தங்க மனசுங்க.. வயநாடு நிலச்சரிவு.. ஓடோடி வந்து நிவாரண பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா!

சென்னை: கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள மாநில அரசு பொதுமக்களிடம் நன்கொடை கேட்டுள்ளது.

‘காஸா சிறுவர் நிதியத்திற்கு’ பங்களிப்பதற்கான சந்தர்ப்பம் ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவு

இனியும் பணம் வைப்புச் செய்ய வேண்டாம் என்று ஜனாதிபதி அலுவலகம் கோரிக்கை. இன, மத பேதமின்றி இத்திட்டத்துடன் கைகோர்த்த அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி அலுவலகம் நன்றி தெரிவிப்பு. பலஸ்தீனத்தின் காஸா பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் இராணுவ நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின் படி ஸ்தாபிக்கப்பட்ட ‘காஸா சிறுவர் நிதியத்திற்கு’ (Children of Gaza Fund) பங்களிப்பதற்கான அவகாசம் 2024 ஜூலை 31ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த ரமழான் நோன்பு … Read more

Delhi Rains: புதிய நாடாளுமன்றத்தில் ஒழுகிய மழைநீர்; பக்கெட்டில் பிடித்த ஊழியர்கள்; காங்., விமர்சனம்!

பா.ஜ.க அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றான புதிய நாடாளுமன்றக் கட்டுமானப் பணிகள் 971 கோடி ரூபாய் செலவில் நிறைவடைந்து, கடந்த ஆண்டு மே மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படாத நாடாளுமன்றத் திறப்பு விழாவை, செங்கோல் வைத்து பிரமாண்ட நிகழ்வாக அரங்கேற்றினார் பிரதமர் மோடி. இந்த நிலையில், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பெரும் மழை பெய்து வருகிறது. டெல்லியின் முக்கியப் பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. Paper leakage outside, water leakage … Read more

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் தங்கம் விலை ரூ.80 அதிகரித்து, பவுன் ரூ.51,440-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்.4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை,தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச.4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் … Read more

“வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்” – கேரள முதல்வர் பினராயி விஜயன்

வயநாடு: “வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கை ஏற்கனவே மத்திய அரசிடம் வைத்துள்ளோம். ஆனால், இன்னும் அறிவிக்கவில்லை. இதனை அறிவிக்க, எது தடையாக இருக்கும் என்பதை மத்திய அரசு தான் சொல்ல வேண்டும்.” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “இன்று அரசின் உயர்மட்ட கூட்டம் நடந்தது. அதன் பிறகு அனைத்துக் கட்சி … Read more

Squid Game 2 விரைவில் ரிலீஸ்! எந்த தேதியில் வெளியாகிறது தெரியுமா?

Latest News Squid Game 2 Release Date : உலகளவில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த Squid Game தொடரின் இரண்டாவது சீசன் விரைவில் வெளியாக இருக்கிறது. எப்போது தெரியுமா?   

குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது… தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

Kumari Ananthan: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு 2024ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது.

Kanguva Exclusive: விக்ரம் படத்தில் `Rolex' `கங்குவா'வில் சர்ப்ரைஸ் – ஆச்சர்ய என்ட்ரி

வருகிற அக்டோபர் 10ம் தேதியன்று சூர்யாவின் ‘கங்குவா’ திரைக்கு வருகிறது. படத்தின் வி.எஃப்.எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் இரவும் பகலுமாக புல்லட் வேகத்தில் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கின்றன. சிவா, சூர்யா, டி.எஸ்.பி. படத்தின் முதல் சிங்கிளான ‘ஃபயர் ஸாங்’ ஆக ‘ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே, மாய நெருப்பே, மலை நெருப்பே’ வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. கொடைக்கானல், ராஜமுந்திரியில் தீப்பந்தங்களின் வெளிச்சங்களிலேயே அந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் இப்படத்தில் திஷா பதானி, பாபி … Read more

டெலிஃபோட்டோ லென்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்குடன் தூள் கிளப்பும் மோட்டோரோலா எட்ஜ் 50

மோட்டோரோலா நிறுவனம், இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் குறைந்த மிட்ரேஞ்ச் பிரிவில் வருகிறது. எட்ஜ் 50 ஃப்யூஷனுக்கு மேலே உள்ள இந்த போன், 120 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி திரை, பிரத்யேக டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய டிரிபிள் கேமராக்கள், ஸ்னாப்டிராகன் சிப்செட் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பெரிய பேட்டரி கொண்டது. இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50  மோட்டோரோலா எட்ஜ் 50 தனி 8ஜிபி … Read more

காவல்துறை சார்பில் ரூ.47.5 கோடி செலவில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: காவல்துறை சார்பில் ரூ.47.5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை செயல்பாட்டுக்காக, காணொலி  வாயிலாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின்,    47 கோடியே 51 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 53 காவலர் குடியிருப்புகள், 6 காவல் நிலையக் கட்டடங்கள் & 2 காவல் துறை கட்டடங்கள் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழ்நாடுஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  காவல்துறை … Read more