பெங்களூரு பெங்களூரு காவல்துறை ஆணையரிடம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குறித்து மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. கடந்த மார்ச் மாதம் பெங்களூரு சதாசிவநகர் காவல் நிலையத்தில் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை தனது 17 வயது மகளுடன் நேரில் சந்தித்து உதவி கேட்டபோது, தனது மகளை அவர் தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். காவல்துறையினர் […]