கொழும்பு மாவட்டத்தில் 2024 ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளன…

கொழும்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான பிரசன்ன கிணிகே கொழும்பு மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு (04) இடம்பெற்றது.

இதன் போது உரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர்;

தற்போது கொழும்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி காலை 7 மணியிலிருந்து நான்கு மணி வரை தேர்தலுக்கு அவசியமான சகல அதிகாரிகளையும் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்துவதற்காக பயிற்றுவிக்கும் செயற்பாடு நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.

அத்துடன் சகல தொடர்பாடல் செயல்பாடுகளும் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

நேர்மையானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக தபால் மூல வாக்குகளை பயன்படுத்துவதற்காக தபால் வாக்காளர்களுக்கு அதற்கான வாய்ப்பு இன்று (04) அளிக்கப்பட்டுள்ளது இதற்காக பாதுகாப்புப் பிரிவினர், தேர்தல் அலுவலக அதிகாரிகள் அத்துடன் மாவட்ட செயலக அதிகாரிகள் தமது தபால் மூல வாக்குகளை பயன்படுத்துகிறார்கள். 05 மற்றும் 06ஆம் திகதி இரண்டு நாட்களும் ஏனைய அரசாங்க ஊழியர்களும் 35,636 பேர் தமது வாக்குகளை பயன்படுத்துவார்கள்.

வாக்களிப்பு நிலையங்கள் 1204 இல் 17,65, 331 பேர் தேர்தலில் தமது வாக்குகளை பயன்படுத்துவதற்காக தகுதி பெற்றுள்ளார்கள். அதன்படி தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் நிறைவுக்கு வந்துள்ளது.

வாக்குகளை எண்ணுவதற்காக கொழும்பு மாவட்டத்தில் ரோயல் கல்லூரி, கொழும்பு டி எஸ் சேனாநாயக்க கல்லூரி ஆகியவை தெரிவு செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகள் இரண்டிலும் அவசியமான சகல அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளன. 165 நிலையங்களில் வாக்கெண்ணும் செயற்பாடுகள் இடம்பெறும். நள்ளிரவிற்கு முன்னராவது வாக்குகளை எண்ண பதிவுகளை வெளியிட முடியும் என எதிர்பார்க்கின்றோம்.

தபால் மூலம் வாக்காளர்கள் 35, 636 கொழும்பு மாவட்டத்தில் காணப்படுவதுடன் நான்காம் திகதி பொலிஸ் அதிகாரிகளுக்கு வாக்களிக்க முடியாது போகுமாயின் செப்டம்பர் ஆறாம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர யாரேனும் அதிகாரி ஒருவர் தமது தபால் மூல வாக்கு நான்கு, ஐந்து, ஆறாம் திகதிகளில் செலுத்துவதற்கு முடியாது தவறவிட்டால் இதற்காக 11 மற்றும் 12ம் திகதிகளில் தேர்தல் அலுவலகங்களில் தமது வாக்குகளை பதிவு செய்யலாம்.

தற்போது சகல வாக்களிப்பு நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடி படையினரின் பாதுகாப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் தேர்தல் மத்திய நிலையங்களிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தவிர வாக்குகளை என்னும் மத்திய நிலையங்களிலும் அவசியமான பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு அதிரடிப்படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை தேர்தல் முறைப்பாடுகள் 56 கிடைக்கப் பெற்றுள்ளன. விசேடமாக வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்படவில்லை.

சாதாரண சட்ட விதிகளை மீறியமை தொடர்பாக மாத்திரமே இந்த முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன. எனவே நேர்மையானதும் சுதந்திரமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு எம்மால் முடியும் என தான் எதிர்பார்ப்பதாக கொழும்பு மாவட்ட செயலாளரும், கொழும்பு மாவட்ட தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான பிரசன்ன கிணிகே குறிப்பிட்டார்.

தேர்தல் விடயங்களுக்காக 20,000 அதிகமான அரசாங்க ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் மத்திய நிலையங்களில் பணியாற்றுதல் மற்றும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் பாதுகாப்பு சேவைகளுக்காகவும் அதிகமானவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எவ்வித பக்க சார்பும் இல்லாமல் தேர்தல் நடவடிக்கைகள் சுமூகமாக இடம்பெறுவதற்கான சகல ஏற்பாடுகளுமே இத்தேர்தலுக்காக எதிர் பார்க்கப்படுகிறது.

இது தவிர அனைத்து தேவைப்பாடுகளுக்காக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஏற்படுத்தப்பட்டு தேர்தலின் போது எந்தவிதமான அனர்த்த நிகழ்வுகள் ஏற்பட்டாலும் தேர்தல் மத்திய நிலையங்களை எவ்வாறு செயல்படுத்துவது, அனர்த்தம் ஏற்படக்கூடியதாக எதிர்பார்க்கப்படும் சகல இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன, இது தொடர்பாக சகல பிரதேச செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சீதாவக, கடுவலை, போன்ற பிரதேச செயலாளர் அலுவலகங்களில் சில மத்திய நிலையங்கள் அனர்த்தம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றிலும் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கிணிகே இதன் போது தெளிவு படுத்தினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.