தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்..

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை (04) ஆரம்பமாகி செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 4 ஆம் திகதி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மேலதிக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்;டுள்ளது.

இம்முறை கொழும்பு மாவட்டத்தில் 27195, கம்பஹா மாவட்டத்தில் 52486, களுத்துறை மாவட்டத்தில் 37361, காலி மாவட்டத்தில் 41436, மாத்தறை மாவட்டத்தில் 30882 மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 22167 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளக்கூடிய தபால் வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 712319 ஆகும்.

தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் தபால் வாக்களிப்பில் கலந்து கொண்டு வாக்களிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.