மலையக பெருந்தோட்ட சமூகத்தை முழுமையாக நாட்டின் விரிவான சமூகப்; பொருளாதாரக் கட்டமைப்பில் இணைத்துக் கொள்வதற்கான அரசின் அர்ப்பணிப்பை வெற்றியடையச் செய்வதற்கு இயலச் செய்யும் வகையில் அரச முயற்சிகளை வழிநடாத்துவதற்கான அடிப்படை ஆவணமான மலையகப் பெருந்தோட்ட சமூகத்திற்கான பட்டயம் வரைவாக்கம் செய்யப்பட்டு அமைச்சரவையினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மலையகச் சமூகம் தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருகின்ற சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கும், இலங்கையில் அவர்களுக்கு சமநியாயமான சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு இயலுமை கிட்டும் எள்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பாக நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
03. இலங்கையின் மலையகப் பெருந்தோட்ட சமூகத்திற்கான பட்டயம்
மலையக பெருந்தோட்ட சமூகத்தை முழுமையாக நாட்டின் விரிவான சமூகப்; பொருளாதாரக் கட்டமைப்பில் இணைத்துக் கொள்வதற்கான அரசின் அர்ப்பணிப்பை வெற்றியடையச் செய்வதற்கு இயலச் செய்யும் வகையில் அரச முயற்சிகளை வழிநடாத்துவதற்கான அடிப்படை ஆவணமான மலையகப் பெருந்தோட்ட சமூகத்திற்கான பட்டயம் வரைவாக்கம் செய்யப்பட்டுள்ளது. குறித்த பட்டயத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மலையகச் சமூகம் தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருகின்ற சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கும், இலங்கையில் அவர்களுக்கு சமநியாயமான சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு இயலுமை கிட்டும். அதற்கமைய, இலங்கையின் மலையகப் பெருந்தோட்ட சமூகத்துக்கான பட்டயத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.