A/L மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியானது

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் results.exams.gov.lk இணையத்தளங்களுக்குச் சென்று பெறுபேறுகளைப் பார்வையிடலாம்; என பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பெறுபேறுகள் தொடர்பாக 0112 784 208 – 0112 784 537 – 0112 785 922 மற்றும் 1911 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.