சென்னை: “2026ல் தனித்து போட்டியிடுகிறேன். 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமித்துவிட்டேன்” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: “இந்த ஃபார்முலா பந்தயம் யாருக்கானதாக இருக்க வேண்டும். நாங்கள் படிக்கும் காலத்தில் எல்லாம் ஓடுவதற்கு திடல் இல்லை, கைப்பந்து, இறகுப் பந்து, கால்பந்து எதுவும் விளையாட எங்களுக்கு வழியில்லை. இதைப் போல சிற்றூர்களில் இருக்கும் பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக மாற்றுவது என்பது சரி. ஆனால் இப்போது பார்முலா 1 பந்தயத்தில் கலந்து கொள்பவர்கள் எல்லாம் யார்? நம்மாட்கள் யாராவது ஓட்டுகிறார்களா?
இரண்டு மருத்துவமனைகள் இருக்கும் இடத்தில் இதனை வைத்திருக்கிறீர்கள். இது மேல்தட்டு மக்களுக்கான விளையாட்டு. அவ்வளவு போக்குவரத்து நெரிசலை உண்டுபண்ணி இதை நடத்த வேண்டுமா? சாலையெல்லாம் சவக்குழிகளாக உள்ளன. அதை முதலில் சரிசெய்யுங்கள்” இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
மேலும், 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சீமான், “2026ல் தனித்து போட்டியிடுகிறேன். இப்போதைக்கு 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமித்துவிட்டேன்” என்றார்.