குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை – மருத்துவர் மீது வழக்குப்பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகேயுள்ள ஓர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது நர்சிங் மாணவி, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பயிற்சிபெற வந்திருக்கிறார். இந்த மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை மருத்துவராகப் பணியாற்றிவரும் பாபு என்பவர் நேற்று முன்தினம் மருத்துவமனையின் ஓர் அறையில் தனியாக இருந்த நர்சிங் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவரின் பிடியில் இருந்து தப்பி வெளியே ஓடிவந்த மாணவி, மருத்துவமனை ஊழியர்களிடம், இதுபற்றி கூறினார்.

மருத்துவர் பாபு

உடனடியாக, தனது பெற்றோரையும் தொடர்புகொண்டு மருத்துவரின் பாலியல் சீண்டல் குறித்து மாணவி தெரியப்படுத்தினார். விரைந்துசென்ற பெற்றோர், மகளை அழைத்துக்கொண்டு குடியாத்தம் நகரப் போலீஸ் நிலையம் சென்று புகாரளித்தனர். போலீஸாரின் விசாரணையில் மருத்துவர் அத்துமீறியது உறுதியானதையடுத்து, மருத்துவர் பாபு மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இதையடுத்து, தலைமறைவான மருத்துவர் பாபுவை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.