UPI பேமெண்ட்… இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க… பின்னாடி வருத்தப்படுவீங்க

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்ட நிலையில், இணையவழி பண பரிவர்த்தனை என்பது. கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் தளங்கள் நிதி பரிவர்த்தனைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் நிலையில், ரொக்க பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வது பெருமளவில் குறைந்து விட்டது. இந்தியாவில் செல்போன் மூலம் உடனுக்குடன் பணம் அனுப்பும் மின்னிலக்கச் சேவையான UPI பரிவர்த்தனைகள் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 37% அதிகரித்துள்ளதாக உலகளாவிய பணப் பரிவர்த்தனை மின்னிலக்க மையமான பே செக்யூர் தெரிவித்துள்ளது.

யுபிஐ பேமென்ட் முறை, நொடிப் பொழுதில் பணத்தை செலுத்துவதையும் பெறுவதையும் எளிதாகியுள்ளதால், சாமானியர்கள் முதல் வணிகர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஆன்லைன் பணபரிவர்த்தனைகளை (Online Payments) மேற்கொண்டு வருகின்றனர். எனினும், இதனால் மோசடிகளில் சிக்கி பணம் இழக்கும் அபாயமும் உண்டு என்பதை மறுக்க இயலாது. எனவே, UPI முறையில் கட்டணம் செலுத்தும் போது சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லையெனில் பெரும் இழப்பு ஏற்படலாம்.

UPI மூலம் பணம் செலுத்துவது மிகவும் எளிதானது, வசதியானது, என்றாலும், சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டால், உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இந்நிலையில், யுபிஐ முறையில் கட்டணம் செலுத்தும் போது நாம் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

பாதுகாப்பற்ற Wi-Fi நெட்வொர்க்குகளில் பணம் செலுத்தக் கூடாது

UPI கட்டணம் செலுத்தும் போது, ​​பொது வைஃபை நெட்வொர்க்கில் (Wifi Network) பணம் செலுத்தக் கூடாது என்பதை நினைவில் கொள்ளவும். பொது வைஃபை நெட்வொர்க்குகளில் பணம் செலுத்தும்போது கவனமாக இருக்கவும், ஏனெனில் இந்த நெட்வொர்க்குகள் பாதுகாப்பாக இல்லை. இதனால் பிற்காலத்தில் நீங்கள் சைபர் மோசடிக்கு ஆளாக நேரிடலாம்.

UPI பின் எண்ணை யாருடனும் பகிரக் கூடாது

உங்கள் UPI பின்னை (UPI PIN Number) எந்தச் சூழ்நிலையிலும் யாருடனும் பகிர வேண்டாம். UPI கட்டணம் செலுத்த UPI பின் எண்ணை உள்ளிட வேண்டும். PIN எண்ணை உள்ளிட்டவுடன் பணம் செலுத்தும் நடைமுறை நிறைவடைந்து, பணம் உங்கள் கணக்கில் இருந்து அனுப்பபட்ட நபரின் கணக்கிற்கு செல்லும். இது ATM PIN போன்றது. எனவே, இந்த தகவலை எவருடனேனும் பகிர்ந்து கொண்டால் மோசடிக்கு ஆளாக நேரிடலாம்.

யுபிஐ செயலியை புதுப்பிக்கவும்

நம்மில் பலருக்கும் நாம் பயன்படுத்தும் UPI செயலியை அப்டேட் செய்யும் பழக்கம் இருப்பதில்லை. புதுப்பிப்புகளில் பாதுகாப்பு மேம்பாடுகள் மற்றும் புதிய அம்சங்கள் அடங்கும் என்பதால், UPI செயலியை எப்போதும் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பித்துக்கொள்ளவும். அதே போல் உங்கள் ஸ்மார்ட்ஃபோன் மென்பொருளையும் புதுப்பித்து கொள்வது அவசியம். இது பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும்.

பரிவர்த்தனை விவரங்களை கவனமாகப் படிக்க வேண்டும்

பணம் செலுத்துவதற்கு முன், யுபிஐ கணக்கு விபரம், அனுப்பப்படும் தொகை போன்ற பரிவர்த்தனை விவரங்களைக் கவனமாகப் படித்து, சரியான தொகையை சரியான நபருக்குச் செலுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். தவறான நபருக்கு பணம் செலுத்தினால், பணத்தை திரும்பப் பெறுவது கடினம்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.