ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பலரும் நடித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகவுள்ள படம் ` தி கோட்’
GOAT – மிரட்டல் காம்போ!
படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிற சூழலில், இந்த படத்தில் இணைந்திருக்கும் பிரபுதேவா – விஜய் காம்பினேஷன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருப்பதற்கு மற்றொரு காரணம் நடனம். GOAT திரைப்படத்தின் பாடல்கள் கலவையான விமர்சனத்தைப் பெற்றிருக்கிறது. ஆனால் திரையரங்குக்குள் செல்லும் ஒவ்வொருவரும் அந்தப் பாடலை ரசிக்கப்போவது உறுதி. திரையில் பார்க்கப்போவது இரண்டு ட்ராகன்களின் நடனமாச்சே! (Dance of Dragons).
Dance of Dragons:
விஜய்-பிரபுதேவா இணைந்து நடனமாடுவதைப் பார்ப்பது இதுமுதன்முறை அல்ல. போக்கிரி, வில்லு, ரௌடி ரத்தோர் படங்களில் இருவரும் சில நடனமாடியிருக்கின்றனர். விஜய்யும் பிரபுதேவாவும் தமிழ் சினிமாவின் இரண்டு சிறந்த டான்சர்கள் என்பதால் எப்போதும் இருவரையும் அதிகம் ஒப்பீடு செய்வது வழக்கம்.
.jfif.jpeg)
ஆனால் இந்த ஒப்பீடுகளைக் கடந்து இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். விஜய்யின் பாடல்களுக்கு நடனம் அமைத்திருப்பதோடு, விஜய்யை வைத்து இரண்டு படங்களையும் இயக்கியிருக்கிறார். கடந்த ஆண்டு விஜய்யுடனான நட்பு குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்த பிரபுதேவா, “விஜய் ரொம்ப ஸ்வீட் பெர்சன். ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப நல்லா பேசிக்குவோம். ஆனா அவங்க அவங்க லைஃப்ல ரொம்ப பிஸியா இருக்கோம்” எனப் பேசியிருப்பார்
மாஸான `போக்கரி’ பட விஜய்:
நடிகர் விஜய் மாஸ் ஹீரோவாக ஆக்ஷன் அவதாரம் எடுத்த காலகட்டத்தில், அசட்டுத்தனமான பாவனைகள் முதல் மிரட்டலான் பஞ்ச் டயலாக் வரை விஜய்யை முழுமையாகப் பயன்படுத்திய திரைப்படம் பிரபுதேவா இயக்கிய போக்கிரி.

‘ஆடுங்கடா என்ன சுத்தி’ என முதல் பாடலிலேயே விசில்கள் பறந்தன. இறுதிக்காட்சியில் ‘சத்யமூர்த்தி ஐபிஎஸ்’ என நாசர் உரக்கச் சொன்னபோது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். முதல் காட்சி முடியும்போதே விஜய் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத மாஸ் ஹீரோவாக உருவாகியிருந்தார்.
குறையாத அன்பு:
சில ஆண்டுகள் கழித்து இந்தியில் அக்ஷய்குமாரை வைத்து ரவுடி ரத்தோர் படத்தை எடுத்துக்கொண்டிருந்தார் பிரபுதேவா. அப்போது மற்றொரு படபிடிப்புக்காக அங்கு விஜய் வந்திருப்பது தெரிந்ததுமே அவருக்கு கால் செய்து “ஹிந்தியில ஒரு பாட்டு ஷூட் பண்றேன், நீங்க சின்ன கேமியோ வர முடியுமா” எனக் கேட்டிருக்கிறார். உடனே ஓகே சொல்லி நடனம் ஆடியிருக்கிறார் விஜய்.
போக்கிரி சம்பவத்துக்கும் ரவுடி ராத்தோர் சம்பவத்துக்கும் நடுவில், பிரகாஷ் ராஜ் விஜய்யை வைத்து `வில்லு’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

“தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, நடனத்தில் கிங் என்றால் அது விஜய்தான்” எனப் பெருந்தன்மையோடு வாழ்த்துவார் பிரபுதேவா மாஸ்டர்.
லியோ படத்தில் பிரபுதேவாவின் “கருகரு கருப்பாயி” பாடலுக்கு விஜய் நடனமாட அது வைரலானது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த நண்பர்கள் இணைந்து GOAT படத்தின் விசில்போடு பாடலில் நடனமாடியிருக்கிறார்கள்.
விஜய் – பிரபுதேவா காம்பினேஷில் உங்களுக்கு பிடித்த பாடல் எது என்பதைக் கமென்ட்டில் பதிவுகள்!