`பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்த வேண்டும்!' – மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

இந்தியாவில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் வகையில், 2006-ல் மத்திய அரசால் குழந்தைத் திருமணம் தடைச் கொண்டுவரப்பட்டு, ஆண்களின் திருமண வயது 21-ஆகவும், பெண்களின் திருமண வயது 18-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. அதையடுத்து கடந்த 2021 இறுதியில் மத்திய அரசு, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் திருமண வயதை 21 ஆக நிர்ணயிக்க குழந்தைத் திருமணம் தடைச் சட்டம் 2006-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் இன்னும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. குழந்தைத் திருமணம் இத்தகைய சூழலில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி … Read more

வெள்ளி விழா காணும் மதுரை ராஜாஜி பூங்காவுக்கு 2கே கிட்ஸிடம் வரவேற்பு இல்லாதது ஏன்?

மதுரை: வெள்ளி விழா காணும் மதுரை ராஜாஜி பூங்கா நவீனப்படுத்தப்படாததால் 2கே கிட்ஸ் குழந்தைகளிடம் வரவேற்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரை காந்தி மியூசியம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ராஜாஜி பூங்கா நகரின் முக்கிய பொழுதுப்போக்கு இடங்களில் ஒன்றாக உள்ளது. வார இறுதி நாட்களில் குறைந்த செலவில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் உற்சாகமாக வந்து செல்லக் கூடிய இடமாக ராஜாஜி பூங்கா உள்ளது. சனி, ஞாயிறு தவிர, இந்த பூங்காவில் பள்ளி குழந்தைகள் சலுகை … Read more

“தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய வளர்ச்சிக்கு முன்னுரிமை” – ‘வந்தே பாரத்’ தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: தென்னிந்தியா மகத்தான திறமைகள், வளங்கள் மற்றும் வாய்ப்புகளின் பூமி. தமிழ்நாடு உள்பட ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் வளர்ச்சியே அரசின் முன்னுரிமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், நவீனமயமாக்கப்பட்டு வரும் இந்திய ரயில்வேயின் புதிய முகமாக வந்தே பாரத் ரயில்கள் திகழ்கின்றன என 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கிவைத்துக் கூறினார். மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை – … Read more

Radhika : கேரவனில் ரகசிய கேமரா..பயந்து பாேன ராதிகா சரத்குமார்! நடந்தது என்ன?

Radhika Sarathkumar Alleges Hidden Camera on Caravan : மலையாள திரையுலகில் கடந்த சில நாட்களாக பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்திருப்பதை தொடர்ந்து, ராதிகா சரத்குமார் கூறியுள்ள விஷயம் புயலை கிளப்பியிருக்கிறது.   

ஐபோன் முதல் சாம்சங் வரை… செப்டம்பரில் அறிமுகம் ஆகும் அசத்தல் போன்கள்

ஸ்மார்போன்கள் என்பது அத்தியாவசிய தேவையாக மாறிப்போன நிலையில், வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் புதிய வகை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.  கடன் வசதி, இஎம்ஐ வசதி போன்றவை காரணமாக, பிரீமியம் போன்கள் வாங்குபவர்களீன் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இரண்டு மூன்று வருடங்களில் ஸ்மார்ட்போன்களை மாற்றுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. செப்டெம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள் அந்த வகையில், புதிய மொபைலை வாங்க திட்டமிட்டிருந்தால், சற்று பொறுத்திருப்பது நல்லது. ஏனெனில் அடுத்த மாதம் ஒன்றல்ல … Read more

சவுக்கு சங்கா் மீது மீண்டும் குண்டா் சட்டம்: தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: சவுக்கு சங்கா் மீது மீண்டும் குண்டா் சட்டம் போடப்பட்டுள்ளதை எதிர்த்த தொடரப்பட்ட வழக்கில்,  தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 2ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரிக்கப்பட்ட வருகிறது. விசாரணையின்போது,  சவுக்கு சங்கா் மீது   ஏற்கனவே போடப்பட்ட குண்டர் சட்டத்தல் இருந்து ‘யூடியூபா்’ சவுக்கு சங்கரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்ட பிறகும் … Read more

தமன்னாவோட அம்மா எப்படி இருக்காரு பாருங்க.. சின்ன வயதிலேயே ‘காவாலா’ நடிகை கலக்குறாரே!

சென்னை: 34 வயதாகும் நடிகை தமன்னா இந்த ஆண்டு இறுதியில் விஜய் வர்மாவை திருமணம் செய்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தியதில் இருந்தே திருமண தேதியை சொல்லுங்க என சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை டார்ச்சர் செய்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படங்கள் மற்றும் வெப்சீரிஸ் என

தாராவி குடிசை புனரமைப்பு: அதானி குழுமம் ரூ.2000 கோடி முதலீடு; 6 மாதத்தில் கட்டுமானப்பணி…

மும்பை தாராவியில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை அகற்றிவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டும் திட்டம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை அதானி நிறுவனத்திடம் மாநில அரசு ஒப்படைத்தது. மும்பை தாராவி மறுசீரமைப்பு திட்டம்: குடிசைகளை கணக்கெடுக்கும் பணியை தொடங்கிய அதானி நிறுவனம்! தற்போது அதானி நிறுவனம் தாராவியில் உள்ள குடிசைகளை கணக்கெடுக்கும் பணியை தொடங்கி முழுவேகத்தில் நடத்தி வருகிறது. மாநில அரசுடன் அதானி நிறுவனம் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் … Read more

கலவரக்காரர்களாக மாறிய காவலர்கள்: திருச்சி கே.கே.நகரில் போலீஸார் நடத்திய ஒத்திகையால் பரபரப்பு

திருச்சி: திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் இன்று (ஆக.31) நடைபெற்ற கலவரத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்காக போலீஸ்காரர்கள் கலவரக்காரர்கள் போல வேடமிட்டு கலந்து கொண்டனர். திருச்சி மாநகரில் திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கு சட்டவிரோதமாக கூடும் கூட்டத்தை எப்படி கையாள்வது என்பது குறித்த ஒத்திகை (MOB operation) மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு முதலுதவி செய்வது உள்ளிட்ட ஒத்திகையானது திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது. … Read more

“பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும்” – பிரதமர் மோடி

புதுடெல்லி: பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகளில் எவ்வளவு விரைவாக முடிவுகள் எடுக்கப்படுகிறதோ, அந்த அளவுக்குப் பாதி மக்களுக்குப் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாடு டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி பி.ஆர்.கவாய், சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட் ரமணி, உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் … Read more