மாருதி சுசுகி நிறுவனத்தின் சிறிய ரக ஆல்டோ K10 மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ என இரு கார் மாடல்களின் விலையை குறைத்துள்ளது. குறிப்பாக ஆல்டோ கே 10 மாடலின் VXi விலை ரூபாய் 6,500 வரை குறைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த மாடலங்களில் எந்தவொரு விலை மாற்றங்களும் இல்லாமல் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் எனப்படுகின்ற பாதுகாப்பு சார்ந்த அம்சத்தை அனைத்து வேரியண்டிலும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
தொடர்ந்து இந்நிறுவனத்தின் சிறிய கார்களின் விற்பனைக்கு அடிமையாக பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த முடிவினை எடுத்து இருக்கலாம் என இந்நிறுவனம் என கருதப்படுகின்றது. மேலும் சில மாதங்களாகவே ட்ரீம் சீரியஸ் என்ற பெயரில் பல்வேறு ஆக்சஸரீஸ் சேர்க்கப்பட்டு விலையில் பெரிது மாறுதல்கள் இல்லாமல் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஆல்டோ கே 10 மாடலின் VXi விலை ரூபாய் 6,500 வரையும், எஸ்-பிரெஸ்ஸோ மாடலின் LXi விலை ரூபாய் 2,500 வரை குறைக்கப்பட்டுள்ளது.
1.0 லிட்டர் K10C பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 49 kW (66.621 PS) @ 5500 rpm மற்றும் 89 Nm @ 3500 rpm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டவை இணைக்கப்பட்டுள்ளது.