Kamal haasan: வயநாடு நிலச்சரிவு.. சரியான நேரத்தில் கைக்கொடுத்த கமல்ஹாசன்.. ரூ.25 லட்சம் நிதியுதவி!

சென்னை: கேரளாவின் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 270ஐ தாண்டியுள்ளது. இந்த சம்பவத்தில் கேரள அரசு மற்றும் ராணுவத்தினர் இணைந்து போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு சார்பாக கேரளாவிற்கு 5 கோடி ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக

மாநில உரிமைகளை பறிக்கிறது மத்திய அரசு: கனிமொழி காட்டம்

புதுடெல்லி, மக்களவையில் தி.மு.க. எம்.பி., கனிமொழி பேசியதாவது: அறிவும் மானமும் மனிதருக்கு அழகு என்றார் தந்தை பெரியார். அறிவு என்பது கல்வியின் வழியாக பெறுவது. கல்வியின் வழியாக மானம், சுயமரியாதையை மக்கள் உணர்ந்து கொள்வர். இது நடந்தும்விடக் கூடாது. ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் என்றும் ஒடுக்கப்பட்டவர்களாக ,ஒதுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதால் எங்களுக்கு வழிவழியாக கல்வி மறுக்கப்பட்டு வருகிறது. அந்த வழியில்தான்- மறுக்கப்பட்ட நியாயங்களுக்கு போராடக் கூடிய சிலர் இன்று ஆட்சி நடத்தும் நிலையில் இருக்கிறோம். பாஜகவின் … Read more

நெஞ்சம் உடைந்த தருணம் – 2019 உலகக்கோப்பை தோல்வி குறித்து எம்.எஸ். தோனி உருக்கம்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. அதனால் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனை படைத்த தோனி சிறந்த பினிஷராகவும் போற்றப்படுகிறார். மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர். அந்த … Read more

வயநாடு நிலச்சரிவு; பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பிய புதின்

மாஸ்கோ, கேரளாவின் வயநாட்டில் கடந்த 2 நாட்களாக கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வடைந்து உள்ளது. நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், தொடர்ந்து மழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, தேடுதல் மற்றும் மீட்பு பணியை சிக்கலாக்கி உள்ளது. கேரளாவில் தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, போலீசார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்களும் நிலச்சரிவில் சிக்கியவர்களை … Read more

புங்குடுதீவில் அட்டைப் பண்ணை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

யாழ் புங்குடுதீவு பிரதேசத்தில் நீர்வேளாண்மை உற்பத்திகளுக்கு பொருத்தமானதென அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் கடலட்டை பண்ணை உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அமைச்சரின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற குறித்த சந்திப்பின்போது துறைசார் அதிகாரிகள் மற்றும் பயனாளிகளது கருத்துக்கள் கேட்டறியப்பட்டு ஆராயப்பட்டது. செயற்படுத்தலில் காணப்படும் இடர்பாடுகளை நிவர்த்தி செய்து பண்ணைகளை அமைப்பதற்கு விரைவான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏதுனிலைகளை உருவாக்கி கொடுக்குமாறு துறைசார் தரப்பினருக்கு அமைச்சரினால் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது திருமணத்தை மறைத்த தீயணைப்பு அலுவலர்; முதல் மனைவி கொடுத்த புகாரால் பணியிலிருந்து நீக்கம்!

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவர் வே.பிரபாகரன் (52). இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணை பிரபாகரன் திருமணம் செய்துள்ளார். அதன் மூலம் அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். தனது கணவர் பிரபாகரன் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட விவகாரம் முதல் மனைவிக்கு தெரியவர, இது தொடர்பாக அவர் தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இப்புகார் மீது … Read more

கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளிப்பு | வயநாடு நிலச்சரிவு

சென்னை: வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளார். கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இன்னும் 200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கிறார்கள். இந்தச் சூழலில் நாடு முழுவதும் அம்மக்களுக்கு தேவையான உதவிகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளார். … Read more

‘லெபனானுக்கு வர வேண்டாம்’ – இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

பெய்ரூட்: மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் லெபனானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என லெபனானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக லெபனானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்த பிராந்தியத்தில் தற்போது அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை இந்திய குடிமக்கள், லெபனானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதோடு, லெபனானில் உள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் லெபனானை விட்டு வெளியேறுமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏதேனும் ஒரு … Read more

“தமிழ்நாட்டில் கல்விக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கு தடையாய் இருப்பவர்களை அரசியல் களத்தில் பார்த்துக் கொள்வோம். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். லயோலா கல்லூரியின் நூற்றாண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசினார். “நூறாண்டுகளுக்கு முன்பாக கல்வி அனைவருக்கும் கிடைக்கவில்லை – கிடைக்கவில்லை என்று சொல்வதைவிட கொடுக்கவில்லை. ஆனால், இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இப்போது இருக்கிறது தமிழ்நாட்டில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் … Read more

நீட் தேர்வில் டாப் ரேங்க் பெற்ற குஜராத் மாணவி.. ஆனால் +2 தேர்வில் தோல்வி .. அதுவும் 2 முறை!

காந்திநகர்: நாடு முழுக்க இப்போது மருத்துவ கல்விக்கான இடங்கள் நீட் தேர்வு மூலமாகவே நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால், இந்தாண்டு நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் நீட் தேர்வில் 705 மார்க் பெற்ற குஜராத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், +2 தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். இது நாடு முழுக்க பெரும் Source Link