\"ஒரே ஒரு தாக்குதல்..\" பற்றி எரியும் மத்திய கிழக்கு.. பின்னணியில் அமெரிக்கா? பகீர் கிளப்பும் ஈரான்

தெஹ்ரான்: ஈரான் நாட்டில் இருந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த ஹனியே படுகொலைக்கு பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் சூளுரைத்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் கடந்த சில மாதங்களாக மீண்டும் பதற்றமான சூழல் Source Link

கல்யாணத்துக்கு முன்னாடியே.. மருமகளை கவனிக்கும் மாமியார்.. ஜான்வி கபூருக்கு ஜாலி தான்!

மும்பை: தயாரிப்பாளர் போனி கபூருக்கும் ஸ்ரீதேவிக்கும் பிறந்த மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட் முதல் டோலிவுட் வரை நடித்து வருகிறார். தடக் படத்தின் மூலம் 2018ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார் ஜான்வி கபூர். ஸ்ரீதேவி உயிரோடு இருந்த வரை தனது மகள்களை நடிகைகளாக மாற்றவில்லை. அம்மாவின் மறைவுக்கு பிறகு ஜான்வி கபூர் மற்றும் அவரது தங்கை

ஜனாதிபதி நிதியத்தின் ஆகஸ்ட் மாத புலமைப்பரிசில் தொகை இன்று புலமைப்பரிசில் பெறுபவர்களின் கணக்குகளுக்கு நேரடியாக வைப்புச் செய்யப்படும்

வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பு செய்யப்பட்டமை குறித்து புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கு குறுஞ்செய்தி (SMS). ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் புலமைப்பரிசில் திட்டங்களின் கீழ் தகுதி பெற்ற புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கான 2024 ஆகஸ்ட் மாதத்திற்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு இன்று (01) புலமைப்பரிசில் பெறுபவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வைப்புச் செய்யப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் வங்கிகளில் வைப்பு செய்யப்படும் போது, புலமைப்பரிசில் பெறுபவர்கள் அனைவருக்கும் இது குறித்து குறுஞ்செய்தி (SMS) மூலம் தெரிவிக்கப்படும். 2022/2023 க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி … Read more

`SC, ST பிரிவில் உள் இட ஒதுக்கீடு வழங்க தடை இல்லை' – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு… ஸ்டாலின் வரவேற்பு!

பட்டியலின (SC), பழங்குடியின (ST) சமூகத்தினரில் மிகவும் நலிவடைந்தவர்களை துணை வகைப்படுத்தி, அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என 7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பளித்திருக்கிறது. முன்னதாக, கடந்த 2004-ல் SC, ST பிரிவினரில் துணைப் பிரிவு உருவாக்குவதில் ஆந்திரப்பிரதேச அரசுக்கு எதிராக ஈ.வி.சின்னையா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 341-ன் கீழ் பட்டியலிடப்பட்ட சாதிகள் … Read more

‘திராவிட மாடல் பயணத்துக்கான அங்கீகாரம்’ – அருந்ததியர் உள்ஒதுக்கீடு தீர்ப்பு; தமிழக முதல்வர் பாராட்டு

சென்னை: “அருந்ததியர் சமுதாயத்துக்கான 3% உள்ஒதுக்கீட்டு சட்டத்தை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான … Read more

வயநாடு நிலச்சரிவு | பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் மட்டுமே உதவிகள் வழங்க முடியும்: கேரள முதல்வர்

திருவனந்தபுரம்: வயநாடு மாவட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் மட்டுமே உதவிகள் வழங்க முடியும் என்று கேரள முதல்வர் பினரயி விஜயன் தெரிவித்துள்ளார். வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280ஐ கடந்துள்ள நிலையில், முதல்வர் பினரயி விஜயன் தலைமையில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து பினரயி … Read more

ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது தெய்ஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

காசா: இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது தெய்ஃப் கொல்லப்பட்டார் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் பிணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு காரணமான ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா உள்ளிட்ட தலைவர்களை கொல்வோம் என … Read more

மீட்புப் பணிகளுக்காக புதிய ட்ரோன் கண்டுபிடிப்பு! மழைவெள்ள மீட்பில் உதவும் புத்தாக்கம்

மழை வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்ற வேண்டியிருக்கிறது. எதிர்பாராதவிதமாய் ஏற்படுவது தான் இயற்கை பேரிடர் என்றாலும், அதற்கான தயார்நிலையில் இருப்பது அவசியமாகிறது. அந்த வகையில், இந்தியாவில் மழைக்காலத்தில் ஏற்படும் சிக்கல்களின்போது உயிரைக் காப்பாற்ற வடிவமைக்கப்பட்ட அதிநவீன ITUS வாட்டர் ட்ரோனை இந்திய மீட்பு அகாடமி வெளியிட்டுள்ளது. தற்போது வயநாட்டில் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம், கேதார்நாத்தில் மேகவெடிப்பு என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயற்கைப் பேரிடர் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் வெளியாகியிருக்கும் … Read more

OMR சாலையின் முக்கிய மெட்ரோ ரயில் முனையமாக உருவெடுக்கும் சோழிங்கநல்லூர்…

சோழிங்கநல்லூர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பழைய மகாபலிபுரம் சாலையின் (ஓஎம்ஆர்) முக்கிய மெட்ரோ ரயில் முனையமாக மாற உள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் இன்டர்சேஞ்ச் நிலையமாக சோழிங்கநல்லூர் அமையவுள்ளது. மாதவரம் மில்க் காலனி முதல் – சிறுசேரி வரையிலான 3வது வழித்தடம் மற்றும் மாதவரம் மில்க் காலனி முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடம் ஆகியவை செயல்பாட்டுக்கு வரும் போது கந்தன்சாவடியை அடுத்த நேரு நகர் முதல் சிறுசேரி வரையில் OMRல் … Read more

நொடிகளில் எல்லாம் ஓவர்.. ஹமாஸ் ராணுவத்தின் முக்கிய தளபதி முகமது தைஃப் படுகொலை! இஸ்ரேல் அறிவிப்பு

காசா: கடந்தாண்டு இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைஃப் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் நடந்த வான்வழித் தாக்குதலில் முகமது தைஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனால் அங்கே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த பல மாதங்களாகவே மோதல் போக்கே நிலவி வருகிறது. Source Link