“பேச்சு சுதந்திரம் வரம்பு மீறாமல் இருக்க வேண்டும்” – சாட்டை துரைமுருகனுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

மதுரை: ‘பேச்சு சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது தான். அதை வரம்பு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பேச்சு சுதந்திரம் வரம்பு மீறுவதை ஏற்க முடியாது’ என சாட்டை துரைமுருகனுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. திருச்சியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசும் போது ஆதிதிராவிட சமூக மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக என் மீது திருச்சி … Read more

வயநாடு நிலச்சரிவில் இதுவரை 295 பேர் பலி: 1,500+ மீட்பு; 200 பேரின் கதி என்ன? – முழு விவரம்

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர். இதைத் தொடர்ந்து தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், கேரள போலீஸார், தீயணைப்பு படையினர் ஆகியோருடன் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய … Read more

நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்ற குஜராத் மாணவி 12 ஆம் வகுப்பில் ஃபெயில்

அகமதாபாத் நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்ற குஜராத் மாணவி ஒருவர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாததால் மருத்துவக் கல்லூரியில் சேர முடிய்வில்லை சமீபத்தில் மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில், ‘எனக்கு தெரிந்த குஜராத் மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண்தான் பெற்றார். அகமதிப்பீட்டில் (இன்டர்னல்) பெற்ற 20 மதிப்பெண்களையும் சேர்த்து 21 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தார். ஆனால், இப்போது நீட் … Read more

80 வயசு ஆகிடுச்சு.. டெல்லி கணேஷுக்கு நடைபெற்ற சதாபிஷேக விழா.. மனைவியோடு செம மாஸ் போஸ்!

சென்னை: 1944ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி பிறந்த நடிகர் டெல்லி கணேஷ் இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சதாபிஷேக விழா புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் இருந்து யூடியூப் காலம் வரை பல படங்களிலும் குறும்படங்களிலும் நடித்துள்ள திறமையான நடிகர் டெல்லி கணேஷுக்கு ஏகப்பட்ட

'வயநாடு மக்களுக்கு உதவ நான் கடமைப்பட்டுள்ளேன்' – ராகுல்காந்தி

வயநாடு, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மக்களைவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி பார்வையிட்டார். பின்னர், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல் கூறினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது; “என் தந்தையை இழந்தபோது எவ்வளவு துக்கமடைந்தேனோ அதே துக்கத்தில்தான் இப்போது இருக்கிறேன். இந்த துயரமான நேரத்தில் மக்களுடன் இருப்பது மிகவும் அவசியம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வந்து சேருவதை உறுதி செய்ய வேண்டும். வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. … Read more

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: ராகுல் – பண்ட் இருவரில் விக்கெட் கீப்பர் யார்? ரோகித் பேட்டி

கொழும்பு, இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பின் ரோகித் சர்மா மற்றும் … Read more

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துங்கள்; ஈரான் தலைவர் அதிரடி உத்தரவு

தெஹ்ரான், ஈரான் அதிபர் மசூத் பெஜஷ்கியான் பதவியேற்பு நிகழ்ச்சி கடந்த செவ்வாய் கிழமை காலையில் நடந்தது. இதில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சிக்கு பின், ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமினியை சந்தித்து பேசினார். அதன்பின்னர், ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இது ஈரானை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில், ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமினி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தும்படி தன்னுடைய … Read more

Wayanad: 190 அடி நீளம், 24 டன் எடையில் ஆற்றின் குறுக்கே பாலம்; உலகப்போர் யுக்தியைக் கையாண்ட ராணுவம்!

நாட்டையே சோகத்தில் மூழ்கடித்திருக்கும் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு, மூன்று நாள்கள் ஆகிறது. மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 நெருங்கி, அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், அரசு பணியாளர்கள், தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தாலும், நிலச்சரிவில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான முண்டகை பகுதியை அணுக முடியாத நிலையே நீடித்து வந்தது. காரணம், … Read more

ரேஷனில் ஜூலை மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெறாதவர்கள் ஆகஸ்ட்டில் பெறலாம்: தமிழக அரசு 

சென்னை: கடந்த ஜூலை மாதம் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் இந்த மாதம் பெற்றுக்கொள்ளலாம் என உணவுப்பொருள் வழங்கல் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: “தமிழக அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30-க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25-க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது. ஜூன் மாதத்தில் துவரம் … Read more

“ராகுல் தைத்த செருப்பை கோடி ரூபாய் கொடுத்தாலும் விற்கமாட்டேன்” – உ.பி. தொழிலாளி நெகிழ்ச்சி

ரேபரேலி: ராகுல் காந்தி தைத்த செருப்பை பலரும் அதிக விலைக்கு கேட்பதாகவும், கோடி ரூபாய் கொடுத்தால் கூட அந்த காலணிகளை விற்கமாட்டேன் என்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த காலணி தைக்கும் தொழிலாளி ராம் சைத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த காலணி தைக்கும் ஏழை தொழிலாளி ராம் சைத். இவர் சுல்தான்பூரில் வசிக்கிறார். தனது ஏழ்மை நிலையை கூறி உதவி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தகவல் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து … Read more