வருகின்றது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் இருவரும் சந்தித்துக் கொண்டது

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு: தமிழகம், புதுச்சேரியில் 16 இடங்களில் என்ஐஏ சோதனை

சென்னை/ திருச்சி: மக பிரமுகர் ராமலிங்கம் கொலை தொடர்பாக தமிழகம், புதுச்சேரியில் 16 இடங்களில் பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ பிரமுகர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்தவர் பாமக பிரமுகர் ராமலிங்கம். மத மாற்றத்தை தட்டிக் கேட்ட இவர் கடந்த 2019-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் தகவல்களை திரட்டும் வகையில், தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு … Read more

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு அளித்தது செல்லும்: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

புதுடெல்லி: பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த வகையில், அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துஉள்ளது. தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது, பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதுதொடர்பான தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, சென்னை உயர் … Read more