இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப் படையின் 40ஆவது வீர நிறைவை முன்னிட்ட நிகழ்வு நேற்று (01) அதிரடிப் படைப் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றது.
சிரேஷ்ட உதவிப் பொலிஸ் மா அதிபர், விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் தலைமை மற்றும் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.
உதவிப் பொலிஸ் மா அதிபர் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி டி. டி. டி. கே. ஹெட்டிஆரச்சி யின் ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாட்டில் இவ் 40ஆண்டுப் பூர்த்தி விழா இடம்பெற்றது.
நாற்பது வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் டிக்கம் பிரதேசத்தில் விசேட அதிரடிப் படைக்குச் சொந்தமானவர்கள் நாட்டிற்காக தமது வாழ்க்கையைத் தியாகம் செய்தார்கள்.
அன்றிலிருந்து இன்று வரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் 464 பேரும், சிவில் சேவை பேரும் மேலும் 744பேரும் அங்கவீனமடைந்தனர். அந்த தியாக வீரர்களுக்காக வருடாந்தம் இவ்வைபவம் நடைபெற்று வருகின்றது.
இதன்போது சிரேஷ்ட உதவிப் பொலிஸ் மா அதிபர் (நிருவாகம்) லலித் திசாநாயக்கவினால் வீரர்களின் நினைவுத் தூபிக்கு மற்றும் இராணுவ வீரர் உபாலி சஹபந்து வின் சிலைக்கு மலர் வலயம் வைக்கப்பட்டதுடன் நிகழ்வில் இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களின் உறவினர்கள் என அஞ்சலி செலுத்தினர்.