புனரமைக்கப்பட்ட வவுனியா சபுமல்கஸ்கட ஸ்தூபியின் சிகரம் பாதுகாப்பு செயலாளரினால் திறந்து வைப்பு

வவுனியா, சபுமல்கஸ்கட ரஜமஹா விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபியின் சிகரத்தை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) திறந்து வைத்து மகா சங்கத்தினரிடம் கையளித்தார். ஜெனரல் குணரத்ன அவர்கள் வடமாகாண பிரதான சங்கநாயக்க. கல்கமுவ சாந்தபோதி நாயக்க தேரரின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

புனரமைக்கப்பட்டசபுமல்கஸ்கட ராஜ மகா விகாரை யுத்தத்தின் போது கைவிடப்பட்டஇருந்து அதன் பின் புனரமைக்கப்பட்ட பல பண்டைய விகாரைகள் ஒன்றாகும்.

புனரமைப்பு பணிகள் இராணுவம் (SLA) மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் (CSD) கல்கமுவ சாந்தபோதி நாயக்க தேரர் வழிகாட்டுதலின் கீழ் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வை யில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட பாதுகாப்பு செயலாளர் விகாரையின் ஆவாச கெய வில் பொருத்தப்பட்டிருந்த பெயர்பலகையை திறந்து வைத்து மஹஹ சங்கத்தினரின் உபயோகத்திட்கு கையளித்து வைத்தார்.

புரணத்திற்கமைய, புத்தரின் புனித தந்தம் திருகோணமலையில் உள்ள லங்காபட்டுன துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு அவ்வூர்வலம் அனுராதபுரம், சபுமல்கஸ்கட வழியாக ஊர்வலம் சென்றதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த புராதன புனித தளத்தின் புனரமைப்பு, பரோபகார மற்றும் பக்திமிக்க பௌத்தர்களின் தாராள பங்களிப்பினால் புனரமைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லும் போது, இவ்வாறான பல வரலாற்று தலங்கள் அழிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது. எனவே, வரலாற்றுச் சிறப்புமிக்க சபுமல்கஸ்கட ரஜமஹா விகாரையின் மறுசீரமைப்புப் பணிகள், பௌத்த பக்தர்களின் புனித யாத்திரைக்காக பௌத்த விகாரைகளை புனரமைப்பதற்காக இராணுவம் (SLA) மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் (CSD) இன் உழைப்பு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக மேற்கொள்ளப்பட்டது என இந்நிகழ்வில் உரையாற்றுகையில் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.

அனுராதபுரம் சதாஹிரு ஸ்தூபி, முலத்தீவு குருந்தி விகாரை, அம்பாறை தீகவாப்பிய ரஜமஹா விகாரை மற்றும் லாஹூகளை நீலகிரி ஸ்தூபி முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம்யின் பூரண பங்களிப்புடன் பூர்த்தி செய்யப்பட்ட அல்லது தற்போது நடைபெற்று வரும் புனரமைப்பு திட்டங்களில் முக்கியமானவை என பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார். மேலும், இவ்வாறான எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்கு முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பங்களிப்பு வழங்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினர், இராணுவ, பொலிஸ், CSD மற்றும், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.