பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது வக்பு வாரிய மசோதா கூட்டுக் குழு

புதுடெல்லி: வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக அனைத்து தரப்பினரும் தங்களது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என வக்பு வாரிய சட்ட திருத்த மசோதவை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அழைப்பு விடுத் துள்ளது. வக்பு வாரிய சொத்துக்களை இணையதளம் மூலமாக பதிவுசெய்து சீர்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்காக வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் கடந்த 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் மத்திய வக்பு … Read more

தளபதி விஜய்யின் GOAT ப்ரீ புக்கிங்.. .. இத்தனை கோடி வசூலா?

The GOAT Movie Pre Booking : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தி கோட் படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது உலகம் முழுவதும் துவங்கியுள்ளது. 

ஆகஸ்டு மாத ரேஷன் வாங்காதவர்கள் செப்டம்பர் 5ந்தேதிக்குள் வாங்கிக்கொள்ளலாம்! அரசு அறிவிப்பு…

சென்னை:  ஆகஸ்டு  மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள்,  செப்டம்பர் மாதம், 5 ஆம் தேதிவரை அதற்கான பொருளை  பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சமீப காலமாக ரேசன் கடைகளில் பாமாயில், பருப்பு உள்பட சில பொருட்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். இதையடுத்து,  ரேசன் பொருட்களை வாங்காதவர்கள் மீண்டும் பெற்றுக்கொள்ளும் வகையில் உணவுபொருள் வழங்கல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில்,   பொது விநியோகத் … Read more

தாண்டவமாடும் வறட்சி.. பசியால் வாடும் மக்கள்.. யானைகளை கொல்ல திட்டம்.. எந்த நாட்டில் தெரியுமா?

விண்ட்ஹோக்: தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் பசியைப் போக்குவதற்காக யானை உள்ளிட்ட விலங்குகளைக் கொல்லத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்ந்து போன வேளாண் பயிர்கள், உயிரிழந்த கால்நடைகள் என வறட்சி கோரதாண்டவம் நாடு குறித்து தெரிந்து கொள்ளலாம். தென் ஆப்பிரிக்காவில் உள்ளது நமீபியா Source Link

அருணாச்சலம் படப்பிடிப்பில் நடந்த விஷயம்.. ரஜினிகாந்த் அதையெல்லாம் கண்டுக்க மாட்டார்.. ரம்பா நறுக்!

       சென்னை: ’அழகிய லைலா’ என திடீரென தென்னிந்திய ரசிகர்கள் நிகிலா விமலை கொண்டாடி வந்தாலும் நிஜமான ‘அழகிய லைலா’வான ரம்பாவை ரசிகர்கள் எந்த காலத்திலும் மறந்து விட மாட்டார்கள். வெளிநாட்டில் வசித்து வந்த நடிகை ரம்பா மீண்டும் சென்னைக்கு குடியேறி இருக்கும் நிலையில், மீண்டும் படங்களில் நடிக்கப் போகிறாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன்- டெல்லி கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, ஜெயலலிதா மறைவைத்தொடர்ந்து அ.தி.மு.க. பிளவு பட்டபோது, சசிகலா தலைமையிலான அணிக்கு கட்சியின் சின்னத்தை மீட்க, இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறி, டி.டி.வி.தினகரன், இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.1.3 கோடி மற்றும் சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவர் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி சிறப்பு … Read more

ஆஸ்திரேலிய தொடரில் பும்ராவை விட அவர்தான் ஆபத்தான பவுலர் – பரத் அருண்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவதற்காக பும்ராவுக்கு தற்போது முழுமையான ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல முகமது ஷமி … Read more

காசாவில் 3 நாள் போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல்

பாலஸ்தீனத்தின் காசா முனை ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டுவோம் என்ற சூளுரையுடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்புக்கும் இடையே, நீடித்து வரும் இந்த சண்டையில் இது வரை குழந்தைகள், பெண்கள் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வந்தாலும் இஸ்ரேல் அதை கண்டு கொள்ளவில்லை. காசாவில் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் … Read more

ராயல் என்ஃபீல்டின் புதிய கிளாசிக் 350 விலை நாளை அறிவிக்கப்படும்

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் பிரபலமான கிளாசிக் 350 மாடலின் விலை நாளை அறிவிக்கப்பட உள்ளது 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் பல்வேறு மாறுதல் செய்யப்பட்டு நிறங்கள் உட்பட கூடுதலான வசதிகள் பெற்று இருக்கின்றது. எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பைலட் விளக்கு, கிளஸ்டரில் கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மற்றும் டைப்-சி யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் ஆகியவற்றை புதிய கிளாசிக் 350 மாடலில் ஹெரிட்டேஜ் வகையில் மெட்ராஸ் ரெட், ஜோத்பூர் ப்ளூ என இரண்டு நிறங்கள், ஹெரிட்டேஜ் … Read more

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 31ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான … Read more