கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கிற ‘மெய்யழகன்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.
’96’ பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கிற இப்படம், இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கார்த்தியுடன் ஶ்ரீ திவ்யா, அரவிந்த்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
‘மெய்யழகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 31-ம் தேதி கோவையில் நடைபெற்றது. இந்த விழாவில் ‘கங்குவா’ திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு தொடர்பாக சூர்யா பேசிய காணொளி சமூக வலைதளப் பக்கங்களில் டாப் டிரெண்டிங்கில் இருக்கிறது. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன. இதில் ‘யாரோ இவன் யாரோ’, ‘போறேன் நான் போறேன்’ ஆகிய இரண்டு பாடல்களை கமல்ஹாசன் பாடியிருக்கிறார். இந்த இரண்டு பாடல்களையும் பாடலாசிரியர் உமா தேவி எழுதியிருக்கிறார். மென்மையான இசையுடன் இணைந்து வருகிற இவருடைய குரல், பாடல்களைத் தனித்துவமாக்கியிருக்கிறது.
Overwhelmed with gratitude! Huge thanks to Ulaganayagan @ikamalhaasan anna for lending his iconic voice to #Meiyazhagan‘s songs! His lilting tone has woven a spell of nostalgia that transports us to a world of emotions! Honored & humbled by your love and support, Anna/ Chitha.…
— Suriya Sivakumar (@Suriya_offl) September 1, 2024
இந்த நிலையில் நடிகர் சூர்யா, நடிகர் கமலுக்கு தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நன்றி கூறி பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், “மெய்யழகன் படத்தின் பாடலுக்கு உங்களுடைய தனித்துவமான குரலைக் கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி கமல் அண்ணா. உங்களுடைய அந்த மெல்லிய தொனி உணர்ச்சிகளின் உலகத்திற்கு அழைத்துச் சென்று நாஸ்டாலஜியாவாக உணர வைக்கும் மந்திரத்தைக் கொண்டது. உங்களுடைய இந்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி கமல் அண்ணா/சித்தா.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.