இப்போதிருக்கும் இந்திய இளைஞர்களின் பெரும்பாலானோரின் பக்கெட் லிஸ்டில் இடம்பெற்றிருப்பது ‘வெளிநாட்டு டூர்’. ஆம்…சமீப காலமாக இந்திய இளைஞர்கள் வெளிநாட்டிற்கு டூர் செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இப்படி அவர்கள், ‘டூர் செல்ல விரும்பும் நாடுகள் எவை?’ என்று உங்களால் யூகிக்க முடிக்கிறதா? ‘அமெரிக்கா’, ‘லண்டன்’, ‘பாரீஸ்’ ஆகியவை உங்கள் பதில் என்றால், ‘அது தான் இல்லை’. சமீபத்தில் ‘MakeMyTrip’ என்ற ஆன்லைன் டிராவல் கம்பெனி, ஜூன் 2023 – மே 2024-ற்கான ‘இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு பயணிப்பது எப்படி?’ என்ற அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் தகவல் படி, இந்த நடப்பாண்டில் இந்தியர்கள் வெளிநாடு செல்ல ஒரு மாதத்திற்கு ரூ.12,500 கோடி செலவிட்டுள்ளனர்.
டாப் 10 நாடுகள்
டிராவல் கம்பெனி அறிக்கையின் படி, டாப் 10 இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகள் ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது. அவை…
-
கஜகஜஸ்தான்
-
அஜர்பைஜன்
-
பூட்டான்
-
ஹாங்காங்
-
ஶ்ரீலங்கா
-
ஜப்பான்
-
மலேசியா
-
நேபாளம்
-
ரஷ்யா
-
சவுதி அரேபியா
ஏன் இந்த நாடுகள்?
கஜகஜஸ்தான், அஜர்பைஜன், ஶ்ரீலங்கா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து செல்ல விசா தேவையில்லை. மற்ற நாடுகளுக்கு செல்ல விசா எடுக்கும் நடைமுறை மிக மிக எளிதாக உள்ளது.
கஜகஜஸ்தான், அஜர்பைஜன்…
2022-ம் ஆண்டு கஜகஜஸ்தான் அரசு, 14 நாள்கள் ஃப்ரீ-விசா நடைமுறையை அறிமுகப்படுத்தியதிலிருந்து அந்த நாட்டுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2023-ம் ஆண்டு மட்டும் 28,300 இந்தியர்கள் கஜகஜஸ்தானுக்கு சென்றுள்ளனர்.
அஜர்பைஜன் நாட்டு சுற்றுலா வாரியத்தின் படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை இந்தியாவில் இருந்து 1.4 லட்சம் பேர் அந்நாட்டிற்கு சென்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2.7 மடங்கு அதிகம் ஆகும்.
இதில் உங்களுக்கு எந்த நாட்டிற்கு சுற்றுலா செல்ல வேண்டும் மக்களே? கமெண்ட் பண்ணுங்க…
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41