‘தி கோட்’ திரைப்படத்தின் ஸ்பெஷலாக நடிகர் பிரேம்ஜியை சந்தித்தோம். அவர் நம்மிடம் பல சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது,
“நான் படத்தை ஏழு, எட்டு தடவ பார்த்துட்டேன். படத்துல எனக்கு சினேகாவோட தம்பி கேரக்டர். என் லைஃப்ல அதிகமா நேரத்தை நான் யுவனோடத்தான் செலவழிச்சிருக்கேன். யுவன் கிட்ட வேலைப் பார்த்து நிறைய விஷயம் கத்துக்கிட்டது பெரிய பாக்கியம்ன்’னு தான் சொல்ல முடியும். என்னோட மியூசிக்கல் குரு யுவன்தான். நா கேப்டனை ரொம்ப சின்ன வயசுல பாத்துருக்கேன். அப்பாக்கூட கோயில் காளைன்னு ஒரு படத்துல நடிச்சிருக்காங்க. பெரியப்பா வீட்டுக்கு அடிக்கடி கேப்டன் வருவாங்க. சின்ன வயசுல கேப்டன் முன்னாடி நானும் யுவனும் கேப்டன் பாட்டைப் போட்டு டான்ஸ்லாம் ஆடி காமிச்சிருக்கோம்.” என்றார்.
இன்டர்வியூவை முழுமையாகக் காண, லிங்க்கை கிளிக் செய்யவும்!