1000 கோடி கூட்டணிக்கு தயாராகும் அஜித்?.. கேஜிஎஃப் இயக்குநருடன் இணைகிறாரா.. ட்ரெண்டிங்கில் ஏகே64!

சென்னை: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளார். இதில் நடிகர் அஜித் மற்றும் அர்ஜுன் காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் இன்னும் சில தினங்களில் நிறைவு செய்ய உள்ள அஜித், வரும் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில்

வயநாடு நிலச்சரிவு: அவசர உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு

சென்னை, கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 293 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நிலச்சரிவு தொடர்பான விபரங்களை வழங்க தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. உதவி தேவைப்படுபவர்கள், தங்களது பெயர் மற்றும் இருப்பிடங்களை தெரிவிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள … Read more

முதலில் முட்டை வந்ததா? கோழி வந்ததா? வாக்குவாதத்தில் நண்பனை கொலை செய்த தொழிலாளி

ஜகார்த்தா, இந்தோனேசியா நாட்டில் ‘கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா’ என்று புதிரின் விவாதத்தில் நண்பரை கத்தியால் குத்தி கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 24 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று கைது செய்யப்பட்ட தொழிலாளி, தனது நண்பர் கதிர் மார்கஸை (வயது 47) மது அருந்த அழைத்துள்ளார். இருவரும் ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்தனர். ‘கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா’ என்று மார்கஸிடம் அவர் … Read more

வீழ்ந்த நாட்டை இரண்டு வருடத்தில் மீட்பது அதிசயம் – முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்த நாட்டை இரண்டு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில் ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்தது அதிசயமாகும். உலகில் இவ்வாறான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த எந்தவொரு நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் ஸ்திரத்தன்மையை அடையவில்லை என முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அறிவு, அனுபவம் மற்றும் உலகளாவிய தொடர்புகளின் அடிப்படையில் வீழ்ந்த நாட்டை மீட்கக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே … Read more

இந்த `5F' உங்ககிட்ட இருந்தா… உங்க வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்! | Secret Of Happiness

நாம் ஒவ்வொருவரும் கஷ்ட நஷ்டங்களை கடந்தும், ஏற்ற இறக்கங்களை சந்தித்தும்தான் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் அனைவரின் ஆசை ‘லைஃப் ஸ்மூத்தா போனா நல்லா இருக்கும்ல…’ என்பதுதான். நமது வாழ்க்கையை சம நிலையில் வைக்க ‘5F’ தேவைப்படுகிறது என்கிறார் பில்டிங் டாக்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஆதன் யோகி. ஆதன் யோகி “உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் 4 உத்திகள்…” பணத்தைப் பெருக்க எளிய வழிமுறை இதுதான்..! முதல் எஃப் ஃபிட்னஸ் (FITNESS), 2-வது எஃப் ஃபேமிலி (FAMILY), … Read more

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த வாய்ப்பில்லை: டான்டீ நிறுவனம் திட்டவட்டம் @ ஐகோர்ட்

மதுரை: “கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த வாய்ப்பில்லை” என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் டான்டீ நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை கோரியும், தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்தக் கோரியும், தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கக் கோரியும் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, வைகை ராஜன், பாபநாசம், சந்திரா … Read more

வியட்நாம் பிரதமர் உடன் பிரதமர் மோடி பேச்சு: பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி: வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் உடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையே விவசாயம், சட்டம், மருந்து உள்பட பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தியா வந்துள்ள வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், பிரதமர் நரேந்திர மோடியை இன்று (ஆக. 1) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு தலைவர்களும் வியட்நாமின் Nha Trang இல் உள்ள தொலைத்தொடர்பு பல்கலைக்கழகத்தில் ராணுவ மென்பொருள் பூங்காவை திறந்து … Read more

நடிகர் பிரசாந்திற்கு அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! காரணம் என்ன?

Latest News Actor Prasanth Fined For Traffic Violations : நடிகர் பிரசாந்திற்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்திருக்கின்றனர். இதற்கான காரணம் என்ன தெரியுமா?   

அரசு கொடுத்த குட் நியூஸ் – ஜூலை மாதம் ரேஷனில் பொருள் வாங்கலையா… கவலை வேண்டாம்!

Ration Shop News: கடந்த ஜூலை மாதம் ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்களை வாங்காவிட்டால், ஜுலை மாத உணவுப் பொருள்களை இந்த ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உதவும்… கூகுள் மேம்ஸின் லைவ் ட்ராபிக் அப்டேட்ஸ் அம்சம்..!

நாம் பயணம் மேற்கொள்ளும் போது, வழித்தடம் பற்றிய தகவல்களை அறிய, அருகில் இருக்கும் கடைகள் அல்லது சாலையில் செல்லும் நபர்களிடம், எப்படி செல்ல வேண்டும் என்று வழி கேட்போம். ஆனால் அந்தக் காலம் எல்லாம் போய்விட்டது. கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். கூகுள் மேப்ஸ் உதவியுடன் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். அவ்வப்போது கூகுள் தவறான வழி காட்டுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், கூகுள் மேப்ஸ் (Google Maps), பொதுவாக சிறந்து வழிகாட்டியாகவே செயல்பட்டு வருகிறது. கூகுள் மேம்ஸ் … Read more