BSNL வழங்கும் மலிவான பிராட்பேண்ட் பிளான்கள்… ராக்கெட் வேகத்தில் இணைய சேவை

இந்தியாவின் முக்கிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ்  ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தங்கள் மொபைல் கட்டணங்களை சராசரியாக 15 சதவீதம் அதிகரித்ததன் விளைவாக, பல மொபைல் சந்தாதாரர்கள்  BSNL நிறுவனத்திற்கு மாறுகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனமும் விரைவில் 4ஜி  நெட்வொர்க்கை வலுப்படுத்தி ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது.  நாட்டின் பல நகரங்கள் மற்றும் நகரங்களில் பிராட்பேண்ட் சேவைகளை பிஎஸ்என்எல் வழங்குகிறது.  பிஎஸ்என்எல் தனது மொபைல் மற்றும் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை நாடு முழுவதும்  விரிவுபடுத்தி வருகிறது. மேலும், பட்ஜெட்டில் BSNL நிறுவன மேம்பட்டிற்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்மாட்போனிற்கு தேவையான அடிப்படை இணைய வசதியைப் பெற, குறைந்த கட்டணத்துடன் தரமான சேவையை வழங்க நினைக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பக்கம் சாமனிய மக்கள் பலர் நகரத் தொடங்கியுள்ளனர்.இந்நிலையில், பிஎஸ்என்எல் சமீபத்தில் அதன் மலிவான கட்டணம் கொண்ட ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களின் வேக வரம்புகளை மேம்படுத்தியுள்ளது. பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் என்னும் BSNL நிறுவனம் அதன் ரூ.249, ரூ.299 மற்றும் ரூ.329 கட்டணங்கள் கொண்ட பிராட்பேண்ட் திட்டங்களுக்கான வேக வரம்பை அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

BSNL வழங்கும் மலிவு விலையில் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம் மாதம் ரூ.249  என்ற அளவில் தொடங்குகிறது. முன்னதாக, இந்த திட்டம் சந்தாதாரர்களுக்கு 10 Mbps வரை வேகத்தை வழங்கியது, ஆனால் இப்போது அது 25 Mbps வரை வேகத்தை வழங்கும். இதேபோல், மற்ற இரண்டு திட்டங்களான ரூ.299 மற்றும் ரூ.329 என்ற கட்டணத்திலான திட்டங்களும் , 25 எம்பிபிஎஸ் வேகத்தை வழங்கும். இது முன்பு முறையே 10 எம்பிபிஎஸ் மற்றும் 20 எம்பிபிஎஸ் என்ற அளவில் இருந்தது.

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.249 மற்றும் ரூ.299 திட்டங்களுக்கான இந்த சலுகை புதிய பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். கூடுதலாக, ரூ.329 திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் கிடைக்கிறது. செலவு குறைந்த ரீசார்ஜ் திட்டங்களுக்காக BSNL நிறுவனத்திற்கு மாற நீங்கள் நினைத்தால், உங்கள் நகரத்தில் BSNL நெட்வொர்க் எந்த நிலையில் உள்ளது என்பதைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.

BSNL வழங்கும் இந்தத் திட்டங்கள் நியாயமான பயன்பாட்டுக் கொள்கையுடன் (Fair Usage Policy – FUP) வருகின்றன. ரூ.249 திட்டத்தில் 10ஜிபி FUP என்ற வரம்பு செயல்படுத்தப்படும். ரூ.299 திட்டம் 20ஜிபி FUP வரம்பு இருக்கும். FUP வரம்பை கடந்த பிறகு, இந்தத் திட்டங்களுக்கான வேகம் 2 Mbps ஆகக் குறைக்கப்படும். இதேபோல், ரூ.329 திட்டம் 1000 ஜிபி FUP உடன் வருகிறது, மேலும் FUP நிலையை அடைந்த பிறகு வேகம் 4 Mbps ஆக குறைக்கப்படும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.