தீபாவளி ரேஸில் மோதும் Amaran – Bloody Beggar… பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யம் என்ன தெரியுமா?!

‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’ ஆகிய படங்களை இயக்கி, இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகத் திகழ்பவர் நெல்சன் திலிப்குமார். விஜய் டிவியில் உதவி இயக்குனராகத்  தன்  பயணத்தைத் தொடங்க்கி, பிறகு பல ஹிட் ஷோக்களை அங்கு இயக்கியிருக்கிறார். ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியை இவர் இயக்கிய போதுதான் அதில் நடிகர் சிம்பு கலந்து கொள்ள, அவருக்கும் நடிகர் பப்லுவுக்கும் பிரச்னை உண்டாகி, அந்தச் சமயத்தில் அது பரபரப்பாக பேசப்பட்டது நினைவிருக்கலாம்.

இயக்குநர் நெல்சன்

பிக்பாஸ் தொடங்கப்பட்ட போது அதன் முதல் சீசனையும் இயக்கியிருந்தார். இயக்குனராகச் சாதித்த நெல்சன் சில மாதங்களுக்கு முன் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். ‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, தனது முதல் படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். ‘ப்ளடி பெக்கர்’ எனப் பெயரிடபப்ட்டிருந்த இந்தப் படத்தில் கவின் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவிருப்பதாக தற்போது அறிவிப்பு வந்திருக்கிறது.

நெல்சன் விஜய் டிவியிலிருந்த போது அவருடன் அங்கு பணியாற்றியவர் ராஜ்குமார் பெரியசாமி. சேனலில் நெல்சனுக்கு இவர் ஒரு வருடம் ஜூனியர் என்கின்றனர். ஆயினும் இருவரும் நண்பர்களாகவே பழகியவர்களாம். ராஜ்குமாருமே  ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ முதலான சில நிகழ்ச்சிகளை அங்கு இயக்கி விட்டு சினிமாவுக்குள் வந்தார்.

நெல்சன்

‘ரங்கூன்’ என்கிற படத்தை இயக்கியவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க ‘அமரன்’ படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படமுமே வரும் தீபாவளி அன்றுதான் ரிலீசாகவிருக்கிறது.

சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி

விஜய் டிவியில் ஒன்றாகப் பணிபுரிந்து பழகிய இருவரின் படங்கள் ஓரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது என்பதுதான் இங்கு ஹைலைட். நெல்சன் தயாரிப்பாளராக களமிறங்க, ராஜ்குமார் டைரக்டராக ரேஸில் குதித்திருக்கிறார். இரு படத்தின் கதாநாயகர்களும் விஜய் டிவி மூலம் பெயர் பெற்றவர்கள் என தனியாக சொல்லி தெரிய வேண்டியது இல்லை.!

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41

Loading…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.