பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிகை ஐஸ்வர்யா ராயைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதனை நிராகரிக்கும் வகையில் ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா, கணவர் அபிஷேக் பச்சன் என மூன்று பேரும் துபாய் விமான நிலையத்தில் இறங்கி விமான நிலைய பஸ்ஸில் ஏறிச்சென்ற வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.
முதலில் அபிஷேக் பச்சன் செல்கிறார். பின்னால் ஐஸ்வர்யா ராயும், மகள் ஆராத்யாவும் செல்கின்றனர். அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைவதற்காகத் துபாய் சென்றார்களா அல்லது விடுமுறையைக் கழிப்பதற்காக வந்தார்களா என்று தெரியவில்லை.
ஐஸ்வர்யா ராய் சிரித்த முகத்துடன் காணப்பட்டார். அவர்களின் வீடியோவை தொடர்ந்து இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தனது பங்களா ஒன்றைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது மகளுக்கு நடிகர் அமிதாப் பச்சன் எழுதிக்கொடுத்தார். அதன் பிறகு தான் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் இடையே கருத்து வேறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சொந்த வீட்டிலேயே ஐஸ்வர்யா தனியாக வசித்து வந்ததாகவும் செய்திகள் வெளியானது. மேலும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்தில் கூட ஐஸ்வர்யா ராய் தனது கணவருடன் சேர்ந்து வராமல் மகளுடன் வந்து கலந்து கொண்டார். கடந்த மாதம் 28ம் தேதி அமிதாப் பச்சன் குடும்பம் வெளிநாடு சென்று வந்தது. ஆனால் அதில் கூட ஐஸ்வர்யா ராய் இடம் பெறவில்லை.
இந்நிலையில்தான், இந்த விமான நிலைய வீடியோ வைரல் ஆகிவருகிறது.