‘வேட்டையன்’ படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி! ட்ரெண்டாகும் பஞ்ச் டைலாக்..வைரல் வீடியாே..

Actor Rajinikanth Starts Dubbing For Vettaiyan : நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியிருக்கிறார். இது குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கும் வீடியாே இணையத்தில் வைரலாகி வருகிறது.   

ஐபிஎல் 2025 : ரோகித் சர்மா எடுக்கப்போகும் பெரிய முடிவை இப்போதே சொன்ன அஸ்வின்

IPL 2025 Ravichandran Ashwin : ஐபிஎல் 2025 தொடருக்கான ஏலம் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடக்க இருக்கிறது. இதனையொட்டி மொத்தம் இருக்கும் 10 ஐபிஎல் அணிகளும் எல்லாம் யாரை தக்க வைக்கலாம், யாரை அணியில் இருந்து நீக்கலாம் என்ற முடிவு குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து ஏறத்தாழ ஒரு பட்டியலை தயார் செய்து வைத்துவிட்டன. ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் பல பெரிய பிளேயர்களை இந்த முறை … Read more

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா, ஹுக்கா, போதை சாக்லெட் உள்பட ஏராளமான பொருட்கள் பறிமுதல்! காவல்துறை தகவல்…

சென்னை: காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் மற்றும் மாணவர் விடுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், கஞ்சா, ஹுக்கா, போதை சாக்லெட் உள்பட ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் 19 மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்களிடையே போதைபொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில்,  செங்கல்பட்டு பொத்தே காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம்  பல்கலைக்கழத்தைச்சேர்ந்த  தனியார் மாணவர் விடுதிகளில் இன்று காலை சுமார் 500க்கும் மேற்பட்ட  போலீஸார்  திடீர் சோதனை நடத்தினார். முன்னதாக, தனியார் … Read more

அமெரிக்காவில் ஸ்டாலின் பறக்கவிட்ட சிக்சர்.. கூகுள் நிறுவனத்துடன் டீல்.. சென்னைக்கு வருகிறது AI லேப்!

சான் பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாட்டில் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்காவில் கையெழுத்தாகி உள்ளன. கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 20 லட்சம் மாணவ மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 17 நாள் Source Link

வேட்டையன்: டப்பிங்கை தொடங்கிய ரஜினி.. இணையத்தில் வெளியான வீடியோ!

சென்னை: இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள வேட்டையன் படத்திற்கான டப்பிங்கை ரஜினிகாந்த் இன்று தொடங்கி உள்ளார். ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு  உள்ளது. இப்படத்தில், அசுரன், துணிவு ஆகிய படங்களில் நடித்த மஞ்சுவாரியர் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். ரஜினியின் 170வது படமாக உருவாகி

2-வது டெஸ்ட்: 196 ரன்களில் சுருண்ட இலங்கை.. வலுவான நிலையில் இங்கிலாந்து

லண்டன், இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில், 2-வது போட்டி நேற்று முன்தினம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 427 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்களும், கஸ் அட்கின்ஷன் 118 ரன்களும் அடித்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டுகள் … Read more

ஜெர்மனி: பஸ்சில் பயணிகளை கத்தியால் தாக்கிய பெண்; 5 பேர் காயம்

பெர்லின், ஜெர்மனி நாட்டின் வடக்கு ரைன்-வெஸ்ட்பேலியா என்ற நகரில் சீகன் என்ற இடத்தில் பஸ் ஒன்று 40 பயணிகளுடன் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, பஸ்சில் இருந்த பெண் ஒருவர் திடீரென எழுந்து சக பயணிகளை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து மற்ற பயணிகள் சேர்ந்து அந்த பெண்ணை பிடித்தனர். முதல்கட்ட விசாரணையில், அந்த பெண் ஜெர்மனியை … Read more

ரூ.38.40 லட்சத்தில் டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 RS விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் டுகாட்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் வெளியிட்டு இருக்கின்ற புதிய மல்டிஸ்டிராடா V4 ஆர்எஸ் மாடல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும் ஒரு சிறப்பு வாய்ந்த எடிசன் ஆகும். Desmosedici Stradle 1,103cc எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 12,250 நிமிட சுழற்சியில் 180 HP, 9,500 நிமிட சுழற்சியில் 118 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த அட்வென்ச்சர் மாடலில் கார்பன் ஃபைபர் பாகங்கள் கொடுக்கப்பட்டு 225 கிலோ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இரட்டை 330மிமீ டிஸ்க்குகளில் பிரெம்போ … Read more

Elon Musk: எக்ஸ் தளத்திற்குத் தடைவிதித்த பிரேசில் நீதிமன்றம் – சர்ச்சைக்குரிய பின்னணி என்ன?

“இனி எக்ஸ் வலைத்தளம் பிரேசிலில் இயங்காது. அங்கே எங்களின் அனைத்து சேவைகளையும் நிறுத்தப்போகிறோம்.” என்று எக்ஸ் சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது. டிவிட்டர் நிறுவனத்தை எப்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் வாங்கினாரோ, அப்போதிலிருந்தே டிவிட்டர் பேசுபொருளாகவே இருந்து வருகிறது. இதில் டிவிட்டரின் பெயரை ‘எக்ஸ்’ என்று மாற்றியதும் அடங்கும். தற்போது எக்ஸ் வலைத்தளம் பிரேசில் நாட்டில் இயங்காது என்று அந்நிறுவனம் கூறியது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. எக்ஸ் தளம் “பிரேசில் நாட்டுச் சட்டப்படி, பொய்யான … Read more

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கோரி திருச்சியில் செப்.7-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கட்டக்கோரி திருச்சியில் வரும் செப்.7-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஆறு, ஏரி, குளங்களை தூர் வாரி, நீர்நிலைகளின் மட்டம் உயர்த்தப்பட்டது. பல்வேறு தடுப்பணைகளை தரமாகவும், உறுதியாகவும் மக்கள் பயன்பாட்டுக்கு கட்டிக்கொடுத்தது; திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பாலங்களும், சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் வடிவில், … Read more