அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் நியமன ஊழல்: சீமான் கண்டனம்

சென்னை: “அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டுவந்துள்ள அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் நியமன ஊழல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள ஊழல் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காமல், வழக்கம்போல குழு அமைத்து கிடப்பில்போட்டுள்ள திமுக அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டுவந்துள்ள அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் நியமன ஊழல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. … Read more

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வு

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. காணாமல்போன 225 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர். இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியில், 130 பேர் உயிரிழந்ததாக தெரியவந்தது. … Read more

Thug Life Update: கமல் மற்றும் சிம்பு ஷூட்டிங், டப்பிங் முடிந்ததா? படத்தின் ரிலீஸ் பிளான் என்ன?

கமல், மணிரத்னம், சிம்பு என மெகா கூட்டணி இணையும் `தக் லைஃப்’பின் டப்பிங் வேலை மும்முரமாக நடந்துவருகிறது. கமலும் சிம்புவும் தங்களது போர்ஷன் முழுவதையும் டப்பிங் பேசிவிட்டனர் என்கிறார்கள். இன்னொரு பக்கம் படம் இவ்வாண்டு டிசம்பரில் படம் திரைக்கு வருகிறது என்றும் தகவல் பரவிவருகிறது. படம் குறித்து விசாரித்ததில் சில அப்டேட்ஸ் இங்கே… மணிரத்னத்தின் ‘நாயகன்’ படம் வெளியாகி 37 ஆண்டுகள் ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம், கமல் இணையும் படம் ‘தக் லைஃப்’. இந்தப் படத்தில் கமலுடன், … Read more

நிலைகுலைந்த இந்திய வங்கிகள்! ஜூலை 31 சைபர் தாக்குதல் எதிரொலி! லேட்டஸ்ட் அப்டேட்!

நேற்று, புதன்கிழமை (ஜூலை 31) ஒரு தொழில்நுட்ப நிறுவனம் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலால் கிட்டத்தட்ட 300 இந்திய உள்ளூர் வங்கிகளில் சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள சிறிய வங்கிகளுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் நிறுவனமான சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் (C-Edge Technologies) மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India (SBI)) மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services (TCS)) ஆகிய … Read more

4 மாதங்களுக்கு பிறகு வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்தது…

சென்னை: நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான 19கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ.7.50 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக சமையல் எரிவாயு விலையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாத நிலையில், 4 மாதங்களாக  வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு வந்தத. நேற்று (ஜூலை 31) நிலவரப்படி, சென்னையில்  19 … Read more

ஹிஸ்புல்லா கமாண்டர் பலி.. லெபனானில் உள்ள இந்தியர்களுக்கு பறந்த முக்கிய எச்சரிக்கை! தூதரகம் அட்வைஸ்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் திடீரென நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் பலியானார். இதனையடுத்து அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. எனவே லெபனானில் உள்ள இந்தியர்களுக்கு, இந்திய தூதரகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. Source Link

தனுஷுக்கு அட்வான்ஸ் கொடுக்கும்போதே அதை பண்ணியிருக்கணும்.. தயாரிப்பாளர் பிரச்சனை.. சரத்குமார் பதில்!

சென்னை: விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகிறது. அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். மேலும், மறைந்த கேப்டன் விஜயகாந்த்தும் படத்தில் இடம்பெறுவார் என மில்டன் கூறியுள்ளார். மழை பிடிக்காத மனிதன் படம் ரிலீஸ் தொடர்பாக பிலிமிபீட்

தென்காசி: ஐந்தருவி பகுதியில் இறங்கிய காட்டுயானை – சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் தற்போது சீசன் களைக்கட்டி வருகிறது. ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கும் சீசனானது செப்டம்பர், அக்டோபர் வரையிலும் நீடிக்கும். இந்நிலையில் கடந்த சில நாள்களாகவே தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் நாளுக்கு நாள் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குற்றால அருவிகளில் அதிக நீர் வரத்தின் காரணமாக கடந்த … Read more

மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஆக.9-ம் தேதி தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது தொகுதியான சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் 748 மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை வழங்கினார். கல்லூரியில் 3 … Read more

வயநாடு நிலச்சரிவில் 1,500 பேர் பத்திரமாக மீட்பு: தாராளமாக நிதி வழங்க பினராயி விஜயன் வேண்டுகோள்

வயநாடு: பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 1,500 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வயநாட்டில் மீட்பு, நிவாரண பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு உணவு பொருட்களை கொண்டு செல்ல கடற்படை உதவி கோரப்பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் உட்பட 1,257 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் பிரேத பரிசோதனை வேகமாக நடைபெறுகிறது. நிலச்சரிவில் சிக்கிய 1,500-க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். 225 பேர் … Read more