30 கிமீ மைலேஜ் தரும் புதிய Maruti Dzire… மிக விரைவில் அறிமுகம்

New Generation Maruti Dzire Launch: நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, அதன் மிகவும் பிரபலமான செடான் காரான டிசைரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. மிகவும் பாதுகாப்பான வாகனமாக கருதப்படும் மாருதி டிசையர் மாடல் மிகவும் நம்பகமான கார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை புதிய காரில், அதன் வடிவமைப்பில் பல முக்கிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவது, மாருதி சுஸுகி டிசையர் காரின் 3வது தலைமுறை மாடல் ஆகும். இந்நிலையில், மாருதி டிசையர் காரின் 4வது தலைமுறை மாடலை அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார் அறிமுகம் குறித்து மாருதி சுசூகி நிறுவனத்திடம் இருந்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை என்றாலும், புதிய கார் செப்டம்பர் 15 அன்று அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல்கள் கசிந்துள்ளன. புதிய மாடலில் சிறப்பு அம்சம் குறித்து சில விஷயங்களை அறிந்து கொள்ளலாம்

காரின் செயல்திறனை பொறுத்தவரையில், புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரில், புதிய 1.2 லிட்டர் இஸட் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின், 25 கிமீ வரை மைலேஜ் தரும் என்று கூறப்படுகிறது. அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனம் இதில் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனையும் வழங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி டிசையர் காரின் சிஎன்ஜி மாடல்கள் ஒரு கிலோவிற்கு 30 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன. மைலேஜ் அடிப்படையில் இன்ஜின் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த இன்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். 

புதிய மாருதி டிசைர் காரில் உள்ளதாக கூறப்படும் சாத்தியமான அம்சங்கள்

1. ஹைபிரிஉட் தொழில்நுட்பம்

2. 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின்

3. 6 ஏர் பேக்குகள் (airbags)

4. ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (Anti lock braking system)

5.பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி விருப்பம் (Petrol and CNG option)

6.பிரண்ட் வீல் ட்ரைவ் ( Front wheel drive)

7. 4 பவர் விண்டோஸ் (power windows)

8. பிளாக் கேபின்

ADAS தொழில்நுட்பத்துடன் புதிய டிசையர் 

புதிய டிசையரில் பாதுகாப்பிற்காக, காரில் ADAS (Advanced Driving Assistance Systems) பாதுகாப்பு அம்சங்களைக் காணலாம். ஹைப்ரிட் தொழில்நுட்பம் முதல் முறையாக சேர்க்கப்படலாம். அடுத்த சில ஆண்டுகளில் மாருதி தனது அனைத்து கார்களையும் ஹைப்ரிட் மாடலாக தயார் செய்யும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதனால் கார்களின் விலையும் கூடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.