இந்திய அணிக்கு பெரிய பிரச்னை… சூர்யகுமார் யாதவிற்கு காயம் – மிஸ்ஸாகும் பல போட்டிகள்!

Suryakumar Yadav Injury: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனாக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். உலகின் நம்பர் டி20 பேட்டரான இவரை இந்திய அணி தற்போது டெஸ்ட் பக்கம் கொண்டு வரவும் முயற்சித்து வருகிறது. இந்திய டெஸ்ட் அணியில் தற்போது மிடில் ஆர்டர் பேட்டருக்கான தேடல் நீண்டுள்ளது. அந்த இடத்தில் சூர்யகுமார் யாதவிற்கும் (Suryakumar Yadav) ஒரு வாய்ப்பை வழங்க சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வழங்கி இருக்கிறார் எனலாம். 

முக்கியத்துவம் பெறும் உள்ளூர் தொடர்கள்

டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் உள்ளூர் சிவப்பு பந்து போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும் என தேர்வுக்குழு கூறியிருக்கிறது. இனி டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால், ரஞ்சி டிராபி, துலிப் டிராபி (Duleep trophy), புச்சிபாபு உள்ளிட்ட உள்ளூர் சிவப்பு பந்து போட்டிகளில் வீரர்கள் தொடர்ந்து விளையாட வேண்டியதாகி உள்ளது.

அந்த வகையில், வரும் செப். 5ஆம் தேதி தொடங்க இருக்கும் துலிப் டிராபி தொடரில் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் உள்ளிட்ட அனுபவ வீரர்களும் பங்கேற்கின்றனர். அதுமட்டுமின்றி, சூர்யகுமார் யாதவும், ஷ்ரேயாஸ் ஐயரும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் புச்சிபாபு தொடரில் மும்பை அணிக்காகவும் விளையாடினார்கள். 

சூர்யகுமார் யாதவுக்கு காயம்

புச்சிபாபு தொடரில் TNCA XI அணிக்கு எதிராக மும்பை அணி கோயம்புத்தூரில் மோதியது. அப்போது, கடைசி நாள் அன்று மும்பை அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதன்காரணமாக, வரும் செப். 5ஆம் தேதி தொடங்கும் துலிப் டிராபி தொடரின் முதல் சுற்று போட்டியில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது. 

தற்போது அவர் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். சூர்யகுமார் யாதவ் துலிப் டிராபி தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சி அணியில் இருக்கிறார். இந்த அணியில்தான் சாய் சுதர்சன், ரஜத் பட்டிதார், பாபா இந்திரஜித், உம்ரான் மாலிக், சந்தீப் வாரியர் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். இந்த சி அணி வரும் செப். 5ஆம் தேதி சுப்மான் கில் தலைமையிலான ஏ அணியுடன் ஆந்திராவின் அனந்தபூர் நகரில் மோதுகிறது. அதேநேரத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் அபிமன்யூ ஈஸ்வரனின் பி அணியும், ஷ்ரேயாஸ் ஐயரின் டி அணியும் மோத இருக்கின்றன. 

மிஸ்ஸாகும் பல போட்டிகள்

சூர்யகுமார் யாதவ் துலிப் டிராபியின் முதல் சுற்று போட்டிகள் மட்டுமின்றி மற்ற சுற்று போட்டிகளிலும் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை மட்டுமின்றி டி20 தொடரிலும் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.